ஜப்பான் சுனாமி பேரழிவிற்கு ஆன்லைனில் நம்மால் முடிந்த சிறு உதவி

இன்றைய உலகின் கவனம் ஜப்பானின் பேரழிவின் மீது தான் உள்ளது. இந்த பேரழிவில் ஏராளமான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்ப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜப்பானில் ஏற்ப்பட்ட மிகப்பெரிய இழப்பாக இது கருதப்படுகிறது. இது போதாது என்று அவர்கள் நிறுவி இருந்த அணு உலைகள் அவர்களுக்கே இப்போது தீங்காக முடிகிறது. ஜப்பான் எப்படி இந்த நிலைமைகளை சமாளிக்க போகிறது என்பது தான் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் எதிர்பார்க்கிறது. எவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும் இந்த பேரழிவிலிருந்து திரும்பவும் பழைய நிலைமைக்கு வருவது மிகக்கடினமான ஒன்று தான்.
ஆனால் ஜப்பானுக்கு இது புதிதல்ல சுறு சுறுப்பானவர்கள் என்று பெயர் எடுத்த ஜப்பானியர்கள் அமெரிக்காவால் தங்களின் இரு நகரங்கள் தாக்க பட்ட போதும் துவண்டு விடாமல் எழுந்து மீண்டும் உலக பொருளாதரத்தில் முதலிடம் பிடித்த ஜப்பானியர்கள் இந்த பேரழிவில் இருந்தும் மீண்டு வருவார்கள். ஆனால் இந்த பேரழிவில் தற்போது அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் எவ்வளவோ மக்கள் துன்பப்பட்டு கொண்டு உள்ள நிலையில் இந்த மக்களுக்கு நம்மால் ஆன சிறு உதவி செய்ய விரும்புவர்கள் கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும்.

(இந்த பேரழிவிலும் சில ஈனப்பிறவிகள் போலியாக ஒரு இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் ஏமாற்றி இப்படி நன்கொடையை வாங்கி ஏமாற்று கிறார்கள் ஆகவே கவனமாக இருக்கவும்.)
  • இந்த பேரழிவிற்கு உதவ நினைப்பவர்கள் இந்த லிங்கில் க்ளிக் http://www.google.com-japan quake2011- Donations செய்யவும்.
  • இந்த தளம் கூகுள் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் மூன்று நிறுவங்களின் மூலம் நம் உதவியை கொடுக்கலாம். 
  • JAPANESE RED CROSS SOCIETY
  • UNICEF- United Nations Children's Fund
  • SAVE THE CHILDREN
  • இதில் நீங்கள் எந்த நிறுவனம் மூலம் உதவி செய்ய விரும்புகிறீர்களோ அந்த நிறுவனத்திற்கு அருகில் உள்ள சிறிய கட்டத்தில் உங்களின் உதவி தொகையை கொடுத்து DONATE பட்டனை அழுத்தவும்.
  • குறைந்தது 5$ (250 ரூபாய்) முதல் உதவித்தொகை வழங்கலாம். அடுத்து வரும் விண்டோவில் உங்கள் விவரங்களை கொடுத்து நீங்கள் உங்கள் தொகையை அனுப்பலாம். 
நாம் செய்யும் சிறு சிறு உதவிகள் உணவு குடிநீர் இல்லாமல் இருக்கும் அந்த மக்களுக்கு பயன்படும். 




நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

Comments