பிலாக்கரில் வாசகர்களே நம் பதிவின் எழுத்துக்களை பெரியதாக்கி கொள்ள

ம்முடைய தளத்தில் நமக்கு தெரிந்ததை நாம் பதிவாக வெளியிடுகிறோம். அது மற்றவர்களுக்கு உபயோகமானதாகவும் இருக்கலாம் அல்லது நம்முடைய கற்பனையாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் சரி வாசகர்கள் தரும் ஆதரவினை பொறுத்தே அந்த பதிவின் வெற்றி தோல்வி அமைகிறது. ஆகவே வாசகர்களே நம்முடைய தளத்தின் முதுகெலும்பு ஆகும். நமக்கு வரும் வாசகர்கள் சிலபேர் நம்முடைய பதிவின் எழுத்துக்கள் சிறியதாக இருக்கிறது சற்று பெரியதாக ஆக்குங்கள் என்று பின்னூட்டம் போடுவார்கள். ஆனால் வேறு சிலரோ பார்ப்பதற்கு பெரியதாக உள்ளதால் அதை சிறியதாக மாற்றவும் என்று பின்னூட்டம் போடுகிறார்கள். (எனக்கு ஒருமுறை இந்த அனுபவம் உண்டு). சரி எப்படி இந்த பிரச்சினையை தீர்ப்பது என்று யோசிப்பவர்களுக்கு இந்த பதிவு.

என்னுடைய பதிவில் சாதரணமாக வந்த எழுத்துக்கள் கீழே 


மாற்றம் செய்தவுடன் வந்த அளவு


இப்படி படத்தில் காட்டியுள்ளதை போல் நம்முடைய சைடுபாரில் அமைத்து கொண்டால் நம்முடைய வாசகர்கள் அவர்களுக்கு தேவையான வடிவில் நம்முடைய பதிவின் எழுத்துக்களை மாற்றி கொள்ளலாம்.  தேவைப்பட்டால் font family கூட மாற்றி கொள்ளலாம். இந்த widget நிறுவி வாசகர்கள் நம்முடைய பதிவை மாற்றும் போது அந்த பாக்கம் திரும்பவும் லோடு ஆகாமல் செலக்ட் செய்த உடன் பெரியதாக காட்டுவது இந்த விட்ஜெட்டின் சிறப்பம்சமாகும். சரி இதை எப்படி நம்முடைய பதிவில் இணைப்பது என்று காணலாம்.

        இந்த விட்ஜெட்டை இணைக்க உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். DASSBOARD - LAYOUT - ADD A GADGET - HTML/JAVA SCRIPT செல்லவும்.  சென்று கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.        
         

<script>
function go1(){
if (document.selecter2.select2.options
[document.selecter2.select2.selectedIndex].value != "none") {
document.getElementById('main').style.fontSize
=document.selecter2.select2.options
[document.selecter2.select2.selectedIndex].value
}
}

function go2(){
if (document.selecter2.select3.options
[document.selecter2.select3.selectedIndex].value != "none") {
document.getElementById('main').style.fontFamily
=document.selecter2.select3.options
[document.selecter2.select3.selectedIndex].value
}
}
</script>
<form id="forma" name="selecter2" method="POST">

<select onchange="go2()" style="font-family:verdana;font-size:8pt" name="select3" size="1">
<option value="Times New Roman"/>Times New Roman
<option value="Arial"/>Arial
<option selected value="Book Antiqua"/>Book Antiqua
<option value="Bookman Old Style"/>Bookman Old Style
<option value="Century Gothic"/>Century Gothic
<option value="Comic Sans Ms"/>Comic Sans Ms
<option value="Tahoma"/>Tahoma
<option selected value="Trebuchet Ms"//>Trebuchet Ms
<option value="Verdana"/>Verdana
</select>
<select onchange="go1()" style="font-family:verdana;font-size:8pt" name="select2" size="1">
<option value="8px"/>8
<option value="9px"/>9
<option value="10px"/>10
<option value="11px"/>11
<option selected value="12px"/>12
<option value="14px"/>14
<option value="16px"/>16
<option value="18px"/>18
<option value="22px"/>22
</select></form><a href="http://vandhemadharam.blogspot.com/2010/05/blog-post_04.html" target="_blank"><font size="1">Get This</font></a>
பேஸ்ட் செய்து விட்டு கீழே உள்ள SAVE என்ற பட்டனை அழுத்தி உங்கள் தளத்தில் வந்து பார்த்தால் நீங்கள் நிறுவிய விட்ஜெட் வந்திருக்கும். இனிமேல் வாசகர்கள் அவர்களுக்கு தேவையான வடிவில் நம்முடைய பதிவின்  எழுத்துக்களை மாற்றி கொள்ளலாம்.

டுடே லொள்ளு


யார் கிட்ட வந்து ஸ்டைலா நடந்து போற 


நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை கூறவும்.  

Comments