பதிவர்களுக்கு தேவையான 11 பயனுள்ள கூகுள் குரோம் நீட்சிகள்

கூகுளின் இன்னொரு அங்கமான Google Chrome வெளியிட்ட சிறிது காலத்திலேயே அனைவராலும் உபயோக படுத்த பட்டு வருகிறது. நம் பதிவர்கள் பாதிக்கும் மேல் கூகுள் குரோம் உபயோக படுத்துகிறார்கள் என்பது உண்மையே. இங்கு GOOGLE CHROME -ல் நம் பிளாக்கருக்கு  தேவையான 10 பயனுள்ள நீட்சிகளை கொடுத்துள்ளேன்.

1.  Blogger Toolbar Remover : 


பிளாக்கரில் Navbar எனப்படும் Toolbar இணைந்தே காணப்படும். அதனால் சற்று அழகற்று இருக்கும். நம் தளத்தில் உள்ள Navbar நாம் நினைத்தால் நீக்கிவிடலாம். ஆனால் மற்ற தளங்களில் உள்ளதை நம்மால் நீக்க முடியாதல்லவா  இந்த நீட்சியை நம் உலாவியில்  நிறுவுவதன் மூலம் மாற்ற தளங்களில் உள்ள Blogger Toolbar (Navbar) நமக்கு தெரியாது.  Download Link - Blogger Toolbar Remover
2.  Chrome Seo

இந்த நீட்சியை நம் தளத்தில் நிறுவுவதன் மூலம் நம் பிளாக்கின் Page Indexed ,  Traffic Rank , Back links போன்ற முக்கியமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம். அனைத்து பதிவர்களுக்கும் தேவையான முக்கியமான நீட்சி இது. 
Download link - Chrome SEO Beta

3.  Face Book For Google Chrome
நம்முடைய பிளாக்கிலே நாம் Face Book பார்த்து கொள்ளலாம். Facebook தளம் செல்ல வேண்டியதில்லை. நாம் எந்த தளத்தில் இருந்தாலும் நமக்கு வரும் கருத்துக்கள் தெரியும். எந்த தளத்தில் இருந்தும் பதிலும்  போடலாம் Face Book பிரியர்களுக்கு மிகவும் அற்புதமான நீட்சி இது.   பயன் படுத்தி பாருங்கள்.
Download Link -Facebook for Google Chrome 

4. Google Reader Notifier:
இந்த நீட்சியை நாம் நம் இணைய உலவியில் நிறுவுவதன் மூலம் பிளாக்கரில் நாம் பின்தொடரும் தளங்களில் ஏதேனும் பதிவு போட்டால் போதும் உடனே நமக்கு இந்த நீட்சியில் வந்து விடும். உடனுக்குடன் நம் நண்பர்களின் பதிவுகளை படித்து ரசிக்கலாம். இது கூகுள் நிறுவனத்தால் அளிக்கப்படும் ஒன்று.
Download link : Google Reader Notifier (by Google)

5. Google Mail Checker : 
இது பதிவர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் தேவையான ஒன்று. நாம் அனைவரும் கூகுள் தரும் இலவச மெயில் வசதியான Gmailலில் அக்கௌன்ட் வைத்திருப்போம். இந்த நீட்சியை நிறுவினால் நமக்கு ஒரு மெயில் வந்தால் அது உடனே இந்த நீட்சிக்கு கீழ் ஒன்று என்று வந்திருக்கும். உடனே நாம் இதை கிளிக் செய்து நம்முடைய ஜிமெயில் அக்கௌண்டில் சென்று பார்த்து கொள்ளலாம். நமக்கு வரும் மெயில்களை உடனுக்குடன் நாம் காண முடியும்.   Download Link : Google Mail Checker


6. Blog This! 
இந்த நீட்சியை  நிறுவுவதன் மூலம் நாம் எங்கு எந்த தளத்தில் இருந்தும் நம் பிளாக்கில் பதிவை போடலாம். பிளாக்கர் பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ள நீட்சி இது.  Download Link : Blog This!
7. RSS Subscription Extensions :


இந்த நீட்சியை நிறுவுவதால் நாம் சுலபமாக Rss Subscription செய்யலாம். இந்த நீட்சியை நிறுவிய பிறகு Settings- Tools- Extension சென்று இந்த நீட்சியை ஓபன் செய்து அங்கு ADD என்று இருக்கும் பட்டனை அழுத்தி நீங்கள் விரும்பிய தளத்தை சேர்த்து கொள்ளலாம்.
Download Link - Rss Subscription Extensions 


8. Wise Stamp - Email Signatures for Gmail and Google Apps
பதிவர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் தேவையான ஒன்று இந்த நீட்சி நம்முடைய கையெழுத்தை போட உதவு கிறது. மிகவும் பயனுள்ள நீட்சி.
Download Link - Wise Stamp Email Signatures
9. Blogger in Draft Button 



பிளாக்கர் பயன்படுத்தும் நம் அனைவருக்கும் Blogger Draft பற்றி தெரிந்து இருக்கும். பிளாக்கரில் ஏதேனும் புது வசதி வந்தால் முதலில் சோதனை ஓட்டமாக Blogger Draft யில் தான் வெளியிடுவார்கள். வரவேற்ப்பை பொறுத்தே அதை நம் பிளாக்கரில் சேர்ப்பார்கள் . இந்த நீட்சியை நிறுவுவதன் மூலம் நாம் ஒரே கிளிக்கில் Blogger Draft பகுதிக்கு சென்று விடலாம் பதிவர்களுக்கு தேவையான ஒன்று.
Download Link - Blogger in Draft Button.


10. Alexa Traffic Rank
இது பதிவர்கள் அனைவருக்கும் முக்கியமான நீட்சி. இதை பற்றி விரிவாக முன்பே ஒரு பதிவு போட்டு இருந்தேன் பார்க்காதவர்கள் இங்கு டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் நம் தளத்தின் Alexa Traffic Rank கண்டறிய முடியும். இதை இணைப்பதனால் நம் பிளாக்கின் Alexa Traffic Rank உயர்த்த  முடியும்.  
 Download Link - Alexa Traffic Rank


11. Kuber Page Rank Checker
பதிவர்களுக்கு தேவையான ஒன்று இந்த நீட்சி நம் தளத்தின் Page Rank அறிய உதுவுகிறது. இந்த ஒரு நீட்சி Google, Alexa, Compete போன்ற தளத்தில் நம்முடைய Page rank அறிய உதவுகிறது. பயனுள்ள நீட்சி.
Download Link - Kuber Page Rank Checker 






நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் ஓட்டினை போட்டு விட்டு செல்லவும். 
டுடே லொள்ளு 
Photobucket

இவ்ளோ தூரம் வந்து ஓட்டு போட்டதுக்கு எல்லாருக்கும் டேங்கஸ்பா 

Comments