கூகுள் அட்சென்ஸ் போல WordPress தளத்தின் புதிய விளம்பர சேவை - Word Ads

அனைவருக்கும் கூகுள் அட்சென்ஸ் பற்றி தெரிந்திருக்கும். பெருமாளான பதிவர்கள் ஆன்லைனில் சம்பாதிக்கும் வசதியை இந்த கூகுள் அட்சென்ஸ் வழங்குகிறது. இணையத்தில் உள்ள வலைப்பூக்களை கூகுள் அட்சென்ஸ் இல்லாமல் பார்ப்பது அரிது. இப்பொழுது கூகுள் அட்சென்ஸ் போல Wordpress தளம் WordAds எனும் புதிய விளம்பர வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வசதியை Federated Media(FM) தளத்துடன் இணைந்து WordPress தளம் வழங்குகிறது.  இனி பதிவர்கள் இந்த WordAds விளம்பரத்தையும் தங்கள் வலைப்பூக்களில் போட்டு அதன் மூலம் கணிசமாக சம்பாதிக்கலாம்.

இந்த விளம்பர வசதியில் கலந்து கொள்ள சில தகுதிகளை வேர்ட்பிரஸ் தளம் நிர்ணயித்துள்ளது.

தகுதிகள்:

  • WordPress தளத்தின் வலைப்பூவாக இருக்க வேண்டும்.
  • அதுவும் Custom Domain(.com) வாங்கிய வலைப்பூக்களாக இருக்க வேண்டும்.
  •  மற்றும் Site Traffic, Site Content, language ஆகியவைகளை பொறுத்தே உங்கள் வலைப்பூவை அனுமதிப்பதாக தெரிவித்து உள்ளனர். 
இந்த தகுதிகள் உங்களுக்கு இருந்தால் இந்த லிங்கில் கிளிக் செய்து சென்று அவர்களின் அறிவிப்பை பாருங்கள். அப்படியே கீழே இருக்கும் படிவத்தை பூர்த்தி செய்து அவர்களுக்கு அனுப்புங்கள். 

(Custom Domain இருந்தால் தான் படிவமே திறக்கிறது. ஆகையால் எனக்கு அந்த படிவம் வரவில்லை)

அந்த படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பினால் அவர்கள் உங்கள் பிளாக்கின் தகுதியை பொறுத்து அனுமதி வழங்குவார்கள். 

வேர்ட்பிரஸ் தளங்களுக்கு மட்டும் வழங்குவதால் மற்ற வாசகர்களுக்கு ஏமாற்றம் தான். இது கூகிள் அட்சென்ஸ் உடன் எந்த விதத்திலும் போட்டி போட முடியாது.

இப்பொழுது தான் அறிமுகம் ஆகி உள்ளதால் மேலும் அதிகமான விவரங்கள் கிடைக்கவில்லை. விரைவில் அனைத்து தகவல்களுடன் பதிவு இடுகிறேன். 

கீழே உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு இந்த செய்தியை பகிருங்கள். 

Techshortly

Comments