உங்களின் கூகுள் பிளஸ் Page-ல் மற்றவர்களுக்கும் அட்மின் வசதியை அளிக்க

கூகுள் பிளஸ் தளத்தில் Page வசதியை கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இதன் மூலம் பெருமாலானவர்கள் தங்கள் நிறுவனங்களுக்கும், வலைப்பூக்களுக்கும் தனியாக Page உருவாக்கி அப்டேட்களை வழங்க உதவியாக இருந்தது இந்த வசதி. தற்பொழுது இந்த கூகுள் பிளஸ் பக்கத்தில் ஒரு புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளனர். உங்கள் கூகுள் பிளஸ் பக்கத்தில் நீங்கள் மட்டுமின்றி உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உங்கள் நிறுவனத்தின் மேலாலர்களுக்கோ அட்மின் வசதியை அளிக்கலாம். நீங்கள் ஒரு குழுவாக இணைந்து வலைப்பூ நடத்தும் பட்சத்தில் இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். இதன்மூலம் குழு உறுப்பினர்களுக்கும் அட்மின் வசதியை கொடுக்கலாம். எப்படி அட்மின் வசதி அளிப்பது என கீழே பார்ப்போம்.


அட்மின் வசதியை வழங்குபவருக்கு:
  • முதலில் கூகுள் பிளசில் நுழைந்து உங்களின் Page திறந்து கொள்ளுங்கள். அடுத்து Setting பகுதிக்கு சென்று Google Settings என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Managers என்பதை கிளிக் செய்யுங்கள். 
  • அதில் அட்மின் வசதி அளிக்க நினைக்கும் நபரின் ஈமெயில் ஐடியை கொடுக்கவும்.
  • நீங்கள் அவரின் ஈமெயில் ஐடி கொடுத்து Invite பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு ஒரு Pop-up விண்டோ வரும் அதில் Continue என்ற பட்டனை அழுத்தவும்.
  • உங்களின் அழைப்பு அந்த ஈமெயிலுக்கு செல்லும். அழைப்பின் மாதிரியை கீழே பாருங்கள். 
அவ்வளவு தான் உங்களின் வேலைமுடிந்தது இனி நீங்கள் Invite செய்த நபர் என்ன செய்யவேண்டும் என பார்க்கலாம்.

அட்மின் வசதியை பெறுபவர்களுக்கு:
  • அதில் உள்ள Accept என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு இன்னொரு பகுதி ஓபன் ஆகும் அதில் இதே ஐடியில் தொடரவேண்டுமா இல்லை வேறு ஏதேனும் ஈமெயில் ஐடியில் அட்மின் வசதி வேண்டுமா என கேட்கும் உங்கள் விருப்பப்படி தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும்.
  • Continue கொடுத்தவுடன் உங்களுக்கு அடுத்த பக்கம் ஓபன் ஆகும் அதில் உங்கள் User Id, Password கொடுத்து லாகின் செய்தால் போதும் அட்மின் வசதியை நீங்கள் பெற்று கொள்ளலாம். 
Note1: கூகுள் பிளஸ் பக்கத்தின் உரிமையாளர்(Owner) நினைத்தால் எந்த நேரத்திலும் இந்த அட்மின் வசதியை நீக்க முடியும்.
Note2: இந்த முறையில் அதிகபட்சமாக 50 நபர்கள் வரை அட்மின் வசதியை வழங்கலாம்.

TECHSHORTLY

இந்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Comments