மே பதினேழு இயக்கத்திற்கு என் நன்றியோடு ஒரு வேண்டுகோள் மற்றும் பதிவர்கள் சந்திப்பு

அரக்கர்களால் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்பட்ட நம் ஈழ தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று ஜூன் 26 -ல் மே பதினேழு இயக்கம் மெரினாவில் கண்ணகி சிலை அருகே மெழுகுவர்த்தி பேரணி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்ததால் நானும் கரூண், சௌந்தர், மற்றும் சிவக்குமார் ஆகிய நான்குபேரும் சென்ட்ரலில் உள்ள அஞ்சப்பரில் லைட்டா சாப்பிட்டு (நம்புங்க லைட் தான்) அங்கிருந்து ஒரு ஆட்டோ புடிச்சி கண்ணகி சிலை போனோம். (ஒரு ஆட்டோக்காரன் அஞ்சப்பர்ல இருந்து வெளிய வந்த எங்கள என்ன நெனச்சானோ தெரியல கண்ணகி சிலை போறதுக்கு 100 ரூபாய் கேட்டான். ங்கொய்யால எங்க கிட்டயேவான்னு சொல்லிட்டு அவனுக்கு டாட்டா சொல்லி வேறு ஆட்டோ புடிச்சோம்)


கண்ணகி சிலை கிட்ட இறங்கினால் பீச் முழுவதும் ஒரே கூட்டம் சரி ஞாயிற்று கிழமை அது தான் நிறைய பேர் காற்று வாங்க வந்திருப்பாங்கன்னு நெனச்சிகிட்டு நாங்க நாலு பெரும்  அந்த புல் தரையில் உட்கார்ந்து பேசிக்கிட்டிருக்க சிதறிக்கிடந்த கூட்டம் முழுதும் அந்த மலர் ஜோதிகிட்ட சேர எங்களுக்கு பெரிய அதிர்ச்சி. அனைவரும் இலங்கை தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த கூட்டம் இவ்வளவு பெரிய கூட்டமா எங்கள் கண்களை எங்களால் நம்ப முடியவில்லை நான் எதிர்பார்த்தது சுமார் 200 லிருந்து 300 வரை வரக்கூடும் என நினைத்து சென்ற எங்களுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி. ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி திடலை சுற்றி வளைத்திருந்தனர். 

நம் தமிழ் மக்களின் தமிழ் உணர்வு அதிகமாகி விட்டதா என ஆச்சரியப்பட்டோம். திடலில் குழுமியிருந்த மக்களில் ராஜபக்சேவிற்கு எதிராகவும் சோனியாகாந்திக்கு எதிராகவும் கோஷங்கள் போடும் பொழுது அவர்களின் கோசங்களில் ஒரு வித வெறி தீப்பிழம்பாக எரிந்ததை காண முடிந்தது. இந்த பாராட்டுக்கள் அனைத்தும் மே பதினேழு இழக்கதிர்க்கே. ஆன்லைனில் உட்கார்ந்து கொண்டு என்னவேனாலும் எழுதிடலாம் ஆனால் களத்தில் இறங்கி வேலை செய்திருக்கிறார்களே அவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை.  கண்டிப்பாக உங்களை இந்த தமிழ் சமுதாயம் மறக்காது. 

நான் விசாரித்த வரை இந்த மே பதினேழு இயக்கம் என்பதை யார் நடத்துகிறார்கள் தலைவர் யார், துணை தலைவர் யார் என்று சரியாக அறிய முடியவில்லை. நம் பிரபல பதிவர் கும்மி இந்த இயக்கத்தில் முக்கியமானவர் என்பதை அறிந்தேன். (இவ்வளவு வேலைகளுக்கு இடையிலும் எங்களை கண்டவுடன் வாருங்கள் சென்று அமருங்கள் என்று அன்போடு கூறினார் மிக்க நன்றி அண்ணே). 100 பேர் உடன் இருந்தாலே(அதுவும் காசுக்காக) பத்திரிக்கை விளம்பரம் பேனர் அதுஇதுன்னு தற்பெருமை அடித்துகொள்ளும் இந்த காலத்தில் இவ்வளவு மக்களின் பேராதரவு இருந்தும் யாரும் எந்தவித ஆர்பாட்டமுமின்றி இருந்ததிலேயே தெரிந்தது இந்த இயக்கத்தின் குறிக்கோள். இது பொது மக்களின் இயக்கம் தமிழனை காப்பாற்ற வேண்டும் என்ற உண்மையான உணர்வு உள்ள ஒவ்வொரு தனி மனிதனின் இயக்கம். அங்கு குழுமி இருந்தவர்களில் 80% மேல் பொது மக்கள் மட்டுமே என்பதை மகிழ்ச்சியோடு கூறிகொள்கிறேன். 

மே பதினேழு இழக்கதின் இந்த செயலை பதிவர்கள் சார்பில் எங்கள் முழுமனதோடு பாராட்டுகிறோம். இந்த வெற்றி மத்தியிலும் மாநிலத்திலும் நம் உடன்பிறப்புகளை அழித்துவிட்டு உறங்குவதை போல நடித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு போலி அரசியல் வாதிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் செயலுக்கான ஆரம்பமாக இருக்கட்டும். நம் உயிர்கள் இழந்த உரிமைகளை திரும்ப அடையும் வரை நம் போராட்டங்களை ஓயக்கூடாது.

அதே வேளையில் மே பதினேழு இயக்கத்திற்கு பொதுமக்களின் பேராதரவு இருக்க நீங்க சில அரசியல் கட்சிகளின் ஆதரவை கேட்கவேண்டாம் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். உண்மையான உணர்வுள்ள சில நல்ல அரசியல் தலைவர்கள் இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து நம் கூட்டங்களுக்கு வரும் பட்சத்தில் நம் இயக்கம் மீதும் அரசியல் சாயம் பூசப்படுமோ என்ற ஒரு சந்தேகம் மனதில் எழுகிறது. அப்படி நம் இயக்கத்தின் மீது அரசியல் சாயம் பூசப்பட்டால் நமக்கு இருக்கும் பொதுமக்களின் ஆதரவு கணிசமாக இழக்க நேரிடும் என்பதை மன வருத்ததுடன் கூறி கொள்கிறேன். 

பிறகு எங்கு பார்த்தாலும் கட்சி கொடியும் பேனர்களும் பறந்து கொண்டிருந்தால் மற்றவர்களை போல தான் பொதுமக்கள் நம்மையும் நினைப்பார்கள், நம்மையும் புறக்கணிப்பார்கள் ஆகவே இனி வர இருக்கும் பொது கூட்டங்களிலும், பேரணிகளிலும் அரசியல் கட்சிகளின் ஆதரவை நல்காமல் இருந்தால் மே பதினேழு இழக்கம் கண்டிப்பாக மேலும் பல சாதனைகளை படைக்கும் என்பதை கூறி கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலே ஏதேனும் தவறாகவோ அல்லது தங்கள் மனம் புண்படும் படியோ கூறி இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும். மனதில் பட்டதை எந்த ஒளிவு மறைவுமின்றி கூறிவிட்டேன். 

டிஸ்கி: பிறகு பதிவர்களில் உண்மை தமிழன் அண்ணன், கே.ஆர்.பி. செந்தில் அண்ணன், பிலாசபி பிரபாகரன் ஆகியோரை சந்தித்து நேரில் பேசிகொன்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. பேசிகொண்டிருந்த சமயத்தில் பெங்களூரில் இருந்து அரவிந்தன் மற்றும் அவருடைய நண்பர் உருப்புடாதவன் (அவர் பேரு தெரியலங்க பிளாக் பேரு) நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள் அவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. 8 மணிக்கு மேல் அங்கேயே ஜாலியாக பேசிகொண்டிருந்த நேரத்தில் உங்க பதிவுலகத்தை இங்கையும் ஆரம்பிச்சிடீங்களா எங்களை அடிக்காத குறையாக மழை கொட்டி எங்களை அங்கிருந்து கலைத்தது. அதோடு முடிந்தது. எங்கள் பதிவர் சந்திப்பு வரும் அவசரத்தில் உண்மை தமிழன் அண்ணன் கிட்ட சொல்லாம வந்துவிட்டேன்.  அண்ணே மன்னிச்சிக்கோங்க....

கடைசியாக என்னை மட்டும் தனியாக விட்டு சென்ற கரூண் மற்றும் சவுந்தரை வன்மையாக கண்டிக்கிறேன். நான் அவுங்கள ஒரு மணிநேரம் காக்க வசீன்னு பதிலுக்கு என்ன காக்க வச்சிட்டு போயிட்டாங்க ரொம்ப நன்றிப்பா... முக்கியமாக கருணுக்கு ரொம்ப நன்றி ஏன்னு கேட்காதிங்க அது கொஞ்சம் சீக்ரெட்...

Comments