Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

அன்னா ஹசாரேவுக்கு ஆன்லைனில் ஆதரவு தெரிவிக்க

அகிம்சை என்ற ஒரு பிரம்மாஸ்திரத்தை நமக்கு வழங்கியவர் காந்தி மகான். நான் கூட நினைத்ததுண்டு போராட்டம் என்றால் வலிமையாக இருக்க வேண்டும். அவன் அடித்தால் நாமும் திருப்பி அடிக்க வேண்டும் அப்படி இல்லாமல் சும்மா எதுவுமே செய்யாமல் அகிம்சை முறையில் உட்கார்ந்திருந்தா எப்படி போராட்டம் நடத்த முடியும். போராட்டக்காரர்களை சுலபமாக கலைத்து விடுவார்களே என்று ஆனால் என்னுடைய எண்ணத்தை தவிடு பொடி ஆக்கியது அன்னா ஹசாரேவின் அறப் போராட்டம்.
கத்தியின்றி ரத்தமின்றி அகிம்சை வழியில் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு உலகில் பல நாடுகளில் இருந்தும் குவிகிறது. ஒரு ஆள் ஒட்டு மொத்த இந்திய அரசையே கதிகலங்க வைக்கிறார் என்றால் இப்பொழுது புரிகிறது அந்த அகிம்சையின் வலிமை. எத்தனை தடை கற்களை போட்டது, எத்தனையோ பேரை தூது விட்டது அதற்கும் பயனில்லை இவ்வளவு செய்த காங்கிரஸ் கோடிகணக்கில் பணத்தை தருகிறேன் என்று கூறாமல் இருந்திருக்குமா கண்டிப்பாக கூறி இருக்கும் ஆனால் எதற்கும் மசியவில்லை இந்த மாமனிதர் அன்னா ஹசாரே.

இந்திய அரசிடம் சில கேள்விகள்:

1)லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ஏன் இந்த தயக்கம் மாட்டி கொள்வோம் என்ற பயமா?

2)ஜனநாயக நாட்டில் ஒருவன் தவறு செய்தால் தட்டி கேட்பது உரிமையே. மக்களுக்கு சேவை செய்ய மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட அரசியல் வாதிகளை கேட்க அதிகாரம் இல்லையா?

3) அரசியல் வாதிகளில் இருந்து அரசு அதிகாரிகள் வரை சம்பலமாக பெறுவது காட்டிலும் மேட்டிலும் உழைத்து சம்பாதிக்கும் ஒவ்வொரு பாமரனின் வரி பணத்தில் சம்பளம் கொடுக்கும் முதலாளி அவனுக்கு வேலை செய்பவனை தட்டி கேட்க அதிகாரம் இல்லையா?

4)மக்களுக்காக உழைக்க தான் நாங்க உள்ளோம் என்று கூறுவது எல்லாம் வெறும் நடிப்பா?

5)ஜன நாயக பிரதமர் எந்த தவறு வேண்டுமானாலும் செய்யலாம் அதை யாரும் தட்டி கேட்க முடியாது என்று ஏதாவது சட்டம் இருக்குதா?

ஹசாரேவுக்கு ஆன்லைனில் ஆதரவு சேர்க்க: 


வயதான இந்த பெரியவரை பார்த்து மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அரசாங்கமே பயப்பட காரணம் அவருக்கு உலகெங்கிலும் இருந்து பெருகி வரும் ஆதரவு தான். இரு கைகள் ஆரமிபித்த இந்த போராட்டம் இப்பொழுது கோடிக்கணக்கான கைகள் இனைந்து வலு பெற்றுள்ளது. மேலும் நம்முடைய கரங்களையும் கொடுத்து மேலும் வலு சேர்க்கலாம் வாருங்கள். ஆன்லைனில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்க

India Against Corruption என்ற ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் லோக்பால் மசோதாவை பற்றியும் போராட்ட நிகழ்வுகளை பற்றியும் பதிந்துள்ளனர். இந்த தளத்தில் Register தளத்தில் பகிரப்படும் தகவல்களை ஈமெயிலில் பெறலாம். 

பேஸ்புக்கில் ஆதரவு தெரிவிக்க - India Against Corrution , Anna Hazare சென்று Like பட்டனை அழுத்தி உங்கள் ஆதரவினை தெரிக்கலாம். 

த்விட்டரில் பின் தொடர - Janlokpal

ஆர்குட்டில் ஆதரவு அளிக்க - India Against corruption

ஆன்லைன் கையெழுத்து படிவத்தில் தெரிவிக்க - SUPPORT-ANNA-HAZARE

மேலும் உங்கள் ஆதரவை மொபைல் மூலம் தெரிவிக்க இங்கு கிளிக் செய்யுங்கள் .

இந்த செய்தியை நண்பர்களுக்கும் பரப்புவோம் ஊழல் இல்லாத இந்தியாவில் உருவாக்க துணை நிற்போம்.

வாழ்க பாரதம்!!! வாழ்க ஜனநாயகம்!!! வந்தே மாதரம்!!!

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

15 comments :

 1. நன்றி நண்பரே ..

  பதிவுலக நண்பர்கள் அனைவரும் ஆதரவு தருவோம்

  வருங்கால குழந்தை வளமானதாக உருவாகட்டும்...

  நட்புடன்
  சம்பத்குமார்
  குழந்தை வளர்ப்பு கலைகள்

  ReplyDelete
 2. ஊழலற்ற இந்தியா உருவாக நம்மாலான முயற்சிகள் செய்வோம்.

  ReplyDelete
 3. தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்.

  ReplyDelete
 4. அருமையான சேவை .
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

  வாழ்க பாரதம்.

  வாழ்க மகாத்மா .

  ReplyDelete
 5. வாழ்க பாரதம்!!! வாழ்க ஜனநாயகம்!!! வந்தே மாதரம்!!!//

  ReplyDelete
 6. வணக்கம் பாஸ்,
  நல்லதோர் பதிவு, நானும் என்னுடைய பங்களிப்பினை அறப் போர் வெல்வதற்கு ஆன்லைன் மூலம் வழங்குகிறேன்.

  ReplyDelete
 7. இந்திய அரசுக்கான கேள்விகள் நியாயம் செறிந்தவை..கையில் சாவியை வைத்துகொண்டிருக்கும் இந்த அரசியல் திருடர்கள் என்ன பதில் சொல்லக்கூடும் இந்த நியாயமான கேள்விகளுக்கு..

  ReplyDelete
 8. //ஊழலற்ற இந்தியா உருவாக நம்மாலான முயற்சிகள் செய்வோம்.//

  ReplyDelete
 9. வாழ்க பாரதம்!!! வாழ்க ஜனநாயகம்!!! வந்தே மாதரம்!!!

  ReplyDelete
 10. ஊழலற்ற இந்தியா உருவாக நம்மாலான முயற்சிகள் செய்வோம்

  ReplyDelete
 11. ஊழலற்ற இந்தியாவை உருவாக்க உறுதுணையாய் இருப்போம் ...வந்தே மாதரம் !!!

  ReplyDelete
 12. ஊழலற்ற இந்தியா உருவாக்குவோம்.

  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com

  ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press