இன்று வரை என்னை பின் தொடரும் உள்ளங்களுக்கும், என் பதிவிற்கு தவறாமல் பின்னூட்டம் அளித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.  


இன்று எனக்கு மிகவும் பிடித்த நாள் இன்று தான் என்னுடைய தாய் என்னை ஈன்றெடுத்த நாள். முதன் முதலில் என்னுடைய பிறந்த நாளை பதிவுலக  நண்பர்களோடு கொண்டாடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இங்கு நானே என்னை பற்றி  ஒரு சிறு அறிமுக படுத்தி கொள்கிறேன்.    
வேலன் சார் வடிவமைத்து கொடுத்தது.    




பெயர் :   சசிகுமார் (யாருக்கும் தெரியாது பாரு)


பிறந்த தேதி :  10-05-1984 (இது பள்ளியில், உண்மையில் 1983)


என்னை பிடித்தது :  அப்பாவுக்கு (நான் நன்றாக படித்ததால் ஹி ஹி ஹி ) 


எனக்கு பிடித்தது :  அம்மா (வீட்ல படிக்க சொல்லி தொந்தரவு செய்யாததால்)


படித்தது :  BBA, CCCA, ACDFT , and Web Designing (டே கேக்கறதுக்கு ஆள் இல்லேன்னா  என்னவென்னாலும் போட்டுபியா)

படிக்க நினைத்தது : (அத வுடுங்க என்னென்னவோ நெனச்சோம்)

மறக்க முடியாதது :   கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு விபத்தில் என் அம்மாவும், அக்காவும் அதே இடத்திலேயே இறந்தது. இதற்க்கு மேல் சொல்லி என்னுடன் சேர்த்து உங்களையும் அழவைக்க விரும்பவில்லை. (நண்பர்களே இதை பற்றி யாரும் கமென்ட் போட வேண்டாம்)  

மறக்க நினைப்பது :   மறக்க முடியாததை.

 பிடித்தது : அன்று அம்மா ஊட்டி விட்டது , இன்று என் மனைவி ஊட்டி விடுவது.

கடவுளிடம் வேண்டியது : எந்த குறையும் இல்லாமல் குழந்தை( கொடுத்த அந்த
இறைவனுக்கு நன்றி )
பெயர் : யுதிஷா. என் குழந்தை  

மகிழ்ச்சி: அன்பான மனைவி அமைந்தது. பெயர் சுனிதா.

என் மனைவி    


தற்போதைய பெருமை 

என்னவோ  படிச்சிட்டு வேலை தேடிகொண்டிருந்த எனக்கு கடைசியாக ஏனோ தானோ வென்று படித்த இந்த FASHION TECH. தாங்க சோறு போடுது. படித்தது எல்லாம் வீணாக போச்சே என்று கவலை பட அப்போது தான் எனக்கு இந்த ப்ளாக் ஆரம்பித்து அதிலே சில டிப்ஸ் போடலாமென்று யோசனை வந்தது. சரி ஒரு பக்கம் ஆதரவு இருக்குமா என்று சந்தேகம் வேறு. இப்பொழுது நான் எதிர் பார்த்ததை விட எனக்கு ஆதரவும், அன்புள்ள நண்பர்களும் கிடைத்து உள்ளனர். இப்பொழுது தினமும் குறைந்தது 5 நபர்களாவது மெயில் மூலமாகவும், போன் மூலமாகவும் தொடர்பு கொண்டு பிளாக்கில் சந்தேகங்களை கேட்டு கொண்டு இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட ஒரு நண்பர் சவுதியில் இருந்து போன் மூலம் தொடர்பு கொண்டார். (வீணாக தற்பெருமை அடித்து கொள்கிறேன் என்று கருத வேண்டாம் அந்த அளவிற்கு சந்தோசமாக உள்ளது நண்பர்களே.)  

வாழ்த்து:  இன்று என்னை போல பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் என் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.                

Comments