ஒரே நிமிடத்தில் உங்கள் Contact Form உருவாக்க

நம் பிளாக்கிற்கு வரும் வாசகர்கள் நம்மை தொடர்பு கொள்ள வசதியாக பெரும்பாலான தளங்களில் இந்த Contact Form பொறுத்த பட்டிருக்கும். இந்த சேவையை ஏராளமான தளங்கள் வழங்குகின்றன . இணையத்தில் இந்த சேவையை நிறைய தளங்கள் இலவசமாக நமக்கு வழங்கினாலும் இந்த தளத்தில் உருவாக்குவது மிகவும் சுலபமாக உள்ளது. 
பயன்கள்: 
  • இந்த தளத்தில் நாம் உறுப்பினர் ஆக வேண்டியதில்லை.
  • நமக்கு தேவையான பகுதிகளை மட்டும் தேர்வு செய்து கொள்ளலாம்.
  • நமக்கு மெயில் அனுப்ப பட்ட அடுத்த வினாடியே நம் மெயிலுக்கு அந்த செய்தி அனுப்பபடுகிறது.
  • படிவத்தின் நிறத்தை நம் விருப்பம் போல் தேர்வு கொள்ளலாம்.
இதற்கு முதலில் Foxy Form.com  இந்த தளத்திருக்கு செல்லுங்கள்.உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்
  • மேலே உங்களுக்கு தேவையான மாற்றங்கள் செய்து கொள்ளுங்கள்.
  • இதில் required field என்பது கண்டிப்பாக வாசகர்கள் தெரிவிக்க வேண்டிய தகவல் ஆதலால் அதை E-mail என்ற இடத்தில் மட்டும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • அடுத்து கீழே உள்ள Your Options என்ற பகுதி உங்கள் படிவத்தின் நிறங்களை தேர்வு செய்ய.
  • முடிவில் கீழே உள்ள Your E-mail Address என்ற இடத்தில் உங்களுக்கு மெயில் வரவேண்டிய முகவரியை கொடுத்து கீழே உள்ள Create Formular என்ற பட்டனை அழுத்தினால் அடுத்த வினாடியே உங்கள் html கோடிங் ரெடி.
  •  இந்த கோடிங்கை காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளவும்.
  • Newpost - Edit Pages- New page (or) Edit - செல்லவும்.
  • அடுத்து அங்கு உள்ள Edit HTML என்ற பகுதிக்கு சென்று நீங்கள் காப்பி செய்து வைத்திருந்த HTML கோடிங்கை பேஸ்ட் செய்து கீழே உள்ள Publish Page என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
டுடே லொள்ளு 
Photobucket
மாப்ள கீழ வாங்க அந்த பொண்ணையே கட்டி குடுக்குறோம் 

Comments