Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

நோக்கியாவின் மெகா பரிசு போட்டி!! ரூபாய் 4,500,000 வெல்ல அறிய வாய்ப்பு

பிரபல மொபைல் நிறுவனமான நோக்கியாவி பற்றி அனைவரும் அறிந்து இருப்போம். உலகம் முழுவதும் மொபைல் வர்த்தகத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நிறுவனம். இந்த நோக்கியா நிறுவனத்தின் ரிங்டோன் அனைவரும் கேட்டு இருப்போம் உலகளவில் மிகவும் பிரபலமான ரிங்க்டோன் கேட்பதற்கே மிகவும் இதமாக இருக்கும். இப்பொழுது நோக்கியா நிறுவனம் புதிதாக 2012 ஆண்டிற்கான விண்டோஸ் மொபைல்களை அறிமுக படுத்த இருக்கிறது இந்த மொபைல்களில் உபயோகப்படுத்த புதுவைகையான நோக்கியா ரிங்க்டோனை உபயோகப்படுத்த உள்ளது.

இந்த நோக்கியாவின் புதிய ரீமிக்ஸ் ரிங்க்டோனை வடிவமைக்கும் பொறுப்பை வாசகர்களுக்கு போட்டியாக அறிவித்துள்ளது நோக்கியா நிறுவனம். உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நீங்கள் இந்த போட்டியில் பங்கு பெறலாம் இதற்கான எந்த வரம்புகளும் இல்லை. இது போன்று வாசகர்களிடம் கொடுப்பது இதுவே முதல் முறை. போட்டியின் பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா $10,000( இந்திய மதிப்பில் ரூபாய் 4500000 மேல்)

போட்டிக்கான விதிமுறைகள்:
  • நீங்கள் புதுவிதமான அனைவரையும் கவரக்கூடிய வகையில் ரிங்டோன் இருக்க வேண்டும்.
  • முதலில் ஐந்து நபர்களை இறுதி போட்டிக்கு தேர்வு செய்வார்கள். இதிலிருந்து ஒருவரை வெற்றியாளராக அறிவிப்பார்கள். 
  • இறுதியில் வெற்றி பெறுபவருக்கு $10,000 டாலரும்(ரூபாய் 4,500,000 மேல்) மற்ற நான்கு பேருக்கு தலா $1,000டாலரும் (ரூபாய் 45,000 மேல்) பரிசளிப்பார்கள்.
  • கடைசி தேதி அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் உங்களுடைய ரிங்டோன் அனுப்பி விட வேண்டும்.
உதவிக்கு கீழே உள்ள வீடியோவை பாருங்கள் 


போட்டியில் கலந்து கொள்ள Nokia Audio Draft தளத்திற்கு செல்லுங்கள். அங்கு Submit a New Entry என்ற பட்டனை அழுத்தி உங்களுடைய ரிங்க்டோனை அனுப்புங்கள் பரிசை தட்டி செல்லுங்கள்.

போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து நண்பர்களுக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.


இந்த பதிவு பலரை சென்றடைய கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஓட்டு போட்டு செல்லவும்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

14 comments :

  1. சசி... அன்னைக்கு ஒரு பாட்டு பாடுனியே.. அது சூப்பரா இருந்துச்சு. அதை ரிங் டோனுக்கு அனுப்பிடு.

    ReplyDelete
  2. ஆஹா.இதல்லவா பதிவு

    ReplyDelete
  3. Sookka enakku illai......enakku illai.......

    ReplyDelete
  4. இனிய மதிய வணக்கம் பாஸ்,
    நல்லதோர் பதிவு..

    போட்டியில் வெற்றி பெற உள்ளோருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வணக்கம் சார்! கும்புடுறேனுங்கோ! இனிய புதன்கிழமை வாழ்த்துக்கள்!

    ஆஹா, நோக்கியாவின் பெருமைமிகு வாடிக்கையாளர் என்ற வகையில் அந்தப் போட்டியும், இந்தப் பதிவும், அந்த வீடியோவும் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு சார்!

    ReplyDelete
  6. தொர.. விளம்பரமெல்லாம் போட்டிருக்கு?

    ReplyDelete
  7. போட்டியில் வெற்றி பேற உள்ளவருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. ஹே....சூப்பர் நியூஸ்

    ReplyDelete
  9. மாய உலகம் said...
    இன்றைய வலைச்சரத்தில் தங்களை
    அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
    நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press