நம் பிளாக்கினை தேடியந்திரங்கள் அறிவதற்கு வசதியாக மாற்ற

நம்முடைய பதிவுகளை தமிழ் திரட்டிகளில் இணைத்து அதன் மூலம் நம் பிளாக்கிற்கு வாசகர்கள் வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால் தமிழ் திரட்டிகளின் மூலம் நம் தளத்திற்கு வரும் வாசகர்களுக்கும் தேடியந்திரங்களில்(SEO) மூலம் நம் பிளாக்கிற்கு வரும் வாசகர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றன.
தேடியந்திரங்களின் மூலம் நம் பிளாக்கிற்கு வாசகர்கள் வந்தால் நம் பிளாக்கின் ரேங்க் விரைவாக உயரும். ஆகையால் நம் பதிவை தேடியந்திரங்கள் மூலம் அறியபடுவதர்க்கு ஏற்ற மாதிரி செய்வது நம் கையில் தான் உள்ளது.

தேடியந்தரங்களில் தேடுபவர்கள் அவர்களுக்கு  தேவையான  பதிவை தான் தேடுவார்கள். நம் தளத்தின் தலைப்பை  தேடமாட்டார்கள். ஆகையால் நம் தளத்தில் தலைப்பில் சிறிய மாற்றங்கள் செய்தால் மட்டுமே பதிவிற்கு முக்கியத்துவத்தை கொடுக்க முடியும்.
கீழே உள்ள படத்தையும் பாருங்கள் 

இந்த இரண்டு படங்களில் பார்த்தாலே உங்களுக்கு தெரியும் நம்முடைய பதிவிற்கு பிறகு நம்முடைய தலைப்பு வருகிறது இது தான் SEO க்கு ஏற்ற முறையாகும். இது போல் நம் பிளாக்கிலும் மாற்ற உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • Design
  • Edit Html -சென்று கீழே உள்ள வரியை கண்டு பிடிக்கவும். 
<title><data:blog.pageTitle/></title>
இந்த வரியை கண்டு பிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து இந்த வரியின் மீது REPLACE செய்து விடவும்.
<b:if cond='data:blog.pageType == &quot;index&quot;'> <title><data:blog.title/></title> <b:else/> <title><data:blog.pageName/> | <data:blog.title/></title> </b:if>
இப்பொழுது SAVE TEMPLATE கொடுத்து விடுங்கள்.  இந்த மாற்றங்கள் நம் தேடியந்தரங்களில் வருவதற்கு சில நாட்கள் ஆகும். ஆனால் நான் கண்டிப்பாக சொல்கிறேன் இந்த மாற்றங்கள் செய்த பிறகு உங்கள் பிளாக்கிற்கு வரும் வாசகர்கர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

டுடே டெம்ப்ளேட் 


Features: 2 columns, right sidebar, 4 columns in the footer, light, full widget, share buttons enabled.


டுடே லொள்ளு 

Photobucket

என்ன பண்றது ஒரே கண்ணிலேயே மாத்தி மாத்தி பார்க்க வேண்டியிருக்கு.

Comments