ஜிமெயிலில் புதிய பயனுள்ள வசதி - Long label names

தற்போது கணினி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இதில் குறிப்பாக செய்தி பரிமாற்றத்திற்கு மெயில்களை பயன்படுத்துவது அதிகரித்து கொண்டே போகிறது. கூகுள் வழங்கும் மெயில் நிறுவனமான ஜிமெயிலை பெரும்பாலனாவர்கள் உபயோகித்து கொண்டு இருக்கிறோம். அதற்கேற்ற படி ஜிமெயில் நிறுவனமும் தினம் ஒரு புதிய வசதிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்கிறது. இந்த நிலையில் ஜிமெயில் நிறுவனம் நமக்கு ஒரு புதிய வசதியை கொடுத்துள்ளது.

நாம் ஜிமெயிலில் நமக்கு வரும் மெயில்களை சுலபமாக வேறுபடுத்தி அறிந்து கொள்ள எதுவாக லேபில் வசதியை பயன்படுத்துகிறோம். இப்படி ஜிமெயிலில் லேபில் உருவாக்கும் போது முன்பு நாம் உருவாக்கும் லேபிளின் பெயர் அதிக பட்சமாக 40 Character மட்டுமே இருக்க வேண்டும். இதனால் வாசகர்களுக்கு தங்கள் லேபில் பெயர் பெரியதாக இருந்தால் அதை கொடுக்க முடியாத சூழ்நிலை இருந்தது. இந்த காரணத்தினால் வாசகர்கள் outlook போன்ற மெயில் சேவைகளுக்கு மாறுவதாக கூகுளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • இதை கருத்தில் கொண்டு ஜிமெயில் நிறுவனம் இந்த பிரச்சினையை தீர்க்க ஒரு புது வசதியை அறிமுக படுத்தி உள்ளது.
  • அதன் படி வாசகர்கள் ஜிமெயிலில் லேபில் உருவாக்கும் போது அதிக பட்சமாக 225 character வரை அதற்க்கு பெயராக வைத்து கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளது.



  • இனி நம்முடைய ஜிமெயில் லேபில் பெயரை 225 Character வரை கொடுத்து பயனடைந்தது கொள்ளலாம்.
டுடே லொள்ளு 
ஏம்மா இப்படி பெல்ட் அடிக்கவா இவ்ளோ செலவு பண்ணி உன்ன ஒலிம்பிக் அனுப்பி இருக்கோம், எங்க நம்ம குரங்கு கூட இது போல அடிக்குமே. பதக்கம் கெடச்சா மாதிரி தான்.



நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

Comments