Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பீட்பர்னரில் Feed URL எவ்வாறு மாற்றுவது? ஈமெயில் வாசகர்களை அதிகரிக்க

 வாசகர்களை அதிகரிக்க நாம் பல வகையான தொழில்நுட்பங்களை கையாள்கிறோம். அந்த வகையில் முக்கியமானது Email Subscribe வசதி. இந்த வசதியை Feedburner தளம் இலவசமாக வழங்குகிறது. இந்த தளத்தில் நம்முடைய பிளாக்கை இணைப்பதன் மூலம் நம் வாசகர்களுக்கு புதிய பதிவு போட்டவுடன் அந்த பதிவு ஈமெயிலில் சென்று விடும். இந்த feedburnerல் பிளாக்கை இணைக்கும் பொழுது நம் பிளாக்கிற்கு என்று ஒரு Feed முகவரியை பீட்பர்னர் தளம் உருவாக்கி தரும். அந்த Feed URL ல் தான் நம்முடைய பதிவுகள் அனைத்தும் அப்டேட் ஆகும். இதில் பீட்பர்னர் தளத்தால் தானாக உருவாக்கப்படும் முகவரி நாம் நினைத்தது போல இருக்காது.
உதாரணமாக

பழைய Feed URL - http://feeds.feedburner.com/QOVstM

மாற்றிய பிறகு -http://feeds.feedburner.com/vandhemadharam

இப்படி உங்களின் பிளாக் பெயரை கொடுத்து மாற்றி கொள்ளலாம். இப்படி மாற்றி கொண்டால் நீங்கள் ஞாபகம் வைத்து கொள்ளவும் சுலபமாக இருக்கும்.

Note: இந்த முறையில் URL மாற்றினால் ஏற்க்கனவே உங்கள் கணக்கில் உள்ள வாசகர்களை இழக்க நேரிடும். ஆகவே இந்த ஆரம்பத்திலேயே இதை செய்து விடுவது நல்லது. 
  • இதற்க்கு முதலில் இந்த லிங்கில் கிளிக் செய்து Feedburner தளத்திற்கு செல்லுங்கள். 
  • உங்களுக்கு கீழே இருப்பது போல விண்டோ வரும் அதில் நீங்கள் உருவாக்கி வைத்துள்ள பிளாக்கின் Feed இருக்கும் அதில் கிளிக் செய்யுங்கள்.
  • அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Edit Feed Details என்ற லிங்கை கிளிக் செய்யவும். 
  • அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களின் Feed முகவரிகள் காணப்படும். 
  • அதில் Feed Address பகுதியில் உள்ள எழுத்துக்களை அழித்து விட்டு உங்களுக்கு பிடித்த முகவரியை கொடுத்து கீழே உள்ள Save Feed Details பட்டனை அழுத்தவும். 
  • அவ்வளவு தான் உங்கள் விருப்பமான Feed முகவரியை வாசகர்களுக்கு பகிர்ந்து கொள்ளலாம். 
Note: இந்த முறையில் URL மாற்றினால் ஏற்க்கனவே உங்கள் கணக்கில் உள்ள வாசகர்களை இழக்க நேரிடும். ஆகவே இந்த ஆரம்பத்திலேயே இதை செய்து விடுவது நல்லது. 
கீழே உள்ள ஓட்டு பட்டையில் ஓட்டளித்து பதிவு பலரை சென்றடைய உதவுங்கள்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

20 comments :

  1. பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  2. சூப்பர் பகிர்வு மாப்ளே....

    ReplyDelete
  3. பயனுள்ளப்பதிவு, தொடருங்கள் உங்கள் சேவையை.

    ReplyDelete
  4. நான் கேட்ட கேள்வியை பதிவாக போட்டுவிட்டீர்களா? பலே.. நன்றி சசி! என்னுடைய சிறப்பு வாழ்த்துகள்!! ஆயிரம் பாலோவர், ஆயிரம் மின்னஞ்சல் சந்தாதார்ர்களுடன் வெற்றி தொடரட்டும்..!!!

    ReplyDelete
  5. நானும் இனைச்சிட்டேன் மக்கா நன்றி...!!!

    ReplyDelete
  6. நல்ல தகவல் பாஸ்

    ReplyDelete
  7. very useful..உங்கள் உதவியால் என் வலைப்பூவிலும் மாற்றங்கள் வரும். நன்றி

    ReplyDelete
  8. மிகவும் பயனுள்ள பதிவு.. ஆனால் ஃபீட் அட்ரஸை மாற்றினால் ஏற்கனவே மின்னஞ்சலில் படிப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது அல்லவா?

    ReplyDelete
  9. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    ReplyDelete
  10. அண்ணா இதனால் நம் வலைப்பூவை பழைய Feed URL மூலம் Follow செய்பவர்கள் நம் புதிய பதிவுகளை பெற இயலாது. (RSS Feed Readers மட்டும்.) . எனவே Feedburner பயன்படுத்த ஆரம்பிக்கும் போதே இதை மாற்றி விடுவது நல்லது.

    ReplyDelete
  11. @Prabu Krishnaஉண்மைதான் பிரபு.. அவசரப்பட்டு மாற்றினால் இதற்கு முன் உள்ள வாசகர்களை இழக்க நேரிடும்.. வலைப்பூ ஆரம்பிக்கும்போதே, இதைசெய்துவிடுவதுதான்(Feed Burner) சிறந்தது. வலைப்பூ ஆரம்பித்து சில வருடங்கள் கழித்து செய்வதால் வலைப்பூவின் வாசகர்களை இழக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press