Bigrock டொமைனை பிளாக்கரில் செயல்படுத்துவது எப்படி [முழு விளக்கம் படங்களுடன்]

நாளுக்கு நாள் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை கூடிகொண்டே உள்ளது. புதிய பதிவர்கள் புற்றீசல் போல உருவாகி கொண்டே உள்ளது. வலை பதிவர்கள் அடுத்த கட்டமாக அவர்களின் வலைப்பூக்களை சொந்த டொமைனுக்கு மாற்ற விரும்புகின்றனர். பிளாக்கர் மூலம் டொமைன் வாங்க வேண்டுமென்றால் கிரெடிட் கார்ட் அவசியமாகிறது. இதனால் debit card, net banking, offline payment போன்ற வசதிகளை வழங்கும் Bigrock தளத்தை நாடி செல்கின்றனர். கூகுளில் டொமைன் வாங்கினால் நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை தானாகவே Re-direct ஆகிவிடும். ஆனால் Bigrock தளம் மூலம் டொமைன் வாங்கினால் பழைய தளத்திலிருந்து நாம் தான் புதிய தளத்திற்கு Redirect செய்ய வேண்டும். அதை எப்படி செய்வது என பார்ப்போம்.
  • முதலில் Bigrock தளத்தை ஓபன் செய்து கொண்டு My Account பகுதிக்கு செல்லுங்கள். 
  • பின்பு அங்கு உள்ள மெனு பாரில் Domain என்பதை கிளிக் செய்து அதில் List All Orders என்பதை கிளிக் செய்யவும்.
  • அடுத்து வரும் விண்டோவில் நீங்கள் வாங்கியுள்ள Domain லிங்க் இருக்கும். அதன் மீது கிளிக் செய்யவும்.
  • அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள DNS Management என்பதை கிளிக் செய்யவும். 
  • அதில் Manage DNS என்பதை கிளிக் செய்யவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்.
  • அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். அதில் CNAME Records - Add CNAME Record என்பதை அடுத்தடுத்து கிளிக் செய்யவும்.
  • உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். இதில் நாம் www வைத்து  (www.vandhemadharam.com) ஒரு CNAME ம் , www இல்லாமல்(vandhemadharam.com) ஒரு CNAME Record உருவாக்க வேண்டும். (எப்படி உருவாகுவது என கீழே விரிவாக பாருங்கள்).
  • முதலில் www வைத்து உருவாக்க உங்களுடைய விண்டோவில் Host Name என்ற இடத்தில் www கொடுக்கவும்.
  • Value என்ற இடத்தில் இரண்டாவதாக உள்ள ரேடியோ பட்டன தேர்வு செய்து கொண்டு ghs.google.com என்பதை கொடுக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தில் பாருங்கள்.
  • படத்தில் உள்ளதை போல கொடுத்து விட்டீர்களா என சோதித்து கொண்டு கீழே உள்ள Add Record என்பதை கிளிக் செய்யவும்.
  • அடுத்து www இல்லாமல் ஒரு CNAME Record உருவாக்க வேண்டும். பழைய படி Add CNAME Record என்பதை கிளிக் செய்து வரும் விண்டோவில் கீழே உள்ளதை போல கொடுக்கவும்.
  • இதில் Host Name என்ற இடத்தில் எதுவும் கொடுக்காமல் Value என்பதில் ghs.google.com என்பதை கொடுக்கவும்.
  • அடுத்து கீழே உள்ள Add Record என்ற பட்டனை அழுத்தினால் உங்களுடைய  CNAME Records உருவாகி விடும்.
  • இப்பொழுது உங்களின் CNAME Records பகுதியில் கீழ் கண்டவாறு இருந்தால் இதுவரை நீங்கள் செய்தது சரியே என உறுதி செய்து கொள்ளலாம்.
  • வெற்றிகரமாக CNAME Record உருவாக்கியாச்சு இதை எப்படி பிளாக்கரில் அமைப்பது என பார்ப்போம்.
பிளாக்கரில் Re Direct செய்ய:
  • முதலில் உங்களின் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். 
  • பிறகு Settings - Publishing - Custom Domain - Switch to Advanced Settings என்பதை ஒன்றன் பின் ஒன்றாக கிளிக் செய்யவும்.
  • அதில் Your Domain என்ற இடத்தில் உங்களுடைய தளத்தின் முகவரியை கொடுக்கவும். www கண்டிப்பாக கொடுக்கவும் மறக்க வேண்டாம்.
  • அடுத்து word verification சரியாக கொடுத்து கீழே உள்ள Save Settings என்ற பட்டனை அழுத்தவும். அடுத்து உங்களுக்கு இதே விண்டோ மறுபடியும் வரும் அதில் உள்ள Redirect என்ற இடத்தில் உள்ள சிறிய கட்டத்தை தேர்வு செய்யவும்.
  • அடுத்து பழைய படி Word Verification கொடுத்து SAVE SETTINGS என்ற பட்டனை அழுத்தினால் உங்களுடைய பிளாக் புதிய டொமைனுக்கு மாறிவிடும்.
NOTE: உங்களுடைய DOMAIN புதியதாக இருந்தால் Re Direct ஆக குறைந்தது 5 மணி நேரம் முதல் அதிக பட்சம் 48 மணி நேரம் வரை ஆகும் என்பதால் ஒரு நாள் கழித்து பிளாக்கரில் செட் செய்தால் உங்கள் பிளாக் Re Direct ஆவதில் எந்த பிரச்சினையும் இருக்காது.

Comments