மூன்றாம் ஆண்டில் வந்தேமாதரம் முன்னிட்டு வலைப்பூக்களுக்கு இலவச டொமைன்

எதுவுமே தெரியாமல் வலைப்பூ ஆரம்பித்து இரண்டாண்டுகளை கடந்து வந்துவிட்டது வந்தேமாதரம் தளம். தமிழில் தொழில்நுட்ப செய்திகளை வழங்கி வரும் வந்தேமாதரம் இணையதளம் இரண்டாம் ஆண்டை வெற்றிகரமாக முடித்து கொண்டு மூன்றாம் ஆண்டை தொடங்குகிறது. நம் குழந்தைக்கு  பிறந்தநாள் கொண்டாடினால் ஏற்ப்படும் சந்தோசமான தருணம் போல இதையும் உணர்கிறேன். இதற்க்கு பின் என்னுடைய உழைப்பு, நேரச் செலவு, பொருட்செலவு, மனக்கஷ்டம் ஆகியவை இருந்தாலும் அதில் என்னுடைய தளத்திற்காக செய்கிறோம் என்ற ஒரு சுயநலமும் உள்ளது. ஆனால் ஒரு லாப நோக்கமின்றி இரண்டாண்டுக்களுக்கு மேல் எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாசகர்களாகிய உங்களால் தான் இது முழுக்க முழுக்க சாத்தியமானது.
1300 கூகுள் பாலோயர்ஸ், 1500 ஈமெயில் வாசகர்கள், 950 பேஸ்புக் விரும்பிகள், அலேக்சாவில் #46,309 இப்படி அனைத்தும் உங்களால் தான் சாத்தியாமனது என்பதை சத்தியமாக கூறுகிறேன்.

இந்த இனிய தருணத்தை வந்தேமாதரம் தளம் வாசகர்களோடு இணைந்து கொண்டாட விரும்பிகிறது. ஆதலால் வாசக நண்பர்கள் பயன்பெறும் வகையில் வலைப்பூக்களுக்கு இலவசமாக டொமைன் வழங்கலாம் என தீர்மானித்துள்ளேன். எல்லோருக்குமே கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் விரலுக்கு ஏத்த வீக்கம் என்பதால் 5 நபர்களுக்கு இலவச டொமைன்(.in) வழங்கப்படும் என அறிவித்து கொள்கிறேன்.

போட்டிக்கான சில முக்கிய அம்சங்கள்:
  • நண்பர்களே உங்கள் வருகையை உறுதி செய்ய கீழே கருத்துரையில் உங்கள் தொடர்பு ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள். போட்டியில் பங்குபெற தகுதி காலம் ஒரு வாரமாகும். அதாவது (06-01-12) முதல் (13-01-12) மாலை 5 மணி வரை உங்கள் ஈமெயில் ஐடியை பதிவு செய்யலாம்.
  • போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மறுநாள்(14-01-12) அறிவிக்கப்படுவார்கள். வெற்றி அறிவிப்பு வந்தேமாதரம் தளத்திலும் வெற்றி பெற்றவர்களின் ஈமெயில் முகவரிக்கும் அனுப்பப்படும்.
  • போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எந்த பெயரில் டொமைன்(.in) வேண்டுமோ அதை admin@vandhemadharam.com என்ற முகவரிக்கு தெரிவித்தால் அவர்களுக்கு ஒரு வருடத்திற்கான இலவச டொமைன்(.in) வழங்கப்படும்.
  • டொமைன் பெயர் .in ஆகா தான் வழங்கப்படும். அல்லது அதே மதிப்புள்ள டொமைன் பெயர்கள் வெற்றியாளர் விருப்பப்படி வழங்கப்படும்.
  • டொமைன் பெயரோடு தொடர்புடைய ஐடி பாஸ்வேர்ட் அனைத்தும் வாசகர்களுக்கு கொடுக்கப்படும். 
  • வெற்றியாளர்கள் குலுக்கல் முறையிலோ அல்லது தானியங்கி மென்பொருள் மூலமாகவோ தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த சிறியவனின் அன்பு பரிசை வாசகர்கள் ஏற்றுகொள்ளும் படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.

சுமூக தளங்களில் பகிர்ந்து பதிவை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Comments