கூகுள் பிக்காசாவில் போல்டர்கள் Auto Scaning ஆவதை தடுக்க

கூகுளின் வெளியீடான பிக்காசா மிகவும் பயனுள்ள மென்பொருளாகும். இதன் மூலம் நம் கணினியில் உள்ள படங்களை அழகு படுத்தி நேரடியாக இணைய தளங்களுக்கு இதில் இருந்தே அப்லோட் செய்யும் வசதியும் உள்ளது. என்ன தான் பயன்கள் இருந்தாலும் நாம் இந்த பிகாசாவை ஒவ்வொரு முறை ஓபன் செய்யும் போதும் அது தானகவே நம் கணினியில் உள்ள போட்டோக்களை ஸ்கேன் செய்ய ஆரம்பிக்கும். இப்படி நம் கணினியில் உள்ள ஒவ்வொரு போல்டராக ஸ்கேன் செய்யும் இது நமக்கு மிகவும் எரிச்சலை தரும் இதனாலேயே இந்த பிகாசாவை ஓபன் செய்வதை பல பேர் தவிர்த்து விடுகின்றனர்.
இந்த Auto Scaning வசதியை நாம் எப்படி செயலிழக்க வைப்பது என்று இங்கு காண்போம். இதற்கு முதலில் உங்கள் பிகாசாவை ஓபன் செய்து கொள்ளுங்கள். இந்த மென்பொருள் இல்லாதவர்கள் இந்த லிங்கில் Picasa 3.8 சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இது முற்றிலும் இலவச மென்பொருளாகும். 
  • இப்பொழுது File - Add Folder to Picasa என்பதை க்ளிக் செய்யுங்கள்.
  • இதை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • இதில் உங்கள் கணினியில் உள்ள டிரைவ்கள் காட்டும் மேலே குறிப்பிட்டுள்ள படி ஒவ்வொரு டிரைவ் தேர்வு செய்து Remove from Picasa என்ற லிங்கை க்ளிக் செய்து விடவும்.
  • இப்படியே அனைத்து ட்ரைவ்களிலும் செய்து கொண்டு கீழே உள்ள Ok பட்டனை அழுத்தி விடவும். 
  • இது போல் உங்களுக்கு தேவையான போல்டர்களை தேர்வு செய்து கொள்ளவும். 
    அவ்வளவு தான் இனி நீங்கள் எப்பொழுது பிகாசாவை திறந்தாலும் நீங்கள் நீக்கிய போல்டர்கள் மற்றும் டிரைவ்கள் Auto Scaninig ஆகாது. நிம்மதியாக நாம் இந்த மென்பொருளை உபயோகித்து பயன்பெறலாம்.

    டுடே லொள்ளு

    இதுவல்லவோ ஒற்றுமை, இதுகள பார்த்து நெறைய கத்துக்கணும் நம்மாளுங்க. 
    நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்

    Comments