கணினியில் அனைத்து மென்பொருளையும் சுலபமாக Shortcut Keys மூலம் திறக்க

நாம் கணினியில் கட்டண மென்பொருட்கள், இலவச மென்பொருட்கள் என பல்வேறு வகையான மென்பொருட்களை இன்ஸ்டால் செய்து உபயோகிக்கிறோம். இந்த மென்பொருட்களை நாம் தினமும் ஓபன் செய்ய டெஸ்க்டாப்பில் உள்ள அந்த மென்பொருளின் ஷார்ட் கட் ஐகான் மூலம் திறப்போம் அல்லது Start - Windows - Programs - சென்று திறப்போம் இப்படி கணினியில் மென்பொருளை திறக்க பல வழிகள் உண்டு. அதில் ஒன்று தான் நாம் இப்பொழுது பார்க்க போகும் Short Cut Key உருவாக்கி அதன் மூலம் திறப்பது. உலகில் பெரும்பாலான கணினிகளில் உபயோகிக்கப்படும் விண்டோஸ் இயங்கு தளத்தில் இதற்க்காக ஒரு வசதியை அளித்துள்ளனர்.


பயன்கள்:
  • இதற்க்காக நீங்கள் எந்த மென்பொருளும் கணினியில் இணைக்க வேண்டியதில்லை.
  • தினமும் உபயோகப்படுத்தும் மென்பொருட்களுக்கு செட் செய்து விட்டால் மவுஸ் பயன்படுத்தாமல் Short Cut key கொடுத்தாலே ஓபன் ஆகி விடும்.
  • இந்த வசதியை உருவாக்க பெரிய தொழில்நுட்ப அறிவு எதுவும் பெற்றிருக்க தேவையில்லை சுலபமாக செய்து விடலாம்.
Shortcut Key உருவாக்கும் முறை:
  • நீங்கள் shortcut Key உருவாக்க நினைக்கும் மென்பொருள் மீது வலது கிளிக் செய்து Properties கிளிக் செய்யுங்கள்.
  • உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Shortcut tab தேர்வு செய்து கொள்ளுங்கள். 
  • அந்த டேபில் Shortcut Key என்ற பகுதியில் None என்று இருக்கும் அதில் கிளிக் செய்து ஏதாவது ஒரு லெட்டரை அழுத்துங்கள்.
உதாரணமாக 1 அழுத்தினால் உங்களுடைய shortcut key Ctrl+Alt+1 என வரும். A அழுத்தினால் Ctrl+Alt+A என வரும் இப்படி உங்களுக்கு தேவையான கீயை செட் செய்து கொள்ளுங்கள்.

  • உங்களுக்கு தேவையான கீயை தேர்வு செய்தவுடன் கீழே உள்ள Apply- Ok கொடுத்து விடுங்கள்.
  • அவ்வளவுதான் இப்பொழுது நீங்கள் உருவாக்கிய shortcut key அழுத்துங்கள் அந்த மென்பொருள் உடனே ஓபன் ஆகிவிடும். 
  • இப்படி பல மென்பொருட்களுக்கு நீங்கள் கீயை உருவாக்கி கொள்ளலாம்.  
நண்பர்களே இந்த பதிவு பிடித்து இருந்தால் கீழே ஓட்டு பட்டைகளில் ஓட்டு போட்டு செல்லவும். 


Tech Shortly

Comments