கணினியில் உள்ள டூப்ளிகேட் பைல்களை சுலபமாக நீக்க


இன்றைய நவீன உலகில் கணிப்பொறி என்பது ஒரு இன்றியமையாத பொருளாகிவிட்டது. நாட்டின் விஞ்ஞான துறையில் ஆரம்பித்து சிறு சிறு கடைகள் முதல் மூலை முடுக்குகளிலும் கணிப்பொறி வந்து விட்டது. நாம் கணினியில் நம்முடைய பைல்களை உருவாக்கும் போது நம்மை அறியாமலே ஒரே பைல் ஒன்றிற்கும் மேற்பட்ட பில்கலாக உருவாக்கி விடும். இது போல நம் கணினில் பல டூப்ளிகேட் பைல்கள் சேர்ந்து விடுகிறது. இது நாளுக்கு நாள் அதிகமாகி நம் கணினியில் பல நூற்று கணக்கில் டூப்ளிகேட் பைல்கள் உண்டாகி நம் கணினியின் காலி இடத்தை அபகரித்து கொள்வதோடு மட்டுமின்றி நம் கணினியின் வேகத்தையும் வெகுவாக குறைத்து விடும். ஆகவே அந்த டூப்ளிகேட் பைல்களை எவ்வாறு கண்டறிந்து நீக்குவது என காண்போம். 
  • இந்த வேலையை சுலபமாக செய்ய ஒரு சிறிய இலவச மென்பொருள் உள்ளது. 
  • முதலில் மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொண்டு இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
  • இன்ஸ்டால் ஆகி முடிந்ததும் இந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

  • முதலில் படத்தில் காட்டியுள்ளதை போல நீங்கள் ஸ்கேன் செய்ய விரும்பும் ட்ரைவோ அல்லது போல்டரையோ தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • தேர்வு செய்தவுடன் மேலே உள்ள Scan now என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

  • பட்டனை அழுத்தியவுடன் நீங்கள் தேர்வு செய்த பகுதி ஸ்கேன் ஆக ஆரம்பிக்கும்.

  • ஸ்கேன் ஆகி முடிந்தவுடன் உங்களுக்கு மேலே இருப்பதை போல விண்டோ வரும் அதை க்ளோஸ் செய்து விடுங்கள்.
  • இப்பொழுது உங்களுக்கு உங்கள் கணியில் உள்ள டூப்ளிகேட் பைல்களின் லிஸ்ட் வந்திருக்கும்.
  • அந்த விண்டோவில் SELECTION ASSISTANT என்பதை க்ளிக் செய்து வரும் விண்டோவில் உங்களுக்கு தேவைக்கு ஏற்ப டூப்ளிகேட் பைல்களை தேர்வு செய்து கொள்ளவும்.
  • இதில் ALL BUT IN ONE FILE EACH GROUP என்பதை தேர்வு செய்வது சிறந்தது.
  • MARK என்பதை க்ளிக் செய்தவுடன் அழிக்க வேண்டிய பைல்கள் தேர்வாகி விடும். 
  • அடுத்து FILE REMOVAL என்ற பட்டனை க்ளிக் செய்து அங்கு உள்ள DELETE FILES என்பதை க்ளிக் செய்து டூப்ளிகேட் பைல்களை அளித்து விடுங்கள்.

  • அவ்வளவு தான் வேண்டாத பைல்கள் அளிக்கப்பட்டு விடும். உங்கள் கணினியில் உருவாகும் டூப்ளிகேட் பைல்களை இது போல் மாதம் இருமுறை நீக்கினால் உங்கள் கணினியின் செயல்பாடு திருப்திகரமாக இருக்கும்.


டுடே லொள்ளு 

புதுசா இந்த உலகுக்கு வந்திருக்கேன் அட்லீஸ்ட் ஒரு ஆரத்தி எடுக்க கூட ஆள காணோமே, பக்கத்துல ஏதாவது ஓசில கொடுக்குறாங்களா  


நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

Comments