Doodle4Google Winner- நொய்டாவை சேர்ந்த 7 வயது சிறுமி சாதனை

உலகின் மிக பிரபலமான கூகுல் நிறுவனம் இந்திய பள்ளி மாணவர்களின் கலைத்திறனை அதிகரிக்கவும், குழந்தைகளின் திறமையை வெளிக்கொணரவும் Google4 Doodle என்ற போட்டியை ஏற்பாடு செய்து நடத்தியது.இந்த போட்டியின் படி மாணவர்கள் அவர்களின் கற்பனையில் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதை Google லோகோவாக வரைந்து அனுப்ப வேண்டும். இதில் 1 முதல் 10 வரை படிக்கும் பள்ளி மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி கொடுத்தது கூகுள் நிறுவனம். இதில் ஆச்சரியம் என்ன வென்றால் கூகுள் நிறுவனமே எதிர்பார்க்காத வண்ணம் 1,55,000 பேர் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்த போட்டி பல சுற்றுக்களை கொண்டு நடத்தப்பட்டது இறுதி சுற்றுக்கு 45 பேரை தேர்வு செய்து இறுதி சுற்றை நடத்தியது. ஆன்லைனில் வாக்களிக்கும் வசதியையும் வாசகர்களுக்கு கொடுத்தது. முடிவாக தற்பொழுது இறுதி சுற்றி வெற்றி பெற்ற வராக நொய்டாவை சேர்ந்த 7 வயது சிறுமி வர்ஷா குப்தா என்பவரை தேர்ந்தெடுத்து உள்ளது. இவர் 3 ஆம் வகுப்பு படித்து கொண்டு இருக்கிறார். கீழே இவர் அமைத்த லோகோவை பாருங்கள்.

"Indian Musical Instruments" என்ற தலைப்பில் லோகோ அமைத்த வர்ஷா குப்தா நொய்டாவில் உள்ள Ryan International School லில் படித்து வருகிறார். வெற்றி பெற்றவருக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.


வெற்றி பரிசாக அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு லேப்டாப்பும், ஒரு வருடத்திற்கான இலவச இணைய இணைப்பும் மற்றும் Rs. 200,000 மதிப்பிலான தொழில் நுட்ப வசதிகளை அவர் படித்த பள்ளிக்கும் கொடுத்து உள்ளது. இதையெல்லாம் மீறி வருகின்ற குழந்தைகள் தின விழாவான (14.11.2011) அன்று இந்த லோகோவை இந்திய கூகுளின் Home Page லோகோவாக வைத்து மிகப்பெரிய கவுரவத்தை வர்ஷா குப்தா அவர்களுக்கு அளிக்க இருக்கிறது.

மற்றும் ஆன்லைனில் ஓட்டெடுப்பு நடத்தியதில் வெற்றி பெற்றவர்களாக மூன்று பேரை தேர்வு செய்து உள்ளது. 

Grades 1-3: Shibajyoti Choudhury (Group I) from Jamshedpur
Grades 4-6: Abhinav R. (Group II) from Coimbatore
Grades 7-10: Nishi Bordia (Group III) from Indore

தமிழகதின் சார்பில் கோவையை சேர்ந்த Abinav என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரின் லோகோ கீழே பாருங்கள். 

"India's Contribution to the world - Tradition" என்ற தலைப்பில் இவர் இந்த லோகோவை உருவாக்கி உள்ளார். இவர் Stanes AI Higher Secondary School என்பதில் படித்து வருகிறார். இவருடைய போட்டோ இணையத்தில் கிடைக்கவில்லை நண்பர்கள் யாராவது கொடுத்தால் போடுகிறேன்.

இந்த செய்தியை அனைவரும் அறிய கீழே உள்ள சமூக தளங்களில் பகிருங்கள். 

Comments