கூகுள் ஸ்டைலில் லோகோ உருவாக்க

இணையம் என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது கூகுள் தான். இணையத்தில் ஜாம்பவனாக உள்ள கூகுள் ஸ்டைலில் நமக்கு வேண்டிய பெயரி உருவாக்கலாம். இதுக்காக போட்டோஷாப் போன்ற எடிட் சாப்ட்வேர்கள் தெரிய வேண்டுமென்ற அவசியம் இல்லை. மற்றும் இதை செய்ய வெறும் இரண்டு நிமிடங்களே அதிகம். இது போல் நமக்கு தேவையான பெயரை உருவாக்கி கொள்ளலாம்.

  • இந்த பணியை சுலபமாக செய்ய ஒரு தளம் உள்ளது. கீழே உள்ள சுட்டியில் க்ளிக் செய்து இந்த தளம் செல்லவும். 
  • இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 

  • ENTER YOUR NAME என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான பெயரை கொடுத்து விடவும்.
  • அடுத்து அருகில் உள்ள CREATE MY SEARCH PAGE என்ற பட்டனை அழுத்தவும்.
  • அடுத்து உங்களுக்கு வரும் பக்கத்தில் நீங்கள் கொடுத்த பெயர் கூகுள் ஸ்டைலில் வந்திருக்கும்.


  • இது போன்று நீங்கள் கொடுத்த பெயர் கூகுள் ஸ்டைலில் வந்திருக்கும். அதன் மீது மவுசில் வலது க்ளிக் செய்து SAVE IMAGE AS என்பதை தேர்வு செய்து உங்கள் கணினியில் சேமித்து கொள்ளுங்கள்.
  • இதில் நீங்கள் சேமிக்கும் பொது ஒவ்வொரு எழுத்தாக தான் சேமிக்க முடியும். 
  • இந்த தளம் செல்ல இந்த லிங்கில் Goglogo செல்லவும்.

டுடே லொள்ளு 


போதும்பா பாராட்டியது நிறுத்துங்கப்பா... அய்யோ என்னையே வெட்க பட வைக்கிறாங்களே  

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் .

Comments