Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

என்னை கவர்ந்த பத்து பெண் சிங்கங்கள் (தொடர் பதிவு)

நம்மையும் ஒரு ஆளா மதிச்சி தொடர் பதிவு எழுத கூப்பிட்ட நம்ம சமையலில் அட்டகாசம் செய்யும் நம்ம ஜலீலா அக்காவிற்கு ஒரு 'ஓ' போடுங்க.
  
நிபந்தனைகள் :-

1. உங்களின் சொந்தக்காரர்களாக இருக்க கூடாது.,
2. வரிசை முக்கியம் இல்லை.,
3. ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,
4. இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் உள்ள நபர்களாக இருக்கவேண்டும்... 

1.  சமூக சேவை:   சரோஜினி நாயுடு 
          இந்தியாவின் ஹைதாராபாத் மாநிலத்தில் சரோஜினி நாயுடு அவர்கள் பிறந்தார்.  1915 முதல் 1918 ஆண்டுகளுக்கிடையில் அவர், இந்தியா முழுவதும், இளைய சமுதாயத்தினரின் நல்வாழ்வு, பணியாளர் நலன், பெண் கொடுமை மற்றும் தேசியப் பற்று குறித்து பல்வேறு சொற்பொழிவுகளை மேற்கொண்டார். யுனைட்டட் ப்ரொவின்சஸ் (தற்போது உத்தரப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது) ஆளுனராக பதவியேற்றார். இதன் வழியாக இந்தியாவின் முதல் பெண் ஆளுனரானார். மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் அவர் மரணமைடைந்தர்.





2.விண்வெளி வீராங்கனை:   கல்பனா சாவ்லா  



    இந்தியாவில் பிறந்து விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி இவரே. STS-107 என்ற கொலம்பியா விண்ணோடத்தில் பறந்து பூமிக்குத் திரும்பும் பொழுது, விண்கலம் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தார். கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக நியூயார்க் நகரிலுள்ள ஒரு வீதிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. 
3. இசை:  எம். எஸ். சுப்புலட்சுமி

மிக இளம் வயதிலேயே இசை கற்றுக்கொள்ளத் துவங்கிய இவர் தனது பத்தாவது வயதில் முதல் இசைப்பதிப்பை வெளியிட்டார். சுப்புலட்சுமி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார். இந்திய நாட்டின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதை பெற்றுள்ளார். 
4.தடகளம் : P.T. உஷா  
இந்தியா சார்பில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு அரை இறுதி வரை முன்னேறிய முதல் இந்தியர் ஆவார். இவர் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பல பதக்கங்களை நம் நாட்டிற்கு பெற்று தந்துள்ளார். மேலும் விவரம் தேவை பட்டால் 
http://www.ptusha.org இந்த தளத்திற்கு சென்று பார்த்து கொள்ளவும். 
    
5. அறிவியல் ஆராய்ச்சி : கீதா வரதன் 
  இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) முதல் பெண் தலைவராக பொறுப்பேற்றவர். மற்றும் இவர் ADRIN (Advanced Data Research Institute ) தலைமை பொறுப்பை வகித்தவர். 2008 ஆம் ஆண்டு நம் பாரத பிரதமர் டாக்டர் திரு. மன்மோகன் சிங் அவர்களிடம் இருந்து " ISRO METRIT AWARD-2008" என்ற விருதை பெற்றார்.
      

6. அரசியல் : டாக்டர் செல்வி. ஜெ. ஜெயலலிதா  
இவருடைய நிர்வாக திறன் என்னை மிகவும் கவர்ந்தது. இவர் கடந்த முறை ஆட்சியில் இருந்த போது தான் நம்முடைய அரசு அலுவலர்கள் ஒழுங்காக வேலை செய்தார்கள் என்று சொன்னால் மிகையாகாது. சென்னையில் இருந்த ரவுடிகளை ஒழித்தது, சந்தன கடத்தல் வீரப்பனை பிடித்தது போன்றவை என்னை கவர்ந்தது.
   
7. சினிமா :  சரோஜா தேவி 
இவருடைய நடிப்பு, அழகு, குழந்தை தனமான பேச்சு ஆகியவை எனக்கு மிகவும் பிடிக்கும் . இவர் நடித்த அன்பேவா படத்தை மிகவும் ரசித்து பார்த்திருக்கிறேன்.
  
8. வர்த்தகம் : இந்திரா நூயி 
பெப்சி கோ தலைவராக இருக்கிறார். உலகின் அதிகார மிக்க பெண்மணிகளில் ஒருவர் இவர். ஆண்கள் நிறைந்த இவ்வுலகில் தன்னுடைய கம்பெனியை வெற்றிகரமாக இயக்கி கொண்டிருக்கும் இவருடைய துணிச்சல் மிக்க நிர்வாக திறன் என்னை மிகவும் கவர்ந்தது  
9. பேச்சாளர் : பாரதி பாஸ்கர் 
என்னை கவர்ந்தவர்களுள் இவரும் ஒருவர். சாலமன் பாப்பையா பட்டி மன்றத்தில் ஒரு அணியின் தலைவராக இருந்து இவர் வாதாடும் விதம் அனைவருக்கும் பிடிக்கும். 
    
10. வீரம் : புனிதா அரோரா   
இவர் இந்தியாவின் முதல் லெப்டினன்ட் ஜெனெரல் ஆவார். இந்திய ராணுவத்தில் பதினைந்திற்கும் மேற்பட்ட விருதுகளை பெற்று உள்ளார்.
  
தொடர் பதிவு எழுத நான் அழைப்பது 
புலவன் புலிகேசி 
வேர்களை தேடி( முனைவர் இரா. குணசீலன்)
வேலன் 

     டுடே லொள்ளு 
என்ன பார்க்காதீங்க நான் துணிய மாத்தனும் 
DRESS CHANGE
பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை கூறிவிட்டு செல்லுங்கள். 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

24 comments :

  1. லொள்ளும் பதிவும் சூப்பர்ர் சசி!!

    ReplyDelete
  2. பதிவு வழக்கம் போல சூப்பர் சசி ஆனா யானை லொள்ளுதான் சிரிப்பை அடக்க முடியல

    ReplyDelete
  3. அற்புதம் சசி, சிலர் எனக்கு புதிய அறிமுகம்.

    ReplyDelete
  4. வீரம் : புனிதா அரோரா
    அறிவியல் ஆராய்ச்சி : கீதா வரதன்

    எனக்கு புதிய தகவல். மிக்க நலம்.

    ReplyDelete
  5. முன்னரே ஷர்புதீன் அழைத்திருக்கிறார்.எழுதனும்...

    ReplyDelete
  6. பதிவும் யானையும் சூப்பர் நண்பரே!!

    ReplyDelete
  7. யானை சூப்பர்,பதிவும் நல்லாருக்கு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. . பேச்சாளர் : பாரதி பாஸ்கர்
    என்னை கவர்ந்தவர்களுள் இவரும் ஒருவர். சாலமன் பாப்பையா பட்டி மன்றத்தில் ஒரு அணியின் தலைவராக இருந்து இவர் வாதாடும் விதம் அனைவருக்கும் பிடிக்கும்//

    நான் முன்பு எழுதிய பதிவில் இவரைத்தான் கூறியிருந்தேன் எனக்கும் இவரின் பேச்சு மிகப்பிடிக்கும்..

    நல்ல தேர்வுகள் சசி

    ReplyDelete
  9. சூப்பர் சசி
    unmaivrumbi,
    Mumbai

    ReplyDelete
  10. @Mrs.Menagasathia

    லொள்ளு பிடிச்சிருக்கா இனிமேல் continue பண்ண வேண்டியது தான். வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி, தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி

    ReplyDelete
  11. @ஆர்.கே.சதீஷ்குமார்

    லொள்ளு பிடிச்சிருக்கா இனிமேல் continue பண்ண வேண்டியது தான். வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி, தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி

    ReplyDelete
  12. @thenammailakshmanan

    லொள்ளு பிடிச்சிருக்கா இனிமேல் continue பண்ண வேண்டியது தான். வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி, தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி

    ReplyDelete
  13. @சைவகொத்துப்பரோட்டா

    ஏதோ நம்மால முடிஞ்சது தல . வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி, தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி

    ReplyDelete
  14. @என் நடை பாதையில்(ராம்)

    ஏதோ நம்மால முடிஞ்சது தல . வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி, தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி

    ReplyDelete
  15. @புலவன் புலிகேசி

    அப்படியா தல சும்மா ஒன்னு எழுதி தான் பாருங்களேன், வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி, தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி

    ReplyDelete
  16. @மயில்ராவணன்

    லொள்ளு பிடிச்சிருக்கா இனிமேல் continue பண்ண வேண்டியது தான். வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி, தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி

    ReplyDelete
  17. @மைதீன்

    லொள்ளு பிடிச்சிருக்கா இனிமேல் continue பண்ண வேண்டியது தான். வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி, தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி

    ReplyDelete
  18. @அன்புடன் மலிக்கா

    ஏதோ நம்மால முடிஞ்சது அக்கா, வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி, தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி

    ReplyDelete
  19. @unmaivrumbi

    லொள்ளு பிடிச்சிருக்கா இனிமேல் continue பண்ண வேண்டியது தான். வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி, தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி

    ReplyDelete
  20. சசி குமார் பத்து பெண்களின் தேர்வு அருமை.

    துறை வாரியா எடுத்து போட்டு கலக்கிட்டீங்க.

    சினிமா துறை யார் அது சரோஜா தேவியா , பத்மினியா?
    கடைசியில் யானை படம் சிரிப்பு தாங்க முடியல‌

    ReplyDelete
  21. சிங்கங்கள் என்ற பதிவு சூப்பர்

    ReplyDelete
  22. @Jaleela

    சாரி அக்கா படம் மாறி போச்சே, நம்ம ஜலீலா அக்கா கவனிச்சது யாரும் கவனிக்கலையா,உடனே படத்தை மாத்திடறேன் அக்கா

    ReplyDelete
  23. என்னைக் கவர்ந்தவர்கள் இதில் இருக்கின்றனர்.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press