கூகுளில் தேட மவுசின் உதவி தேவையில்லை Arrow கீகள் போதும்- No Add on

நாம் வழக்கமாக ஏதேனும் தேட வேண்டும் என்று நினைத்தால் உடனே நம் கண்முன் தோன்றுவது கூகுள் தான். நாம் கேட்டதை கொடுக்கும் கூகுள் தளத்தில் இன்னொரு வசதி மவுசின் உதவி இல்லாமல் நம் கீபோர்டின் Arrow கீகள் உபயோகித்தே தேடி கொள்ளலாம். இந்த வசதி உங்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. தெரியாத சிலருக்காக இந்த பதிவு.
  • வழக்கமாக நீங்கள் இந்த லிங்கில் சென்று கூகுள் தளம் செல்லுங்கள். 
  • அங்கு உங்களுக்கு தேவையானதை டைப் செய்து கீபோர்டில் என்ட்டர் கொடுக்கவும்.  
  • இப்பொழுது உங்களுக்கு வந்த முடிவுகள் வரிசையாக காட்ட பட்டிருக்கும். 
  • இப்பொழுது உங்கள் கீபோர்டில் Down Arrow க்ளிக் செய்தால் சிறிய அம்புகுறி கீழே இறங்குவதை பார்ப்பீர்கள்.
  • உங்கள் முடிவின் Preview பார்க்க வேண்டு மென்றால் வலது பக்க Arrow க்ளிக் செய்தால் அந்த பக்கத்தின் Preview தெரியும்.
  • preview மறைய வைக்க இடது பக்க Arrow கீயை பயன்படுத்தவும். 
  • தேடிய முடிவு கிடைத்து விட்டது அந்த பக்கத்தை ஓபன் செய்து பார்க்க விரும்பினால் சிறிய அம்புக்குறியை நேராக வைத்து கீபோர்டின் என்ட்டர் கீயை அழுத்தினால் போதும் அந்த பக்கம் ஓபன் ஆகிவிடும்.
இனி கூகுளில் தேட மவுஸ் தேவையே இல்லை நம் கீபோர்டின் Arrow கீகள் உபயோகித்தே நமக்கு தேவையானதை சுலபமாகவும் வேகமாகவும் தேடி கொள்ளலாம்.

டுடே லொள்ளு 
இன்னைக்கு யாராரு நம்ம கடைக்கு வந்தாங்க 

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் .   

Comments