பதிவர்களுக்காக கூகுள் வழங்கும் புதிய வசதி

இணையம் என்று சொன்னவுடன் நம் அனைவரின் கவனத்திற்கும் முதலில் வருவது கூகுள் தான். இணைய வாசகர்களுக்கு கூகுள் தன சேவையை திறம்பட கொடுத்து வருகிறது. BLOGGER, YOUTUBE , GMAIL போன்றவையும் கூகுளின் ஒரு அங்கமாகும். இதில் பிளாக்கர் என்ற வசதியின் மூலம் தான் நாம் அனைவரும் இலவசமாக வலைப்பூக்களை உருவாக்கி நாம் கருத்துக்களை பகிர்ந்து வருகிறோம். இவர்களுக்கு மேலும் ஒரு வசதியாக புதியதாக +1 BUTTON என்ற ஒன்றை அறிமுக படுத்தப்படவுள்ளது.
பயன்கள்:
  • இந்த பட்டனை நாம் பிளாக்கில் பொருத்தினால் நாம் வாசகர்கள் பதிவை படித்து விட்டு பிடித்திருந்தால் இதில் ஒட்டு போட்டு போகலாம். 
  • இது போல் வாசகர்களிடம் அதிக ஒட்டு வாங்கும் பதிவே கூகுள் தேடலில் முதல் இடத்தில் வர வாய்ப்புள்ளது. 
  •  புதிய தளங்களில் நல்ல இடுகைகள் புறக்கணிக்கப்படுவதை தவிர்க்கவே இந்த வசதியை கூகுள் அறிமுக படுத்தப்பட இருக்கிறது. 
  • சரியாக சொல்ல வேண்டுமென்றால் நாம் திரட்டிகள் போன்றே இது செயல்படும். 
  • ஆனால் திரட்டிகளில் ஒட்டு போடுவது போல் ஒரு குழுவாக சேர்ந்து ஒட்டு போட்டால் அவர்களின் அக்கௌன்ட் நீக்கப்படும் அபாயமும் இருக்கு. 


ஆக்டிவேட் செய்ய :

  • இதற்க்கு முதலில் கீழே உள்ள லிங்கில் க்ளிக் செய்து கூகுள் தளத்திற்கு செல்லுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் உங்களின் ஈமெயில் முகவரி மற்றும் உங்கள் பிளாக்கின் முகவரி கொடுத்து கீழே உள்ள SUBMIT என்ற பட்டனை அழுத்தவும்.




  • விவரங்களை கொடுத்து SUBMIT பட்டனை அழுத்தியவுடன் உங்களின் கோரிக்கை அவர்களுக்கு அனுப்பப்பட்டு விடும். 
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல செய்திவரும் அதாவது அந்த பட்டன் வெளியிட்டவுடன் தங்களின் மெயிலுக்கு அந்த பட்டனை சேர்ப்பதற்கான வழிமுறைகளை அனுப்புகிறோம் எனப்படுவதாகும்.


இந்த பட்டன் வேலை செய்யும் விதம் பற்றி அறிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.


இந்த கூகுள் தளத்திற்கு செல்லும் லிங்க்- Google +1 Button

டுடே லொள்ளு
அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஆனா ஒரு கண்டிஷன் எனக்கு யாரும் திருப்பி வாழ்த்துக்கள் சொல்ல கூடாது சொல்லிபுட்டேன் ஆமா. 

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

Comments