மைக்ரோசாப்டின் Windows 8 இலவசமாக டவுன்லோட் செய்ய - Developer Preview

இணையத்தில் சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் தான் இந்த Windows 8 மென்பொருள். மைக்ரோசாப்ட் இந்த மென்பொருளை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த மென்பொருளில் பல வசதிகள் நிறைந்து உள்ளதாம். சமீபத்தில் தான் Windows7 மென்பொருளை வெளியிட்டது. அது கணினி உலகில் மிகுந்த வரவேற்ப்பை பெற்று வருவாயை அள்ளி குவித்தது. அதற்குள் மேலும் பல வசதிகளை புகுத்தி Windows 8 மென்பொருளை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். 64bit,32bit என இரண்டு வகை கணினிகளுக்கும் இந்த மென்பொருள் பொருந்து கிறது. ஆனால் தற்பொழுது இந்த மென்பொருள் Developer Preview (சோதனை பதிப்பு) ஆக தான் வெளியிட்டுள்ளது. ஆதலால் இதில் பல்வேறு பிரச்சினைகள் வரலாம்.


இன்ஸ்டால் செய்யும் முறை:
  • நீங்கள் டவுன்லோட் செய்ததும் உங்களுக்கு .iso பைல் வந்திருக்கும். அதை நீங்கள் dvd பைலாக Convert செய்து பிறகு இன்ஸ்டால் செய்ய வேண்டும். 
  • நீங்கள் Windows 7 உபயோகித்து கொண்டிருந்தால் சுலபமாக Windows disk image burner மென்பொருளை உபயோகித்து கன்வேர்ட் செய்து கொள்ளலாம். 
  • அல்லது நீங்கள் Vista or Xp உபயோகித்தால் இதற்க்கு பல Burning மென்பொருட்கள் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது டவுன்லோட் செய்து உபயோகிக்கவும்.
  • கன்வேர்ட் செய்தவுடன் வரும் பைலை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

கணினி தேவைகள்:
  • 1 gigahertz (GHz) or faster 32-bit (x86) or 64-bit (x64) processor
  • 1 gigabyte (GB) RAM (32-bit) or 2 GB RAM (64-bit)
  • 16 GB available hard disk space (32-bit) or 20 GB (64-bit)
  • DirectX 9 graphics device with WDDM 1.0 or higher driver
  • Taking advantage of touch input requires a screen that supports multi-touch
இந்த தகுதிகள் இருந்தால் உங்கள் கணினியில் windows 8 மென்பொருளை உபயோகிக்கலாம். 

Official Microsoft Download Links
மென்பொருளை பற்றி மேலும் அறிய Microsoft Developer Preview இந்த லிங்கில் செல்லுங்கள்.
இதில் உங்களுக்கு தேவையான லிங்கில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Note1: நீங்கள் சட்டபூர்வமான விண்டோஸ் மென்பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே இந்த மென்பொருள் உபயோக்கவும். கிராக்கிங் செய்யப்பட விண்டோஸ் மென்பொருட்களை உபயோகிக்க கூடாது. 

Note2: மீண்டும் ஒருமுறை கூறி கொள்கிறேன் தற்பொழுது இந்த மென்பொருள் Developer Preview (சோதனை பதிப்பு) ஆக தான் வெளியிட்டுள்ளது. ஆதலால் இதில் பல்வேறு பிரச்சினைகள் வரலாம். ஆக பொது பயன்பாட்டிற்கு வந்தவுடன் உபயோகிப்பது சிறந்தது.

Comments