அனைவருக்கும் பயனுள்ள கூகுளின் Url Shortener சேவை

கேட்க கேட்க கொடுத்து கொண்டிருக்கும் கூகுள் ஆண்டவரிடம் இருந்து இன்னுமொரு பயனுள்ள சேவை இந்த URL SHORTENER சேவை. நாம் நம்முடைய பதிவில் பதிவிற்கு சம்பந்தமான லிங்க் மிக பெரியதாக இருக்கும். வாசகர்கள் அதை ஞாபகம் வைத்து கொள்வது கடினமாமாக இருக்கும். எவ்வளவு பெரிய URL ஆக இருந்தாலும் அதை சுருக்கி மிக சிறியதாக கொடுக்கும்.
பயன்கள்:
  • நீங்கள் பகிர நினைக்கும் URL சுருக்கி கொடுப்பதனால் நீங்கள் ட்விட்டர் போன்ற தளங்களில் உபயோகிக்க சிறப்பானதாகும்.
  • இதில் இன்னொரு அற்ப்புதமான வசதி என்னவென்றால் நீங்கள் உங்கள் பதிவில் கொடுக்கும் லிங்க் எத்தனை முறை கிளிக் செய்யப்பட்டுள்ளது என்று பார்த்துகொள்ளலாம்.
  • வேகமாக இயங்க கூடியது.
  • spam ஆல் கண்டுபிடிக்க இயலாதது.
  • மற்றும் Two hours, day, week, month , all time என்று பகுதி வாரியாக நம் லிங்கை க்ளிக் செய்தவரின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளலாம்.  
  • நாம் லிங்க் உருவாக்கிய நேரத்தையும் அறிந்து கொள்ளலாம். 
பயன் படுத்தும் முறை: 
  • இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள இந்த லிங்கில் http://goo.gl/ செல்லவும். (பெயரிலேயே சுருக்கத்தை காட்டியுள்ளனர்).
  • Sign In என்பதை க்ளிக் செய்து உள்ளே நுழைந்து கொள்ளவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • படத்தில் உள்ளது போல் அந்த காலி கட்டத்தில் நீங்கள் சுருக்க விரும்பும் URL கொடுத்து அதற்க்கு அருகில் உள்ள Shorten என்ற பட்டனை அழுத்தி விடவும்.
  • அதற்கு பக்கத்திலேயே நீங்கள் சுருக்கிய URL வரும் அதை நீங்கள் காப்பி செய்து உங்கள் தளத்தில் கொடுத்து கொள்ளுங்கள்.
மேலே நான் காட்டி இருப்பது என்னுடைய தளத்திற்கான லிங்க் வெறும் நான்கு எழுத்துக்கள் போதுமாம் என் தளத்தை திறக்க.
  • அதற்கு கீழே உங்கள் லிங்குடன் மற்ற விவரங்கள் வரும். எப்பொழுது  உருவாக்கியது எத்தனை முறை க்ளிக் செய்ய பட்டுள்ளது போன்ற விவரங்கள் வரும். 
  • மேலும் இதை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்றால்  அருகில் உள்ள Details என்ற பட்டனை அழுத்தி தெரிந்து கொள்ளுங்கள்.
  • அவ்வளவு தான் இனி நாம் பதிவில் கொடுக்கும் லிங்கை எத்தனை முறை கிளிக் செய்து இருக்கிறார்கள் என சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

டுடே லொள்ளு  
Photobucket
டே யார்ரா அவன் என்கிட்டே மாட்ன மவனே சட்னி தான் நீ 

Comments