Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

சில பதிவர்கள் செய்யும் தவறுகள் (பாகம் 2)

பதிவர்கள் செய்யும் சில அடிப்படை தவறுகளை பற்றி பார்த்து கொண்டிருக்கும் இந்த தொடரில் நாம் பார்க்க இருப்பது தள வடிவமைப்பை பற்றி. பதிவர்களே உங்கள் பிளாக் முழுவதும் விட்ஜெட்டுக்களாக நிரப்பி உங்கள் பிளாக்கை குப்பை கூடை போல வைத்து இருக்கிறீர்களா? ஒவ்வொரு நேரமும் உங்கள் பிளாக் திறக்க வெகு நேரம் ஆகிறதா? டெம்ப்ளேட் தேர்வு செய்வதில் குழப்பமாக உள்ளதா? இந்த கேள்விகளுக்கான பதில் ஆம் என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. முந்தைய பாகத்திற்கு செல்ல சில பதிவர்கள் செய்யும் தவறுகள் (பாகம் 1) இந்த லிங்கில் செல்லுங்கள்.
தளத்தை வடிவமைக்கும் பொழுது கவனிக்க வேண்டிய விஷயங்கள் :

டெம்ப்ளேட் தேர்வு செய்தல்:
பிளாக்கர் வலைப்பூக்களுக்கு ஆயிரமாயிரம் இலவச டெம்ப்ளேட்கள் உள்ளன. ஆனால் டெம்ப்ளேட்டை தேர்வு செய்யும் பொழுது பின்புறத்தில் புகைப்படம் ஏதும் இல்லாமல் முற்றிலும் வெண்மை நிற டெம்ப்ளேட்கள் தேர்வு செய்வது நல்லது. பெரும்பாலான வாசகர்களும் வெண்மை நிறத்தையே விரும்புகின்றனர். வெண்மை நிறத்தை தேர்வு செய்வதால் வாசகர்களுக்கு எழுத்துக்கள் படிப்பதில் உள்ள சிரமங்களை(கண்கள் கூசுவது) தவிர்க்கலாம். மற்றும் வலைப்பூவும் வேகமாக திறக்க இந்த வகை டெம்ப்ளேட்கள் உதவுகின்றன. டெம்ப்ளேட் அழகை பார்க்காமல் பல்வேறு வசதிகள் உள்ளதா என்பதை மட்டும் பார்த்து டெம்ப்ளேட் தேர்வு செய்யவேண்டும்.


விட்ஜெட்கள் பொருத்துதல்:
பதிவுலகில் நான், பொன்மலர், பலே பிரபு, வைரை சதீஷ் போன்ற மேலும் பல  நண்பர்களும் பிளாக்கர் தொழில்நுட்ப பதிவு எழுதுகின்றனர். நாங்கள் படித்ததையோ அல்லது தெரிந்ததையோ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஒரே விட்ஜெட்டை பலரும் வெவ்வேறு வடிவங்களில் பதிவாக போடுவோம். ஆனால் உங்கள் வலைப்பூவிற்கு எந்த விட்ஜெட் பொருத்தமாக இருக்கும், எந்த விட்ஜெட் இணைத்தால் வாசகர்கள் பயன்பெறுவார்கள் என்பதை உறுதி செய்து அதில் உங்களுக்கு தேவையான ஒரு விட்ஜெட்டை மட்டும் வலைப்பூவில் சேர்க்க வேண்டும்.

அனைத்து விட்ஜெட்டுக்களையும் உங்கள் வலைப்பூவில் சேர்த்தால் உங்கள் பிளாக் திறக்க அதிக நேரம் எடுத்து கொள்வதால் பிளாக் வரும் வாசகர்கள் கடுப்பாகி திரும்பி சென்று விடுவார்கள். முடிந்த அளவு பிளாக்கர் தளத்தின் Default விட்ஜெட்டுக்களை மட்டுமே வைத்து கொள்வது நல்லது. அவசியமில்லாமல் மூன்றாம் தள விட்ஜெட்டுக்களை சேர்க்க வேண்டாம்.


அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்:
ஒரு சிலர் தங்கள் பிளாக் அழகாக இருக்க வேண்டும் என நினைத்து பல தேவையில்லாத விட்ஜெட்டுக்களை வலைப்பூவில் இணைத்து கொள்வார்கள். உதாரணமாக ஒன்றுக்கும் அதிகமான Visitor Counters, பனி கொட்டுவது போன்று, மவுஸ் முனையை மாற்றுவது. உண்மையை சொல்லப்போனால் இந்த விட்ஜெட்டுக்களால் 1% நன்மை கூட உங்கள் வலைப்பூவிற்கு இல்லை. உங்கள் வலைப்பூவிற்கு வரும் வாசகர்கள் யாரும் உங்கள் பிளாக்கின் அழகை வைத்து வருவதில்லை உங்கள் பிளாக்கின் பதிவுகளுக்காக தான் வருகிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். மாறாக ஒரு சிலருக்கு இவைகள் வெறுப்பாக தான் சென்று முடியும்.

அதற்க்காக அழகாகவே இருக்க கூடாதான்னு கேட்கிறீங்களா? அழகாக இருக்க கூடாதுன்னு நான் சொல்லவே இல்லையே. 95% வாசகர்களுக்கும் 5% அழகுக்கும் முக்கியத்துவம் கொடுங்கன்னு தான் சொல்றேன்.

பிளாக்கில் இருக்க வேண்டிய முக்கியமான விட்ஜெட்டுகள் என்ன:
குறிப்பிட்ட சில விட்ஜெட்டுக்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அவை என்னனென விட்ஜெட்டுகள் என்பதை கீழே பாருங்கள்.
1. Popular Post Widget
2. Email subscription Widget
3. Social Networking Sites Widget
4. Follower Widget
5. Blog Archive Widget
6. Search Box Widget

இந்த 6 விட்ஜெட்டுகள் கண்டிப்பாக உங்கள் பிளாக்கில் இருக்க வேண்டும். மற்றும் இதனோடு இந்த விட்ஜெட்டை சேர்த்தால் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கும் மற்ற விட்ஜெட்டுகளையும் வைத்து கொள்ளுங்கள்.

இந்த தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள கீழே உள்ள சமூக தளங்களில் பகிருங்கள்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

31 comments :

  1. மிகவும் அவசியமான ஆலோசனைகள் சசி! நன்றி!

    ReplyDelete
  2. நல்லதொரு தகவல்கள்...

    உண்மையில் அழகுபட பிளாக்கை வைத்திருந்தால் வாசர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்...

    ReplyDelete
  3. நன்றே சொல்லியிருக்கிறீர்கள். அடுத்த பாகம் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  4. நன்றி சசி சார்! நானும் நிறைய வைத்துள்ளேன். குறைத்து விடுகிறேன்.

    சிந்திக்க :
    "இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

    ReplyDelete
  5. விவரங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. வணக்கம் நண்பரே..

    பகிர்விற்க்கு நன்றி

    ReplyDelete
  7. புதிய பதிவர்களுக்கும் பழைய பதிவர்களுக்கும் தேவையான பதிவு இது.

    ReplyDelete
  8. Appadiye intha
    ad vicha page open
    aagaathunnu
    sollunga....
    Ad irukkira page
    ellam open aaga
    roomba neeram edithukkuthu

    ReplyDelete
  9. @NAAI-NAKKS

    நண்பரே விளம்பரம் வைத்தால் திறக்க தாமதம் ஆகும். இதை பதிவில் சொல்லாத காரணம் இது அவர்களின் வருமானம் சம்பந்தப்பட்டது. இதனால் 1 நிமிடம் தாமதமாக திறந்தாலும் பரவா இல்லை அதனால் பயன் உள்ளது.

    ReplyDelete
  10. சொன்ன விசயங்களை மனதிலும் தளத்திலும் வைத்துக்கொள்ள வேண்டும்.
    நன்றி!

    ReplyDelete
  11. உங்கள் வலைப்பூவிற்கு வரும் வாசகர்கள் யாரும் உங்கள் பிளாக்கின் அழகை வைத்து வருவதில்லை உங்கள் பிளாக்கின் பதிவுகளுக்காக தான் வருகிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

    //

    சரிதான்!

    ReplyDelete
  12. பயன் தரும் பதிவு!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. சரி.. நானும் குறைத்துக்கொள்கிறேன்..

    ReplyDelete
  14. அருமையான தகவல் சகோ.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. பகிர்வுக்கு நன்றி!!

    ReplyDelete
  16. பயனுள்ள தகவல் ,பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி மச்சி

    ReplyDelete
  17. ஆலோசனைகளுக்கு நன்றி அண்ணா...அடுத்த பாகம் எதிர்பார்க்கிறேன்..
    டுடே லொள்ளு..இல்லையா

    அன்புடன்
    P.ராஜா

    ReplyDelete
  18. நல்ல குறிப்புகள்.பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  19. அருமையான தகவல் மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

    ReplyDelete
  20. அருமையான தகவல் நண்பரே

    ReplyDelete
  21. பயனுள்ள பகிர்வு! நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. வார்த்தை, வரி, பத்தி, அத்தியாயம், பாகம் என்றுதானே வரும்!

    வார்த்தை, வரி, பத்தி, பகுதி, தொகுதி என்றுதானே வரும்.

    எனவே பாகம் 1, 2 என எழுதாமல் அத்தியாயம் 1, 2 என எழுதுங்கள்.

    இது எதுக்கு சொல்றேன்னா எது வேண்டுமேனிலும் ஒரு விதத்தில் தவறாக இருந்திட வாய்ப்புண்டு. நல்ல பதிவு.

    ReplyDelete
  23. விட்ஜெட்டுகளுடன் போராடும் புதிய பதிவர்களுக்கு நல்ல அறிவுரை மற்றும் தகவல்..
    நன்றி நண்பரே..

    நீங்கள் கூறிய விட்ஜெட்டுகளை Dynamic Views இல் உள்ள டெம்பிளெட்டில் சேர்க்க வழி உண்டா??

    உ.தா: aalunga.blogspot.com

    ReplyDelete
  24. you forget to tell about link within widget my friend


    www.astrologicalscience.blogspot.com

    ReplyDelete
  25. தங்களைப் போன்றே தொழில்நுட்ப தகவல்களை பகிர்வதில் எனக்கு ஆர்வம் அதிகம் அண்ணா. ஆனால் எனது வலைப்பூவினை எவ்வாறு வைத்துக்கொள்வது என்பதை உங்களின் பதிவுகளின் இருந்தே கற்றுக் கொண்டு இருக்கிறேன். தகவல்கள் அனைத்தும் அருமை அண்ணா. நன்றிகள் பல தங்களுக்கு.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press