எனக்குள் நான் பய(ங்கர)டேட்டா - வந்தேமாதரம்

நான்: அப்பா வச்சது சசிகுமார், அம்மா வச்சது சுதாகர், பதிவுலகம் வச்சது வந்தேமாதரம் சசி.

பிறந்த நாள்: 10-05-1984

பிறந்தது: மீஞ்சூரில் உள்ள பாட்டி வீடு.

இருப்பது: இதுவும் மீஞ்சூர் தான்.

படிப்பு: டிப்ளோமா கம்ப்யுட்டர் டெக்னாலஜி, இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இதர

வேலை: ஆசையாய் படிச்ச எதுவும் வேலை வாங்கி தரல. அப்பாவின் வற்புறுத்தலுக்காக படிச்சது தான் இப்ப சோறு போடுது. கோடம்பாக்கத்தில் உள்ள பிரபல ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் Desinger ஆக உள்ளேன்.

பிடிச்ச விஷயங்கள்: மனைவி, நண்பர்கள், பதிவுலகம் என நிறைய இருந்தாலும் இப்பொழுது என்னுடைய மகள் தான்.

பிடிக்காதது: சீக்கிரம் வரேன்னு சொல்லிட்டு வெகு நேரம் காக்க வைப்பவரை ( திரும்பவும் எப்ப கூப்பிட்டாலும் போக கூடாதுன்னு நினைப்பேன்)

நட்புகள்: ஒரு குரல் கொடுத்தால் ஓடி வந்து உதவ நிறைய நண்பர்கள் இருக்காங்க

காதல்: வெற்றி

பாசத்துக்கு: அம்மா தான் எப்பவுமே. அடுத்த இடத்தில் தான் மனைவி.

மறக்க முடியாதது: அம்மாவை

மறக்க நினைப்பது: கவலைகளை

சந்தோஷம்: பணியில் இருந்து வீட்டுக்கு சென்றவுடன் அப்பா அப்பா என்று ஓடிவரும் அன்பு குழந்தை பார்க்கும் பொழுது.

பலம்: கேட்டவுடனே அல்லது பார்த்தவுடனே ஒரு விஷயத்தை முழுவதுமாக புரிந்து கொள்வது. ஏதாவது பிரச்சினை என்றால் முன்னாடி வரும் நண்பர்கள் (உறவினர்களை விட)

பலவீனம்: எல்லோரையும் நம்பி விடுவது(இப்பொழுது மாறிவிட்டேன்), மறதி

கோபம்: அடிக்கடி வரும் மறையும்(தேவை இல்லாமல் வராது).

ஏமாற்றம்: அதிக எதிர்பார்ப்பு இருந்தால் தானே ஏமாற்றம் வரும். நான் எதையும் அதிகம் எதிர்பார்க்க மாட்டேன். அப்படியும் சொல்லனும்னா வேலை எதுவும் இருக்காது அரைநாள் வீட்டுக்கு வந்துடலாம்னு போனா எதாவது வேலை இருப்பது.

பொழுதுபோக்கு: மனைவி குழந்தையுடன் சேர்ந்து டிவி பார்ப்பது, தற்பொழுது இணையத்தில் உலவுவது

ரசிப்பது: பொய் சொல்ல விரும்பல சார். எனக்கு ரசிப்பு தன்மை கொஞ்சம் குறைவு. குழந்தைகள் பேசுவது பிடிக்கும்.

பிடிச்ச சுற்றுலா தளம்: வயநாடு கேரளா, ஊட்டி

நிறைவேறாத ஆசை: ஒரு நாள் முழுக்க விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை இதுவரை நிறைவேறவில்லை.

கடவுள்: எல்லாருமே

பதிவுலக பெருமை: உலவில் சிறந்த பதிவராக வந்தது.

தற்போதைய சாதனை: இதுல என்ன எழுதுறதுன்னு தெரியலங்க. (ஏதாவது பண்ணா தானே எழுத)


பிடித்த வரிகள்: (இணையத்தில் படித்தது)

"கிளையில் அமர்ந்துள்ள பறவைக்கு காற்றில் கிளைகள் அசைவதால் பயம் இல்லை. காரணம் அவைகள் கிளைகளை நம்புவதில்லை!தன் சிறகுகளை நம்புகின்றன"

"வெற்றிக்கு பின் ஓய்வு எடுக்காதீர்கள் நீங்கள் பெற்றது வெற்றி அல்ல அதிர்ஷ்டம் என சொல்ல பல உதடுகள் காத்து கொண்டிருக்கிறது"

(பெரும்பாலும் நான் எந்த தொடர் பதிவையும் எழுதுவதில்லை என்னை பற்றி அறிந்து கொள்ள உதவும் என்பதால் இந்த பதிவு. தொடரை எழுத அழைத்த நம்ம வியட்நாம்காரருக்கு நன்றி... )

Tech Shortly

Comments