பேஸ்புக்கின் புதிய அசத்தலான தோற்றம் ஆக்டிவேட் செய்ய

நேற்று பேஸ்புக்கின் F8 நடைபெற்றது இதில் பல புதிய வசதிகளை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஒன்று தான் timeline எனப்படும் பேஸ்புக்கின் புதிய தோற்றம் இந்த புதிய தோற்றம் கண்டிப்பாக அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதியை இப்பொழுது Developer மட்டும் வழங்கி உள்ளது. அதை உங்கள் கணக்கிலும் அந்த புதிய மாற்றத்தை,தோற்றத்தை கொண்டு வருவது எப்படி என பார்ப்போம்.
  • இதற்க்கு முதலில் Facebook Developer இந்த லிங்கில் செல்லவும். 
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல ஒரு விண்டோ வந்தால் அதில் உள்ள Allow கொடுத்து உள்ளே செல்லவும். 
  • இனி கீழே ஒவ்வொரு படத்திலும் குறிப்பிட்டு காட்டி இருக்கும் படி செய்யுங்கள். 
  • உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும் அதில் App Display Name, App namespace போன்ற இரு பகுதி இருக்கும் அதில் உங்களுக்கு தோன்றிய பெயரை கொடுக்கவும். அதில் App Namespace என்ற இடத்தில நீங்கள் கொடுக்கும் பெயர் Available என்று பச்சை நிறத்தில் வரவேண்டும். 

  • அடுத்து Security Check என்ற பகுதியில் verification code நிரப்ப சொல்லும் அதை சரியாக கொடுத்து submit பட்டனை அழுத்தவும். அடுத்து உங்களுடையை App ரெடியாகி விடும். 
  • அந்த விண்டோவில் உள்ள Open Graph என்ற லிங்கை அழுத்தவும். 

  • அதில் உள்ள சிறு கட்டங்களில் ஏதோ ஒன்றை கொடுத்து Get Started என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும்.அதில் கடைசியில் உள்ள Save Changes என்ற பட்டனை அழுத்தவும். 
  • இதற்க்கு அடுத்து ஓபன் ஆகும் இரண்டு விண்டோக்களிலும் இதே பட்டனை அழுத்தவும். முடிவில் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 

  • மேலே இருப்பதை போல விண்டோ வந்தால் இதுவரை நீங்கள் செய்த அனைத்தும் சரியே. இப்பொழுது உங்கள் பேஸ்புக்கின் முகப்பு பக்கத்திற்கு செல்லுங்கள். 
  • உங்கள் பேஸ்புக்கின் புரொபைல்பக்கத்திற்கு செல்லுங்கள். உங்களுக்கு ஒரு அறிவிப்பு செய்தி இருப்பதை காண்பீர்கள். 
  • அந்த பட்டனை அழுத்திய அடுத்த வினாடியே உங்களின் பேஸ்புக் கணக்கு புதிய தோற்றத்தில் மாறிவிடும். சில கூடுதல் வசதிகளையும் பெறலாம். 

  • இந்த புதிய தோற்றம் Developer பிரிவில் சேர்ந்துள்ளவர்களுக்கு மட்டும் தான் தெரியும். மற்றவர்களுக்கு பழைய தோற்றம் தான் தெரியும். 
ஏற்கனவே பதிவு பெரியதாகி விட்டதால் இதில் உள்ள வசதிகள், எப்படி உபயோகிப்பது போன்ற தகவல்களை அடுத்த பதிவில் பாருங்கள். 

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் பலரையும் சென்றடைய கீழே உள்ள ஓட்டு பட்டையில் ஓட்டு போட்டு செல்லவும்.

Thanks - How to activate New Facebook design Timeline Now

Comments