இன்ட்லியின் புதிய Follower Widget பிளாக்கரில் இணைக்க

தமிழ் திரட்டிகளில் முக்கிமானதும் வாசகர்களுக்கு அதிக வாசகர்களை அளிப்பதும் இன்ட்லி எனும் திரட்டியாகும்.  இன்ட்லி தளம் சமீப காலமாக புதிய மாற்றங்களை செய்து வருகிறது. இந்த மாற்றங்கள் சில பேரிடம் அதிருப்தியை தந்தாலும் இன்ட்லி தளம் அதை பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் தனது மாற்றங்களில் முனைப்பாக உள்ளது.  இந்த வரிசையில் இப்பொழுது புதிய Indli Follower விட்ஜெட்டை அறிமுகம் செய்து உள்ளது. இன்ட்லியில் நம்மை தொடர்வதனால் நம்முடைய இடுகைகளை வாசகர்கள் முகப்பு பக்கத்தில் பெறலாம் என்பது நாம் அறிந்ததே. இதனால் Followers எண்ணிக்கை கணிசமாக உயர்கிறது. இன்ட்லி தளம் Followers விட்ஜெட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த விட்ஜெட்டை நம் பிளாக்கில் இணைப்பதனால் நம்முடைய இன்ட்லி Followers மேலும் உயரும். வாசகர்களும் இந்த விட்ஜெட்டில் உள்ள தொடர்க என்ற பட்டனை அழுத்தி சுலபமாக நம்மை பின்தொடரலாம். இதற்க்கு இன்ட்லி தளம் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.
  • இந்த விட்ஜெட்டை உங்கள் பிளாக்கரில் இணைக்க முதலில் இந்த லிங்கில் செல்லுங்கள். 
  • சென்றவுடன் உங்களுக்கு இன்ட்லி தளம் ஓபன் ஆகும் அதில் உள்ள சைட்பாரில் பாருங்கள் புதியதாக Follower Widget தெரியும். 
  • இதில் பயனர் பெயர் என்ற இடத்தில் உங்களுடைய இன்ட்லி பயனர் பெயர் irukkum.
  • அகலம்- விட்ஜெட்டின் Width ஐ குறிக்கிறது. தேவையென்றால் மாற்றி கொள்ளலாம்.
  • படவரிசை- எத்தனை வரி வேண்டும் என குறிக்க
  • தலைப்பு- வேண்டாமென்றால் அதில் உள்ள டிக் மார்க் நீக்கி விடலாம். 
  • இந்த மாற்றங்களை செய்தவுடன் கீழே விட்ஜெட்டிர்க்கான கோடிங் வந்திருக்கும் அந்த கோடிங்கை காப்பி செய்து 
  • உங்கள் பிளாக்கரில் Design - Add a Gadget - Html JavaScript சென்று அந்த கோடிங்கை பேஸ்ட் செய்து சேமித்து விடவும் இப்பொழுது உங்கள் பிளாக் வந்து பார்த்தல் புதிய விட்ஜெட் சேர்ந்திருக்கும்.
  • அல்லது அங்கு கொடுக்கப்பட்டுள்ள Add to Blogger என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் விட்ஜெட்டை நேரடியாக பிளாக்கில் இணைத்து கொள்ளலாம். 

அவ்வளவு தான் இனி வாசகர்கள் இன்ட்லி தளத்திற்கு செல்லாமலேயே நேரடியாக இந்த விட்ஜெட்டின் மூலம் உங்கள் பின்தொடரலாம். 

Comments