பேஸ்புக் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகள்? Resume அனுப்புவது எப்படி?

இன்று என்ன தான் படித்தாலும் வேலை கிடைப்பது என்பது பெரிய விஷயமாக உள்ளது. பெருகி வரும் மக்கள் தொகையாலும், கல்வி வளர்ச்சியாலும் சிறந்த வேலையை பெற மிகப்பெரிய போராட்டமே நிலவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான என்ஜினியர்களும், மருத்துவர்களும் உருவாகிக்கொண்டு உள்ளனர். குறிப்பாக கம்யூட்டர் என்ஜீனியர்கள் அதிக அளவில் உருவாகி கொண்டு உள்ளனர். பிரபல சமூக இணைய தளமான பேஸ்புக் தளத்தை பற்றி அனைவரும் அறிந்து இருப்பீர்கள். அந்த தளத்தில் நூற்றுகணக்கான வேலை காலி இடங்கள் உள்ளது. தகுதி வாய்ந்த திறமை ,அனுபவம் மிக்க பணியாளர்களை தேடி கொண்டுள்ளது பேஸ்புக் தளம் அந்த தளத்தில் எப்படி பதிவு செய்வது என பார்ப்போம்.

  • பேஸ்புக் தளம் இதற்க்காக ஒரு தனி பக்கத்தை உருவாக்கி உள்ளது. 
  • முதலில் இந்த https://www.facebook.com/careers இந்த பக்கத்திற்கு செல்லுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • இதில் பேஸ்புக் நிறுவனத்தில் தேவைப்படும் பல்வேறு நாடுகளுக்கும் தேவையான அனைத்து காலி பணியிடங்கள் காட்டும். இவற்றை நாடுகளின் படி அறிய மேலே நான் குறிப்பிட்டு காட்டியுள்ள by location என்பதில் டிக் செய்தால் நாடுகளின் வரிசைப்படி பணியிடங்களை பார்த்து கொள்ளலாம். 
  • இதில் இந்தியாவில் ஹைத்ராபாத் நகரத்தில் வேலைவாய்ப்பு காலி இடங்கள் உள்ளது. 
  • உங்கள் தகுதிக்கு ஏற்ற வேலையை தேர்வு செய்தவுடன் அந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.

  • நீங்கள் ஒரு பிரிவை கிளிக் செய்தவுடன் இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன என்ற லிங்க் இருக்கும் அதில் உங்கள் தகுதிக்கு ஏற்றதை கிளிக் செய்யுங்கள். உடனே உங்களுக்கு அந்த வேலைக்கான தகுதிகள் காட்டப்படும் அதை முழுவதும் படித்து நீங்கள் அந்த பணியிடத்திற்கு தகுதியை பெற்று இருந்தால் அதில் உள்ள Apply for this Position என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
  • உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் 

  • இதில் உங்களின் விவரங்களை கொடுத்து கீழே உள்ள Choose File என்பதை அழுத்தி உங்களுடைய Resume அப்லோட் செய்து கொள்ளுங்கள். முடிவில் கீழே உள்ள Submit Application என்ற பட்டனை அழுத்துங்கள்.
அவ்வளவு தான் உங்களுடைய விண்ணப்பம் பேஸ்புக் நிர்வாகத்தினருக்கு சென்று விட்டது. நீங்கள் அனுப்பிய தகவல்கள் தகுதி வாய்ந்ததாக இருந்தால் உங்களை தொடர்பு கொள்வார்கள். 

வேலைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம்!!!

ஜாதி மொழி இனம் மதம் நிறம் எவற்றையும் கருத்தில் கொள்ளாமல் தகுதி ஒன்றை மட்டுமே அடிப்படையாக வைத்து தகுதியான நபர்களுக்கு வேலை வழங்கும் பேஸ்புக் நிறுவனத்திற்கு என் மனமார்ந்த நன்றியுடன் பாராட்டுக்களும். 

இந்த செய்தி பலரை சென்றடைய கீழே உள்ள ஓட்டு பட்டையில் ஓட்டு போட்டு செல்லுங்கள்.

Comments