பிளாக்கரில் கருத்து பெட்டியை (Comment Form) ஒரே நிமிடத்தில் அழகாக மாற்ற


நம்முடைய எழுத்துக்களையும் சிந்தனைகளையும் உலகறிய செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பிளாக்கர் இணையதளம் நாம் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாகும். இந்த பிளாக்கர் தளம் இருப்பதாலே நம்மால் ஒருவரின் நிறைகுறைகளை நடுநிலைமையாக சுட்டி காட்ட முடிகிறது.  இதன்மூலம் நாம் உருவாக்கி இருக்கும் பிளாக்கிற்கு வரும் வாசகர்கள் பதிவை பற்றி தங்களின் கருத்துக்களை பதிவு செய்ய கருத்து பெட்டியை பயன்படுத்துகின்றனர். பிளாக்கரில் இந்த கருத்து பெட்டி மிகவும் சிம்பிளாக காணப்படும். அதை எப்படி அழகாக நம் விருப்படி மாற்றுவது என காணலாம்.

  • இதற்க்கு முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • Design க்ளிக் செய்யுங்கள் அடுத்து வரும் விண்டோவில் Templater Designer என்பதை க்ளிக் செய்யுங்கள்.
  • அடுத்து உங்களுக்கு Template Designer ஓபன் ஆகும். அடுத்து அதில் உள்ள Advanced என்பதை க்ளிக் செய்யவும்.
  • இப்பொழுது உங்களுக்கு ஒரு காலி கட்டம் வந்திருக்கும் அதில் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும். (கீழே உள்ள இரண்டு கோடிங்கில் உங்கள் கருத்துபெட்டியின் அளவிற்கேற்ப கோடிங்கை தேர்வு செய்து கொள்ளுங்கள்.)
சிறிய கருத்து பெட்டியை வைத்துள்ளவர்களுக்கு 
.comment-form {
background:#ffffff url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuhcD29Vn0YDcCdtXaaYP8b5xop5n8T-Ou7oNBKkSKe_qsWtDWWRJlnqcEZ6bV8rSKcZ7NEUD2ytjk2HDt2CCVm8dqWBuQtqQV5Lw30yrFNeU8Ob8h-zAEM50nbTPrZtxrh9BkyIbOtK4/s1600/leave+reply+comment+background.jpg) no-repeat;
padding: 100px 5px 0px 25px;
}
பெரிய கருத்து பெட்டியை வைத்துள்ளவர்களுக்கு 
#comment-form {
background:#ffffff url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuhcD29Vn0YDcCdtXaaYP8b5xop5n8T-Ou7oNBKkSKe_qsWtDWWRJlnqcEZ6bV8rSKcZ7NEUD2ytjk2HDt2CCVm8dqWBuQtqQV5Lw30yrFNeU8Ob8h-zAEM50nbTPrZtxrh9BkyIbOtK4/s1600/leave+reply+comment+background.jpg) no-repeat;
padding: 100px 5px 0px 25px;
}
  • மேலே படத்தில் காட்டியுள்ள படி காலி கட்டத்தில் கோடிங்கை பேஸ்ட் செய்து APPLY TO BLOG என்பதை க்ளிக் செய்தால் போதும் உங்களுடைய பிளாக்கின் கருத்து பெட்டி அழகாக மாறிவிடும்.  
  • இந்த கோடிங்கில் சிவப்பு நிறத்தில் கொடுத்துள்ள URL மாற்றி தங்களுக்கு தேவையான படத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த முறையில் நீங்கள் ஒரு முறை சேர்த்து விட்டால் திரும்பவும் வேறு படத்தை மாற்ற வேண்டுமானால் EDIT HTML சென்று தான் மாற்ற முடியும். 
  • முக்கியமான விஷயம் இந்த வசதியை பதிவுகளுக்கு கீழே கருதுபெட்டியை வைத்திருப்பவர்கள் மட்டுமே பெற முடியும்.
  • பதிவிற்கு கீழே கருத்து பெட்டியை வர வைக்க SETTINGS- COMMENTS- COMMENT FORM PLACEMENT - EMBEDED BLOW POST - SAVE SETTINGS கொடுத்தால் உங்கள் பதிவிற்கு கீழே கருத்து பெட்டி வந்து விடும். 
டுடே லொள்ளு 

பின்லேடன் கொல்லப்பட்டதற்கு இது ஏன் இவ்வளவு சந்தோசமா இருக்குன்னு தெரியலையே 
"ஒருவேளை அமெரிக்க வாத்தாக இருக்குமோ"

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

Comments