மென்பொருட்களின் பழைய பதிப்பை(Old Versions) டவுன்லோட் செய்ய சிறந்த 6 தளங்கள்

கணினியில் நாம் பல்வேறு வகையான மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கிறோம். தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மென்பொருள் நிறுவனங்களும் அவர்களுடைய மென்பொருளை புதிய வசதிகளையும், மாற்றங்களையும் புகுத்தி புதிய பதிப்புகளாக வெளியிடுகின்றன. ஒரு சில புதிய பதிப்பு மென்பொருட்களில் வசதிகள் நிறைய இருந்தாலும் உபயோகிப்பதில் சில சிரமங்கள் ஏற்ப்படும் (திறக்க அதிக நேரம் எடுத்து கொள்ளுதல், சில வசதிகள் நீக்கி இருத்தல்). புதிய வசதிகள் பெறலாம் என்று பழைய பதிப்பை அழித்து புதிய பதிப்புகளுக்கு மாறும் பயனாளிகளுக்கு ஏமாற்றங்கள்(உள்ளதும் போச்சே) தான் மிஞ்சும்.

பழைய பதிப்பில் இருந்த ஏதாவது பயனுள்ள வசதி இதில் இருக்காது. இது போன்ற நேரத்தில் வாசகர்கள் பழைய பதிப்பு இருந்தாலே நல்லது என நினைப்பர். பழைய பதிப்பு மென்பொருட்களை டவுன்லோட் செய்யும் வசதியை அளிக்கும் சிறந்த ஆறு தளங்களை பற்றி இங்கு காண்போம்.

1. OldVersion
பழைய பதிப்பு மென்பொருட்களை டவுன்லோட் செய்ய மிகச்சிறந்த தளமாகும். இந்த தளத்தில் மென்பொருட்கள் பல பிரிவுகளாக பிரித்து வைக்கப் பட்டுள்ளது. தேவையான மென்பொருளை சுலபமாக தேடி பெற்று கொள்ளும் வசதியும் கொடுத்துள்ளனர். தினம் தினம் பல்வேறு பழைய பதிப்பு மென்பொருட்களை இந்த தளத்தில் சேர்த்து கொண்டே உள்ளனர்.


இந்த தளமும் மிகச்சிறந்த தளமாகும். இந்த தளத்தில் MAC, WINDOWS என இரண்டு இயங்கு தளங்களுக்கும் பழைய பதிப்பு மென்பொருட்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த தளத்திலும் மென்பொருட்கள் பல்வேறு வகைகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. 


இந்த தளத்திலும் பழைய பதிப்பு மென்பொருட்களை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த தளம் பிரபலமான தளமாக இல்லாவிட்டாலும் கூட இந்த தளத்திலும் தினம் தினம் பழைய மென்பொருட்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.


இந்த தளத்திலும் குறிப்பிட்ட சில பழைய பதிப்பு மென்பொருட்கள் உள்ளன. 


இந்த தளத்திலும் குறிப்பிட்ட சில பழைய பதிப்பு மென்பொருட்கள் உள்ளன. 


இந்த தளமும் பிரபலமான தளம் இல்லை ஆனால் பயனுள்ள பழைய மென்பொருட்கள் இந்த தளத்தில் உள்ளது. 


இந்த தளங்களுக்கு சென்று உங்களுக்கு தேவையான பழைய பதிப்பு மென்பொருட்களை டவுன்லோ செய்து உபயோகித்து கொள்ளுங்கள். 
  

Comments