பிளாக்கர் டிராப்டில் மிகவும் பயனுள்ள சூப்பர் வசதி

யாத்திரை நல்ல படியாக முடிந்தது. திரும்பவும் உங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

பிளாக்கர் உபயோகிக்கும் அனைவருக்கும் பிளாக்கர் டிராப்ட் பற்றி தெரிந்திருக்கும். பிளாக்கர் டிராப்ட் என்பது பிளாக்கரின் புதிய வசதிகளை சோதனை செய்து வாசகர்களிடம் வரவேற்ப்பை பெற்றால் மட்டுமே  இந்த வசதியை  நம் பிளாக்கர் தளத்தில் இந்த வசதியை சேர்ப்பார்கள். இது போன்று சோதனை முயற்சி செய்யவே இந்த தளம் உபயோகிக்க படுகிறது. இந்த வரிசையில் மிகவும் பயனுள்ள வசதியை நம் பிளாக்கர் தளம் சோதனை முயற்சியாக டிராப்ட் தளத்தில் வெளியிட்டு உள்ளனர். அந்த வசதி என்பது Mobile Template என்ற வசதியாகும். 
  • இந்த வசதியானது நம்முடைய பிளாக்கின் டெம்ப்ளேட் வடிவத்தை அப்படியே மொபைல் போனில் காண்பதற்கு இணங்க தானாகவே மாற்றி கொள்கிறது. ஆதலால் மொபைல் போனில் நம் தளத்தை கானபர்வர்களுக்கு ஏற்ப்படும் Alligment பிரச்சினைகள் முற்றிலும் நீங்கு கிறது.
  • இந்த வசதியை ஆக்டிவேட் செய்து விட்டால் மொபைல் போனில் நம்முடைய பிளாக்கில் உள்ள விட்ஜெட்டுக்கள் எதுவும் தெரியாது.
  • பதிவுகள் மட்டுமே தெரியும். இதனால் நம் பிளாக் லோடு ஆகு நேரம் மிகவும் குறையும். இதன் மூலம் வாசகர்கள் நம் தளத்தை விரும்பி படிப்பார்கள்.
உபயோகிக்கும் முறை:
  • முதலில் இந்த லிங்கில் சென்று உங்கள் Blogger Draft தளத்தில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • வந்திருக்கும் உங்கள் டாஸ்போர்டில் Settings க்ளிக் செய்யுங்கள்.
  • அடுத்து வரும் விண்டோவில் Email&Mobile என்பதை க்ளிக் செய்யுங்கள்.
  • அடுத்து show mobile template என்ற பகுதியில் yes என்பதை க்ளிக் செய்து விடவும். தேவைபட்டால் MOBILE PREVIEW என்ற பட்டனை அழுத்தி உங்கள் டெம்ப்ளேட்டின் மாதிரியை பார்க்கலாம். 
  • அடுத்து கீழே உள்ள SAVE SETTINGS என்பதை க்ளிக் செய்து விடவும்.
  • அவ்வளவு தான் இனி உங்கள் பிளாக்கை மொபைல் போனில் காண்பவர்களுக்கு எளிதாத உங்கள் பிளாக்கை திறந்து கொள்ள முடியும்.
இன்றைய பயனுள்ள குரோம் நீட்சி 
கூகுளில் மிகவும் பயனுள்ள வசதிகளில் ஒன்று கூகுள் மேப் வசதி. இந்த வசதியின் மூலம் நமக்கு தேவையான இடத்தை பற்றி நொடிபொழுதில் அறிந்து கொள்ளலாம். இருந்தாலும் இதனை கண்டறிய நாம் கூகுள் மேப் தளத்திற்கு சென்று தான் பார்க்க வேண்டும். ஆனால் இனி அவை தேவையில்லை இந்த நீட்சியை நிறுவினால் நம்தளத்தில் இருந்தும் தேவையான இடங்களை பார்த்து கொள்ளலாம்.


டுடே லொள்ளு 
லேட்டா வந்தாலும் வெயிட்டா வந்து இருக்கேன் வாருங்கோ 

Comments