ஜிமெயிலில் புதிய வசதி- 25000 முகவரிகள்(Contacts) வரை சேமிக்க

ஜிமெயில் இன்று உலகின் மூலை முடுக்குகளிலும் உள்ள அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு மெயில் சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதுப்புது வசதிகளை அறிமுக படுத்தி அதன் வாசகர்களை மேலும் அதிகரித்து கொள்கிறது.  இதில் சுயநலம் இருந்தாலும் அதனை பயன்படுத்தும் பெரும்பாலனவர்களுக்கும் இந்த வசதி பயன்படுவதால் ஜிமெயில் சேவை பாராட்டுக்குரியதே. சமீபத்தில் தான்  இந்த முறையில் மேலும் ஒரு பயனுள்ள வசதியை நமக்கு அறிமுக படுதிள்ளது.
  • தற்போது ஜிமெயில் உபயோகிக்கும் அனைவரும் புதிய வசதிப்படி தன்னுடைய ஜிமெயில் கணக்கின் முகவரிகள் பகுதியில்(Contact Lists) 25000 முகவரிகள் வரை சேமித்து கொள்ளலாம். 
  • இதற்க்கு முன்னர் ஒருவரால் 10000 முகவரிகளை மட்டுமே சேமிக்க முடியும். 
  • அந்த அளவை தற்போது உயர்த்தி 25000 முகவரிகளை சேமித்து கொள்ளும் வசதியை ஜிமெயில் நிறுவனம் அறிமுக படுத்தியுள்ளது. 
  • இதில் போனசாக இன்னொரு வசதியும் இதனுடன் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. 
  • அதாவது முன்பு ஒரு தனி முகவரியின் அளவு 32KB தான் இருக்க வேண்டும் இது பெரும்பாலானவர்களுக்கு போதுமானதாக இருந்தாலும் ஒரு சிலருக்கு இந்த அளவு போத வில்லை.
  • இதை கருத்தில் கொண்டு ஒரு தனி முகவரியின் அளவை 128KB அளவாக உயர்த்தி உள்ளது.  ஆகவே அனைவரும் ஜிமெயிலின் இந்த அறிய வசதிகளை அறிந்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.
டுடே லொள்ளு 
ஐயா வாங்கோ அம்மா வாங்கோ கைல கழுத்துல இருக்கறத கழட்டி போடுங்கோ.

டே எவன்டா அவன் 10 ரூபா போட்டது விக்கிற வெலவாசில நாங்க குடும்ப நடத்த வேணாமா 

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

Comments