மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்

கூகுள் நவீன உலகில் மனித வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. நமக்கு தேவையான பல அறிய விஷயங்களையும் அறிந்து கொண்டு நம் அறிவை வளர்க்க உதவுகிறது என்பது நாம் அறிந்ததே. அதே சமயம் கூகுள் தேடியந்திரதினால் மனித மூலையில் ஞாபக சக்தியும், யோசிக்கும் திறனும் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சியான தகவல் Columbia University, Wisconsin-Madison University, Harvard University  உள்ள உளவியல் பேராசிரியர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.


இணையத்தில் ஏதோ ஒரு தகவலை கூகுளில் பார்த்து படித்து தகவலை அறிந்து கொள்கிறார்கள். அதே தகவல் மீண்டும் தேவை பட்டாலும் திரும்பவும் கூகுளுக்கு சென்று தான் தேடுகிறார்களே தவிர மாறாக முன்பு பார்த்ததை ஞாபகம் வைத்து கொள்வதோ அது என்ன தகவல் என யோசித்து பார்ப்பதோ இல்லை. கூகுளில் கொடுத்தால் நொடிப்பொழுதில் தகவலை அறிந்து கொள்ளலாம் அதற்க்கு என் யோசித்து நேரத்தை வீனடிக்கணும் என்ற மன நிலையில் தான் மக்கள் விரும்புவதில்லை. அதே சமயம் அவர்களின் மூளைக்கு எந்த வேலையும் கொடுப்பதில்லை ஆதலால் யோசிக்கும் திறந வெகுவாக பாதிக்கப்படுகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் மக்கள் ஒரு தகவல் சரியாக தெரிந்திருப்பினும் அதை மற்றவர்களிடத்தில் தைரியமாக கூறாமல் எதற்கும் கூகுளில் தேடி சரியா என பார்த்து கொள்ளலாம் என்று தான் பலபேரின் மனநிலை உள்ளதாம் இதனால் அவர்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

கூகுள் மட்டுமல்ல மனித வாழ்க்கையில் இயந்திரங்களின் பங்கு அதிகமாகி விட்டதால் மக்களின் மூளை சோம்பேறியாக மாறிவிட்டது என்பது என் கருத்து. சிறிய உதாரணம் சிறிய கணக்குகளுக்கும் கணினியையும், கால்குலேட்டரையும் தேடும் இன்றைய தலைமுறை சற்றே பின்னோக்கி நம் முந்தைய தலைமுறையை பாருங்கள் மனதிற்குள்ளேயே கணக்கு போட்டு ஒரே வினாடியில் பதிலை சொல்வார்கள். இது போல நிறைய உதாரணங்கள் இருக்கு. நம்மால் ஏன் அது முடியவில்லை நீங்களே சொல்லுங்க நண்பர்களே. 

Comments