பிளாக்கில் புதிய அனிமேட்டட் Facebook Like Box விட்ஜெட் இணைக்க

 பேஸ்புக் கூகுளுக்கு இணையாக அனைவராலும் விரும்பப்படும் ஒரு சமூக இணைய தளம். இதில் உள்ள பல எண்ணற்ற வசதிகளால் பேஸ்புக் தளம் பெரும்பாலானவர்களை அடிமையாக்கி வைத்திருக்கின்றது. சிலர் காலையில் எழுந்து காப்பி குடிக்கிறாங்களோ இல்லையோ இந்த பேஸ்புக் தளத்தை பார்வையிடாமல் இருக்க மாட்டார்கள். இந்த தளம் பதிவர்களுக்கு பல பயனுள்ள விட்ஜெட்டுக்களை வழங்கி வருகிறது. Like Button , Like Box, Send Button இன்னும் பல வசதிகளை வழங்கி வருகிறது. இந்த வசதிகளில் நாம் புதிய வகை அனிமேட்டட் Like Box விட்ஜெட் எப்படி நம் பிளாக்கில் இணைப்பது  என காண்போம்.

இரண்டு சுலபமான படிகளில் நாம் இந்த விட்ஜெட்டை நம் பிளாக்கில் சேர்த்து விடலாம்.

முதல் படி:
  • முதலில் உங்கள் பிளாக்கர் அகௌன்ட்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • Dashboard - Design - Edit Html - பகுதிக்கு சென்று </head> இந்த கோடிங்கை கண்டு பிடிக்கவும்.
  • கோடிங்கை கண்டுபிடித்தவுடன் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து இந்த </head> கோடிற்கு மேலே/முன்னே பேஸ்ட் செய்யவும்.
<script src="https://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.6.1/jquery.min.js" type="text/javascript"></script>
  • இந்த கோடிங்கை சரியான இடத்தில் சேர்த்தவுடன் டெம்ப்ளேட்டை Save செய்யுங்கள்.
இரண்டாம் படி:
  • கீழே உள்ள கட்டத்தில் உங்கள் பேஸ்புக் பக்கத்தின் URL கொடுத்து Add to Blogger என்ற என்ற பட்டனை அழுத்தவும். 











    Your Facebook Page URL :



    Add to Blogger அழுத்தியவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களுடைய பிளாக் பட்டியல் இருக்கும் அதில் எந்த பிளாக்கில் இந்த விட்ஜெட்டை இணைக்க விரும்புகிறீர்களோ அந்த பிளாக்கை தேர்வு செய்து கீழே உள்ள Add Widget என்பதை கொடுத்துவிட்டால் போதும் உங்களுடைய பிளாக்கில் விட்ஜெட் சேர்ந்து விடும்.


    அவ்வளவு தான் புதியவகை அனிமேட்டட் விட்ஜெட் நம் பிளாக்கில் சேர்ந்து விடும்.

    UPDATE

    அனைவரின் கவனத்திற்கு பேஸ்புக்கின் பக்க முகவரியை தான் கொடுக்க வேண்டும் மாறாக Profile URL கொடுத்தால் கீழ் கமென்ட் பகுதில் கூறியுள்ள பிழை செய்தி தான் வரும்.  
    Thanks: way2blogging


    டுடே லொள்ளு 
    இந்த குத்து குத்துறாரே யாருப்பா குரு இவருக்கு ஒருவேளை நம்ம T.R இருக்குமோ 

    Comments