கூகுள் Translate விட்ஜெட்டை தமிழ் வலைப்பூக்களில் இணைக்க #ட்ரிக்ஸ்

இந்த விட்ஜெட்டை நம்முடைய பிளாக்குகளில் இணைப்பதால் நம் தளத்திற்கு வரும் வாசகர்கள் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்து படிக்கலாம். இதனால் பல்வேறு மொழிகள் தெரிந்த அனைவருக்கும் நாம் பகிரும் தகவல் சென்றடையும். மொழி தெரியாமல் நம் பிளாக்கை படிக்காமல் விட்டு சென்றவர்களும் இனி எந்த வித பிரச்சினையுமின்றி அவர்களுக்கு தெரிந்த மொழியில் மொழிமாற்றம் செய்து படித்து கொள்ளலாம். இதனால் நம் பிளாக்கின் வாசகர்கள் அதிகரிக்கவும் நல்ல வாய்ப்புள்ளது. 
  • கூகுள் இணைய தளங்களிலும், வலைப்பூக்களிலும் இந்த வசதியை கொண்டு வர Translate விட்ஜெட்டை வழங்குகின்றனர். ஆனால் இதில் என்ன பிரச்சினை என்றால் நம் வலைப்பக்கத்தின் மொழியை தேர்வு செய்யும் இடத்தில் தமிழ் மொழி இடம்பெற வில்லை. 
  • ஆதலால் தமிழ் மொழி வலைதளங்கள் இந்த வசதியை பெற முடியாமல் இருந்தது.
  • ஆனால் கோடிங்கில் சிறு மாற்றம் செய்தால் போதும் எந்த பிரச்சினையுமின்றி தமிழ் வலை தளங்களிலும் இந்த விட்ஜெட்டை இணைத்து கொள்ளலாம். 
பிளாக்கில் இணைக்க: 
  • முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். 
  • Design-Add Gadget -Html JavaScript - சென்று மாற்றம் செய்யப்பட்டிருக்கும் கோடிங்கை காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்யவும்.  
<div id="google_translate_element"></div><script>
function googleTranslateElementInit() {
new google.translate.TranslateElement({
pageLanguage: 'ta',
layout: google.translate.TranslateElement.InlineLayout.HORIZONTAL
}, 'google_translate_element');
}
</script><script src="//translate.google.com/translate_a/element.js?cb=googleTranslateElementInit"></script>
  • அவ்வளவு தான் கீழே உள்ள SAVE பட்டனை அழுத்தி விட்டால் போதும் கூகுளின் Translate விட்ஜெட் உங்கள் பிளாக்கில் இனைந்து விடும். வாசகர்கள் அவர்களுக்கு தேவையான மொழிகளில் நம் பிளாக்கை மொழிமாற்றம் செய்து படித்து கொள்ளலாம். 

டிஸ்கி: ஒருவேளை இந்த விட்ஜெட்டில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும், பின்பக்கம் நிறத்தை மாற்ற வேண்டும், எழுத்துரு அளவை மாற்ற வேண்டும் இப்படி ஏதாவது நினைத்தால் இந்த லிங்கில் Translate Widget சென்று மாற்றி கொள்ளுங்கள். முடிவில் கோடிங்கில் மட்டும் Page Language என்பதில் ta என்பதை தேர்வு செய்யவும்.

Comments