Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பீட்பர்னரில் Activation Link ஈமெயில் செய்தியை தமிழில் மாற்ற [ஈமெயில் வாசகர்களை அதிகரிக்க-2]

வலைப்பூ வைத்திருக்கும் பெரும்பாலானவர்களுக்கு feedburner பற்றி தெரிந்திருக்கும். Feed burner என்பது நம்முடைய புதிய பதிவுகளை வாசகர்களின் ஈமெயிலுக்கு இலவசமாக அனுப்பும் சேவையை வழங்கும் ஒரு நிறுவனமாகும். இந்த தளம் கூகுளால் இயக்கப்படுகிறது. இந்த தளத்தில் நாம் நம்முடைய வலைப்போவை இணைத்து விட்டால் நமக்கு ஒரு Email Subscription விட்ஜெட்டை அளிப்பார்கள் அந்த விட்ஜெட்டின் மூலம் வாசகர்கள் தங்கள் ஈமெயில் ஐடியை கொடுத்து Subscribe செய்வதன் மூலம் அவர்களின் மெயிலுக்கு நம்முடைய பதிவுகள் செல்லும். வாசகர்கள் இந்த வசதியை ஆக்டிவேட் செய்ய இரு வேறு செயல்களை செய்ய வேண்டும். முதலில் பிளாக்கில் உள்ள விட்ஜெட்டில் அவர்களின் ஈமெயில் ஐடியை கொடுத்து இணைய வேண்டும். உடனே அவர்களுக்கு ஒரு Activation Link உடன் கூடிய ஒரு மெயில் செல்லும் அந்த லிங்கை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்தால் தான் இந்த வசதியை வாசகர்கள் பெறமுடியும்.

தானியங்கியாக அனுப்பப்படும் இந்த Activation மெயிலில் உள்ள செய்திகள் feed burner தளதினால் டீபால்டாக வைக்கப்பட்டிருக்கும் ஒரு செய்தியாகும். இது ஆங்கிலத்தில் இருக்கும். ஆனால் இதனை நம் விருப்பப்படி மாற்றலாம். கீழே என்னுடைய Activation Link ஈமெயிலை மாற்றி உள்ளேன் பாருங்கள். 

இது போன்று தமிழில் மாற்றினால் நம்முடைய வாசகர்களுக்கு எளிதாக புரியும். இது போன்று எவ்வாறு மாற்றுவது என கீழே பார்ப்போம்.

  • முதலில் feedburner தளத்தில் நுழைந்து கொள்ளுங்கள். அதில் உள்ள உங்களின் Feed லிங்கை கிளிக் செய்யுங்கள்.
  • அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Publicize ==> Email Subscriptions என்பதை அடுத்தடுத்து கிளிக் செய்யுங்கள். 
  • அடுத்து Communication Preferences என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே இருப்பதை போல ஒரு விண்டோ வரும். 

  • உங்களுக்கு வந்திருக்கும் விண்டோவில் Confirmation ஈமெயில் போடி என்ற பகுதியில் உள்ள செய்தியை உங்கள் விருப்பம் போல எந்த மொழியில் வேண்டுமானாலும் டைப் செய்து கொள்ளுங்கள். 
  • இதில் முக்கியமான விஷயம் நான் மேலே உள்ள படத்தில் காட்டி இருக்கும் ${confirmlink} என்ற வரியை எக்காரணம் கொண்டும் மாற்ற கூடாது. 
  • செய்தியை உங்கள் விருப்பப்படி மாற்றி அமைத்த பின்னர் கீழே உள்ள Save என்ற பட்டனை அழுத்தி உங்கள் மாற்றத்தை சேமித்து கொள்ளுங்கள். 
  • இனி வாசகர்களுக்கு செல்லும் Activation Link மெயில் உங்களின் மாற்றப்பட்ட செய்தியோடு செல்லும். 
வாசகர்களும் அந்த செய்தியை புரிந்து கொண்டு அதனை ஆக்டிவேட் செய்து கொள்வார்கள். ஆக்டிவேட் செய்யாமல் இருக்கும் வாசகர்களின் எண்ணிக்கை குறையும். 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

14 comments :

  1. பகிர்வுக்கு நன்றி!நண்பா!

    ReplyDelete
  2. மாப்ளே புதிய தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  3. இன்றைய தகவலுக்காக ஒரு சபாஷ்..

    ReplyDelete
  4. நல்ல பயனுள்ள தகவல்.

    நன்றி.

    ReplyDelete
  5. எனது வலையில் இன்று:

    மாவட்டங்களின் கதைகள் - தூத்துக்குடி மாவட்டம்(Thoothukudi)

    நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

    ReplyDelete
  6. நண்பரே, இது Dynamic Views முறையிலும் வருமா? அதில் எப்படி செய்வது? சற்று விளக்குங்கள்!

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press