கூகுள் பிளசில் புதிய Page வசதி உருவாக்குவது எப்படி?

பேஸ்புக் மற்றும் கூகுள் பிளஸ் இரண்டும் செயலில் ஒரே மாதிரியான வசதிகளை கொண்டவை. இதில் சற்று விதிவிலக்கு ட்விட்டர் தளம். பேஸ்புக் தளமும் கூகுள் பிளஸ் தளமும் ஒரே வசதிகளை மாறி மாறி தருகின்றன. பேஸ்புக் ஒரு வசதியை வெளியிட்டால் அந்த வசதியை கூகுள் பிளசும், கூகுள் பிளஸ் ஒரு வசதியை வெளியிட்டால் அந்த வசதியை பேஸ்புக் தளமும் மாறி மாறி வழங்கி வருகின்றன. அந்த வரிசையில் கூகுள் பிளசில் புதிய வசதியாக Page வசதியை வாசகர்களுக்கு வழங்கி உள்ளனர். இந்த வசதி ஏற்கனவே பேஸ்புக்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் மற்றும் பிளசில் page வசதியின் முக்கிய நோக்கம் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மக்களிடையே கொண்டு செல்ல தான் உருவாக்கப்படுகிறது. ஆனால் இதனை பலவேறு வகையில் அனைவரும் உபயோகப்படுதுகிறோம்.

கூகுள் பிளஸில் Page உருவாக்குவது எப்படி ?

முதலில் இந்த லிங்கில் சென்ல்லுங்கள் உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களின் Page Category தேர்வு செய்து அதன் மீது கிளிக் செய்யுங்கள்.
  • அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்கள் கூகுள் பிளஸ் Pageன் விவரங்களை கொடுக்கவும். 
  • விவரங்களை கொடுத்த பின்னர் படத்தில் காட்டியுள்ள CREATE என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்கள் பக்கத்திற்கான Description மற்றும் போட்டோவை தேர்வு செய்து கொள்ளவும். 
  • அடுத்து படத்தில் காட்டியுள்ள Continue என்ற பட்டனை அழுத்துங்கள். இப்பொழுது உங்களின் கூகுள் பிளஸ் Page தயாராகி விட்டது அதை உங்கள் கூகுள் பிளஸ் Circle-ல் உள்ள நண்பர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். 
  • அதற்க்கு வரும் விண்டோவில் உள்ள Share On Google Plus என்ற பட்டனை அழுத்தவும். (Share செய்ய விரும்பவில்லை என்றால் Finish பட்டனை கொடுத்து விடவும்).
  • அவ்வளவு தான் உங்களுடைய Google plus Page உருவாகிவிட்டது. கீழே உள்ள படத்தில் பாருங்கள் அதில் நான் அம்பு குறியிட்டு காட்டியிருக்கும் இடத்தில் கிளிக் செய்தால் Profile, Pages ஆகிய பக்கங்கள் காட்டும் அதில் கிளிக் செய்தால் நேரடியாக அந்த பகுதிக்கு செல்லும்.
இது போன்று நீங்கள் எத்தனை Page வேண்டுமானாலும் உருவாக்கி கொண்டு உபயோகிக்கலாம். 

கீழே என்னுடைய இரண்டு கூகுள் பிளஸ் புதிய பக்கங்கள் நண்பர்கள் இதில் இணைந்து கொள்ளவும். 

வந்தேமாதரத்தில் இணைய 



Tech Shortly பக்கத்தில் இணைய 


மேலும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கருத்துரை பகுதியில் கேட்கவும். 

Comments