Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

Link Within Related post விட்ஜெட்டை பிளாக்கரின் முகப்பு பக்கத்தில் தெரியாமல் மறைக்க

பிளாக்கர் பதிவுகளில் தொடர்புடைய இடுகைகளை காண்பிக்க பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது Link Within தளத்தின் விட்ஜெட்டை தான். இந்த விட்ஜெட்டில் சில பிரச்சினைகள் உள்ளது அனைத்து பதிவுகளுக்கு ஒரே மாத்ரியான பதிவுகளை காட்டும், பதிவுகளை அழித்த பிறகும் அந்த பதிவின் சுட்டியை காட்டி கொண்டிருக்கும் மற்றும் முகப்பு பக்கத்திலும் இந்த விட்ஜெட் தெரியும். முகப்பு பக்கத்தில் தெரிவதால் உங்கள் பிளாக்கின் தோற்றம் அழகற்று காணப்படும். பெரும்பாலான வாசகர்கள் இது போன்று தெரிவதை விரும்புவதில்லை. ஆதலால் முகப்பு பக்கத்தில் இந்த விட்ஜெட்டை மறைத்து போஸ்ட் பகுதியில் மட்டும் எப்படி தெரிய வைப்பது என பார்ப்போம்.

1) முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.

2) ஏற்க்கனவே நீங்கள் Link within விட்ஜெட்டை உங்கள் பிளாக்கரில் இணைத்து இருந்தால் Design சென்று அந்த விட்ஜெட்டை ஓபன் செய்து அதில் உள்ள கோடிங்கை முழுவதுமாக காப்பி செய்து பின்னர் அதில் Remove என்ற பட்டனை கிளிக் செய்து அந்த விட்ஜெட்டை நீக்கி விடுங்கள்.


3) பின்னர் நீங்கள் காப்பி செய்த கோடிங்கை Note pade-ல் சேமித்து கொள்ளுங்கள்.

4) அடுத்து திரும்பவும் உங்கள் பிளாக்கரில் நுழைந்து Design- Edit Html - Expand Widget Template சென்று இந்த ஒரு வரி கோடிங்கை </body> கண்டுபிடிக்கவும்.

5) அடுத்து கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து இந்த வரிக்கு </body> மேலே பேஸ்ட் செய்யவும்.
<b:if cond='data:blog.pageType == "item"'>
Replace Link within code here
</b:if>
6)  அடுத்து நீங்கள் Notepad -ல் சேமித்த Link within கோடிங்கை காப்பி செய்து Paste Link within code here இந்த இடத்தில் பேஸ்ட் செய்யவும்.

7) முடிவில் உங்களுடைய கோடிங் கீழே படத்தில் இருப்பதை போல இருக்க வேண்டும்.
8) படத்தில் இருப்பதை போல உங்களுடைய கோடிங் இருந்தால் நீங்கள் இதுவரை செய்த அனைத்தும் சரியே அதனால் கீழே உள்ள SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தி விட்ஜெட்டை சேமித்து கொள்ளுங்கள். 

அவ்வளவு தான் இனி உங்கள் பிளாக்கின் முகப்பு பக்கத்தில் Link Within Related post widget தெரியாது. போஸ்ட் பகுதியில் மட்டுமே தெரியும் உங்கள் டேம்ப்லேட்டிங் அழகும் கெடாது. 

பதிவில் மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கமேண்டில் தெரிவிக்கவும்.

//**இதையும் பாருங்கள்**/

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

16 comments :

  1. தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டாச்சி...

    ReplyDelete
  2. செக் பண்ணிட்டு சொல்றேன்...

    ReplyDelete
  3. எல்லா பதிவுகளுக்கும் ஒரே மாதிரியான லிங்க் வருவதால், அதனை நீக்கி வைத்திருந்தேன். உங்கள் ஆலோசனையை பயன்படுத்தி பார்க்கிறேன்..

    ReplyDelete
  4. உண்மையிலேயே நான் தேடிய பதிவு தான் மிக்க நன்றி சகோதரம்..

    ReplyDelete
  5. சூப்பர் பதிவு பாஸ்,
    நான் இப்பவே என் ப்ளாக்கிலும் இதனை எடிற் பன்ணப் போகிறேன்.

    ReplyDelete
  6. அருமையான தகவல் நண்பரே

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. பயனுள்ள பகிர்வு நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. Nice Post!
    Happy Gokulaastamai!
    best Wishes!

    ReplyDelete
  9. நன்றி சசிக்குமார்!கோடிங் எழுத்துக்களை எங்கே பேஸ்ட் செய்வது என்ற சந்தேகத்தை இந்தப்பதிவில் காட்டிவிட்டீர்கள் நன்றி!

    ReplyDelete
  10. Super கலக்கிட்டீங்க

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press