கூகுளின் தொடர்பு முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள்

1996 ஆம் ஆண்டு Stanford பல்கலை கழக மாணவர்களான Larry Page, Sergey Brin இவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தேடியந்திரம் Backrub. இதுவே 1998ஆம் ஆண்டு கூகுள் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு இன்றுவரை இணையத்தில் ஒரு அசைக்க முடியாத நிறுவனமாக மாறி உள்ளது. இணையத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து இருக்கும் இந்த கூகுள் நிறுவனத்தை பற்றி. உலகம் முழுவதும் தனது கிளைகளை பரப்பும் அளவுக்கு ஒரு அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. ஒரு நாள் இந்த தளம் செயல்படவில்லை எனில் இணையத்தின் செயல்பாடே முடங்கி விடும் அளவிற்கு பல கிளை தளங்களை தன்னுள் வைத்துள்ளது கூகுள் நிறுவனம்.
இந்த தளத்திற்கு உலகம் முழுவதும் அலுவலகங்கள் உள்ளது. இந்த அலுவலங்களின் அனைத்து தொடர்பு முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் எப்படி பார்ப்பது என பார்ப்போம். இந்த லிங்கில் செல்லுங்கள்.
மேலே இருப்பதை போன்ற படம் உங்களுக்கு இருக்கும் இதற்க்கு கீழே ஒவ்வொரு நாட்டில் உள்ள அனைத்து கூகுள் அலுவலகங்களின் தொடர்பு முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் வரிசையாக கொடுக்கப்பட்டிருக்கும் அதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அப்படி இல்லை எனில் கொடுக்கப்பட்டுள்ள கூகுள் மேப்பில் உங்களுக்கு தேவையான இடத்தின் ஐகானை கிளிக் செய்தால் முகவரியுடன் கூகுள் தொலைபேசி எண்களும் வந்திருக்கும்.

இந்த முறையில் கூகுள் அலுவலகங்களின் தொடர்பு முகவர்களும் தொல்பேசி எங்களையும் பெறலாம். 

கீழே உள்ள ஓட்டுபட்டையில் ஓட்டு போட்டு பதிவு பலரை சென்றடைய உதவுங்கள்.

Comments