செவ்வாய் கிரகத்திற்கு உங்கள் பெயரை அனுப்ப வேண்டுமா

தலைப்பை பார்த்தவுடன் என்னடா ஏதோ நம்ம தூத்துக்குடிக்கு அனுப்பறத போல அசால்டா சொல்றானேன்னு நினைக்க வேண்டாம் இது உண்மை தான். அமெரிக்காவின் நாசா அடுத்த ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு ஒரு செயற்கைகோள் அனுப்ப இருக்கிறார்கள். அதில் உள்ள மைக்ரோசிப்பில் நம்முடைய பெயரையும் இணைத்து அனுப்பவதற்கு ஏற்பாடு செய்து உள்ளனர்.
இது வரை இதில் 9 லட்சத்திற்கு மேல் அவர்களின் பெயர்களை இணைத்து உள்ளனர். இந்தியாவில் இருந்து மட்டும் சுமார் 4000 நபர்கள் தங்களின் பெயர்களை இணைத்து உள்ளனர். நாம தான் போக முடியாது நம்முடைய பெயராவது போகட்டுமே.

இதில் நீங்கள் பங்கு கொண்டதற்கு ஆதாரமாக உங்களுக்கு ஒரு எண்ணும் மற்றும் உங்கள் பெயர் பொருந்திய சான்றிதழும் வழங்குகின்றனர்.

  •  சரி நம்ம பேர அனுப்புவோமா அதற்கு முதலில் Send Your Name to Mars இந்த தளத்திற்கு செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • அதில் நான்கு கட்டங்கள் கொடுக்க பட்டிருக்கும் அதை பூர்த்தி செய்து கீழே உள்ள Submit என்ற அழுத்தவும்.
  • Submit அழுத்தியவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • அவ்வளவு தான் உங்களுடைய பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்று விட்டது இதற்கு சான்றாக உங்களுக்கு ஒரு சான்றிதழ் தருவார்கள் மேலே வட்டமிட்டுள்ள View and print என்ற லிங்க் அழுத்தி உங்கள் சான்றிதழ் பெற்று கொள்ளுங்கள். 
  • அவ்வளவு தான் என்ன சந்தோசமா நீங்க போனா என்ன உங்க பெயர் போனா என்ன எல்லாமே ஒண்ணு தான்.(நான் குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரையும் இணைத்து விட்டேன்) இதுவும் ஒருவித சந்தோஷம் தானே. 
டுடே லொள்ளு 



போரையே சும்மா போக வேண்டியது தானே என்ன ஏண்டா நோண்டுற 

Comments