Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

உங்கள் பிளாக்கிற்கு FeedFlare வசதியை ஆக்டிவேட் செய்ய

நம்முடைய பிளாக் பதிவுகளை வாசகர்கள் ஈமெயில் பெற வசதியாக  பதிவுகளை feedburner அப்டேட் ஆகும் படி அமைத்து அதன் மூலமாக வாசகர்களுக்கு அனுப்புவோம். இதன் மூலம் நம் பதிவு பிடித்து இருந்தால் வாசகர்கள் நம் தளத்திற்கு வந்து பதிவை படித்து செல்வார்கள். அப்படி அனுப்பும் பொழுது ஈமெயில் வாசகர்களுக்கு மேலும் சில வசதிகளை வழங்குவது தான் இந்த Feedflare என்பதாகும். உங்களுடைய கணக்கிலும் இந்த வசதியை ஆக்டிவேட் செய்வதனால் மேலும் சில வசதிகளை ஈமெயில் வாசகர்கள் பெற முடியும்.  இந்த Feedflare வசதியை ஆக்டிவேட் செய்வதனால் வாசகர்கள் நம்முடைய பதிவுகளை சமூக தளங்களில் பகிரும் வசதியும் மற்றும் அவர்களுடைய நண்பர்களுக்கு நண்பர்களுக்கு பதிவை ஈமெயில் அனுப்பும் வசதி போன்ற வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கலாம்.

கீழே உள்ள படத்தில் நான் கட்டம் போட்டு காட்டி இருக்கும் பகுதியை பாருங்கள் அது தான் FeedFlare வசதி.


பிளாக்கரில் Feed flare ஆக்டிவேட் செய்ய :

  • இந்த வசதியை ஆக்டிவேட் செய்ய உங்கள் Feedburner அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்னர் Optimize பட்டனை கிளிக் செய்யுங்கள்.
  • அடுத்து கீழே உள்ள Feedflare என்ற லின்க்கை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இதில் Site, Feed என்ற இரு பகுதிகள் இதில் Site என்பதில் கிளிக் செய்தால் அந்த வசதி உங்கள் பிலாக்கிலும் அல்லது Feed என்பதில் கிளிக் செய்தால் அந்த வசதி feedburner ஈமெயிலிலும் சேர்ந்து விடும். உங்களுக்கு தேவையான வசதிகளை கிளிக் செய்து கொள்ளுங்கள். 
  • தேவையான வசதிகள தேர்வு செய்தவுடன் கீழே உள்ள Save என்பதை அழுத்தி Feedflare வசதியை ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவு தான் இனி உங்களுடைய பதிவு ஈமெயிலில் படிக்கும் வாசகர்களுக்கு கீழே இருப்பதை போல பல வசதிகள் சேர்ந்து விடும். அதை அவர்கள் நண்பர்களுக்கு பகிரும் பட்சத்தில் உங்கள் பிளாக்கின் Pageviews அதிகரிக்கும்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

12 comments :

  1. இந்த புதிய வசதி பதிவர்கள் அவர்களின் பதிவுகள் பற்றிய தகவலை மற்றவர்களுக்கு விரைவில் தெரியப்படுத்துவதில் உதவியாக இருக்கும். பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  2. தமிழ்மணத்தில் வாக்களிக்கவில்லை.. பின்னர் வருகிறேன்..

    ReplyDelete
  3. சூப்பரான தகவல் பாஸ்,
    நானும் Feedflare இணைக்க ட்ரை பண்றேன் பாஸ்,

    ReplyDelete
  4. மாப்ள சூபருய்யா...நன்றி!

    ReplyDelete
  5. தேவையான தகவல்...

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  6. உபயோகமான தகவல் . தகவலுக்கு நன்றி .

    ReplyDelete
  7. பயனுள்ள தகவல் அருமை .மிக்க நன்றி பகிர்வுக்கு ..

    ReplyDelete
  8. அட இது புதுசா இருக்கே!

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press