ஒரு இணைய பக்கத்தில் உள்ள குறிப்பிட்ட சில வரிகளுக்கு மட்டும் தனி URL பெற

இணையம் என்பது உலகம் முழுவதும் பறந்து விரிந்து உள்ளது. ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு பதிவுக்கும் என்று தனித்தனி URL இருக்கும். ஆனால் நம் பதிவிலோ அல்லது நம் நண்பர்களுக்கோ அந்த தளத்தில் உள்ள சில வரிகளை மட்டும் குறிப்பிட்டு காட்ட வேண்டுமென்றால் அந்த பக்கத்தின் URL கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கும் பொது நம் வாசகர்கள் அந்த முழு பக்கத்தையும் படித்து தான் அதிலுள்ள வரிகளை கண்டுபிடிக்க வேண்டும். இது நம் வாசகர்களுக்கு சிரமத்தை உண்டு பண்ணுவதோடு அவர்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கும். இந்த பிரச்சினைகளை தவிர்க்க ஒரு புதிய வசதி உள்ளது. நாம் அந்த பக்கத்தில் உள்ள சில வரிகளை மட்டும் வாசகர்களுக்கு பிரித்து காட்டலாம். இந்த வேலையை சுலபமாக செய்ய ஒரு அழகிய தளம் ஒன்று உள்ளது. 
  • இதற்க்கு முதலில் இந்த தளத்திற்கு http://citebite.com/ செல்லவும். இந்த தளத்திற்கு சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • அந்த பக்கத்தில் Quate என்ற இடத்தில உள்ள கட்டத்தில் நீங்கள் மற்றவர்களுக்கு குறிப்பிட்டு காட்ட வேண்டிய வரிகளை அந்த இணைய பக்கத்தில் இருந்து காப்பி செய்து போடவும்.( இந்த தளம் தமிழ் மொழியில் வேலை செய்யாது.)
  • கீழே SOURCE URL என்ற இடத்தில் அந்த இணையப்பக்கத்தின் URL கொடுத்து கீழே உள்ள MAKE CITEBITE என்பதை க்ளிக் செய்யவும்.
  • க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு குறிப்பிட்ட வரிகளுக்கென்று தன URL வரும் அதை காப்பி செய்து கொள்ளுங்கள்.
  • இப்பொழுது அந்த புதிய URL கொடுத்து அந்த பக்கத்தை திறந்தாள் நீங்கள் QUATE பகுதியில் கொடுத்த அந்த வரிகள் மட்டும் Highlight ஆகி வந்திருக்கும்.
  • உதாரனத்திற்க்கு இந்த பக்கத்தை http://pages.citebite.com/n5r9p1n0pqru பாருங்கள். 


  • அவ்வளவு தான் இந்த புதிய URL மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு நீங்கள் கூறுவதை சரியாக காண்பிக்கலாம்.
  • மீண்டும் ஒருமுறை கூறி கொள்கிறேன் இந்த தளம் தமிழ்மொழியில் வேலைசெய்யாது. ஆங்கிலத்தை சரியாக கண்டறிந்து கொடுக்கும்.

டுடே லொள்ளு 

கொக்ரக்கோ கோ.... ஆறு மணி ஆனா உடனே எழுந்துக்க மாட்டீங்களா நான் வேற தினமும் எழுப்பி விடணுமா.


நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

Comments