பிளாக்கர் தளத்திற்கு உங்கள் ஆலோசனைகளை நேரடியாக கூறலாம் வாங்க

பிளாகர் தளம் நம் தமிழ் பதிவர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிகமாக உபயோகிக்கப்படும் தளமாக உள்ளது. முந்தைய நாட்களில் இந்த தளம் சில அடிப்படை வசதிகளை கொண்டே காணப்பட்டது. ஆனால் கடந்த ஒரு வருடத்தில் பல வசதிகளை கொடுத்துகொண்டே உள்ளது அதற்கு காரணம் வாசகர்கள் நேரடியாக தங்கள் ஆலோசனைகள் வழங்கும் வசதியை ஏற்ப்படுதியதே.
இந்த தளத்தில் நம்மை போன்ற பல பிளாக்கர் வாசகர்கள் அவர்களின் கருத்தை கூறி இருப்பார்கள். அந்த ஆலோசனைகள் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் அதற்கு ஓட்டு போட வேண்டும். இதில் அதிக ஓட்டு பெரும் ஆலோசனைகள் பிளாக்கர் குழுவினால் பரீசிலிக்கபட்டு அந்த வசதியை அவர்கள் பிளாக்கரில் புகுத்துவார்கள். இந்த முறை மூலம் நமக்கு கிடைத்ததே இந்த 

  • Template Designer
  • Spam comments Filtering
  • Popular post
  • Stats
  • Add Caption 
  • Jump Breaks
  • Upload Multiple Images 
போன்ற வசதிகளாகும். இந்த வரிசையில் நமக்கு தேவையான வசதிகளை நாமே கெட்டு பெரும் இந்த அறிய வாய்ப்பை இப்பொழுது திரும்பவும் துவக்கி உள்ளனர்.  இந்த அறிய வாய்ப்பை நழுவ விடாமல் இந்த லிங்கில் சென்று நம் ஆலோசனைகளையும், ஏற்கெனவே கேட்கப்பட்டுள்ள நல்ல வசதிகளுக்கு ஓட்டும் போட்டு நமக்கு தேவையான வசதியை பெற இந்த லிங்கில் Blogger Products and Ideas செல்லவும். 
உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இந்த விண்டோவில் உங்களுக்கு ஏற்க்கனவே கேட்கப்பட்டுள்ள வசதிகள் வரும். 
  • இதில் இந்த வசதி பிடித்திருந்தால் டிக் குறியிடவும். ஒருவேளை கேட்கப்பட்டுள்ள வசதி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் skip கொடுத்து விடவும்.
  • உங்கள் ஆலோசனைகளை தெரிவிக்க கீழே காட்டியிருக்கும் Submit an Idea என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இது போல வந்தவுடன் உங்களுக்கு தேவையான வசதியை பற்றி அந்த காலி கட்டத்தில் கொடுக்கவும்.
  • கீழே உள்ள இரண்டு கட்டங்களில் முறையே உங்கள் பெயர், உங்கள் இடம் ஆகியவைகளை கொடுத்து கீழே உள்ள Submit கிளிக் செய்யவும்.
  • உங்களுக்கு இன்னொரு சிறிய விண்டோ ஓபன் ஆகும் அதில் I accept என்பதை கிளிக் செய்து திரும்பவும் Submit என்பதை கிளிக் செய்யவும். அவ்வளவு தான் நீங்கள் அனுப்பிய ஆலோசனை பிளாக்கர் தளத்திற்கு நேரடியாக சென்று விட்டது.
  • இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள Blogger Buzz செல்லவும்.
நான் Comments Reply Option,Upload gif file direct to blogger post பற்றி தெரிவித்து உள்ளேன். இந்த வசதி அனைவருக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் இந்த லிங்கில் சென்று உங்கள் வாக்கினை இடவும்.
டுடே லொள்ளு
Photobucket
உங்க கிட்ட கமென்ட் வாங்கருதுக்குள்ள நான் படறேன் பார் பாடு அய்யய்யோ 

Comments