Google Dictionary சேவையை நிறுத்தியது கூகுள் நிறுவனம் காரணம்?

கூகுள் நிறுவனம் இணையத்தில் ஏராளமான வசதிகளை இலவசமாக வழங்கி கொண்டு உள்ளது. இணையத்தில் கூகுளை பயன்படுதாதவர்கள் இருப்பது அரிதே. அந்த கூகுளின் மிகப்பயனுள்ள ஒரு சேவை தான் இந்த கூகுள் டிக்சனரி. இந்த தளத்தை பெரும்பாலானவர்கள் உபயோகித்து கொண்டு இருந்தனர்.  இந்த தளத்தில் நமக்கு தெரியாத அல்லது பொருள் புரியாத வார்த்தைகளின் பொருளை அறிய பெரும்பாலானவர்கள் உபோகப்படுதி கொண்டிருந்தனர்.
ஆனால் இந்த சேவையை திடீரென்று நிறுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். இனி நீங்கள் கூகுள் டிக்சனரி தளத்திற்கு சென்றால் அந்த தளம் உபயோகத்தில் இல்லை என்ற செய்தி தான் வருகிறது. இந்த லிங்கில் சென்று பாருங்கள் கீழே இருப்பதை போன்ற செய்தி தான் வருகிறது.


இந்த தளத்தை எந்தவித முன் அறிவிப்புமின்றி மூட காரணம் வாசகர்வரத்து குறைந்ததாக இருக்கலாம், இல்லை கூகுள் மொழிமாற்றி வசதி(Google Translater) பெரும்பாலான மொழிகளுக்கு வந்து விட்டதாலும் இந்த தளத்தை மூடி இருக்கலாம் என கருதப்படுகிறது.

உங்களுக்கு ஏதேனும் காரணம் தெரிந்தால் கீழே கருத்துரையில் கூறவும்.

Comments