புதியவர்களுக்காக: விருப்பமில்லாத தளங்களில் உள்ள Follow லிஸ்டில் இருந்து விலக

நாம் இணைய உலகில் பல எண்ணற்ற வலைத்தளங்களை பார்வையிட்டு அதில் உள்ள செய்திகளை நாமும் படிக்கிறோம். நமக்கு பிடிக்கும் தளங்களில் Google friend connect மூலம் பாலோ செய்கிறோம். இப்படி follow செய்வதனால் அவர்கள் தளத்தில் ஏதேனும் பதிவு போட்டால் உடனே அது நம் பிளாக்கின் Dassboard பகுதியில் வந்து விடும்.


அந்த லிங்கில் சென்று நாம் பதிவைபார்க்கிறோம். இது அனைவரும் அறிந்ததே. 
ஒரு சில நேரங்களில் நாம் முன்பு follow செய்த தளங்கள் இப்பொழுது எந்த பதிவையும் இடாமல் சேவை நிறுத்த பட்டிருக்கலாம் அல்லது முன்பு நல்ல செய்திகளை கொடுத்த தளங்களில் இருந்து தற்போது நமக்கு பிடிக்காத செய்திகளை வெளியிடலாம் அந்த சமயங்களில் நாம் அந்த தளங்களின் Followers பட்டியலில் எப்படி விலகுவது என்று கீழே காணலாம்.


  • இதற்கு முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். 
  • உங்கள் பிளாக்கின் Dassboard பகுதிக்கு செல்லவும்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.இதில் இடது பக்கத்தில் உள்ள Blogs I am Following என்ற பட்டனை அழுத்தவும்.
  • அதில் நாம்  பின்தொடரும் தளங்கள் மற்றும் அந்த தளங்களில் வெளியான கடைசி பதிவின் லிங்க் காணப்படும்.

  • இதில் கீழே நீல நிறத்தில் உள்ள MANAGE என்ற பட்டனை அழுத்தவும்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.


    • இதில் நீங்கள் ஏதேனும் ஒரு தளத்திற்கு நேராக உள்ள Settings என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.
    • நீங்கள் நீக்க வேண்டிய தளமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எந்த தளத்திற்கு நேராக உள்ள Settings லிங்கை க்ளிக் செய்யலாம்.
    • Settings க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.


    • உங்களுக்கு வரும் விண்டோவில் Sites you've joined என்ற லிங்கை க்ளிக் செய்யவும். 
    • க்ளிக் செய்தவுடன் வலது பக்கத்தில் நீங்கள் பின்தொடரும் அனைத்து தளங்களும் வந்திருக்கும்.
    • இதில் எந்தெந்த தளங்களில் இருந்து விலக நினைக்கிறீர்களோ அந்த தளங்களுக்கு நேராக உள்ள Stop Following என்ற லிங்கை அழுத்தினால் போதும் நீங்கள் அந்த தளத்தின் Followers லிஸ்டில் இருந்து நீங்கி விடுவீர்கள்.
    • இனி அந்த தளத்தில் எந்த பதிவு போட்டாலும் உங்கள் பிளாக்கில் அப்டேட் ஆகாது.
    டுடே லொள்ளு 

    Photobucket

    டேடேடே பார்த்து போட மச்சான் 

    Comments