Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பிளாக்கர் வலைபூக்களில் கூகுளின் அதிரடி மாற்றம் - அலெக்சா ரேங்க் காலி


கூகுள் வழங்கும் பிளாக்கர் தளத்தின் மூலம் வலைப்பூக்களை உருவாக்கி பயன்படுத்தி நம் அனுபவங்களையும், கருத்துக்களையும் வாசகர்களிடையே பகிந்து வருகிறோம். கூகுள் தனது சேவைகளில் அடிக்கடி ஏதாவது சில மாற்றங்களை செய்து வருவது இயல்பு. அந்த வகையில் பிளாக்கர் வலைபூக்களில் ஒரு அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இது வரை நம் பிளாக்கரின் வலைபூக்களின் URL .com முடியும் படி இருக்கும் ஆனால் இனி வலைப்பூக்களின் URL .in என முடியும் படி இருக்கும்.

உதாரணமாக 
முன்பு - www.vandhemadharam.blogspot.com
இப்பொழுது - www.vandhemadharam.blogspot.in

இந்த மாற்றத்தை பற்றி கூகுள் எந்த அறிக்கையையும் இது வரை வெளியிட வில்லை. ஆதலால் இந்த மாற்றங்கள் இந்திய வலைபூக்களில் மட்டும் தான் ஏற்ப்பட்டு இருக்கிறதா இல்லை மற்ற நாட்டினருக்கும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என எந்த தகவலும் இல்லை. 

இந்த மாற்றத்தினால் இதுவரை வலைப்பூக்கள் பெற்று இருந்த அலெக்சா மறைந்து விட்டது. பழைய படி ஒரு கோடியில் இருந்து ஆரம்பிக்கிறது. இது அனைவருக்கும் பெறும் ஏமாற்றத்தை அளித்து உள்ளது. குறிப்பாக அலேக்சாவில் முன்னணியில் இருந்த கேபிள் சங்கர், சிபி போன்றோரின் அலெக்சா ரேங்க் போய் விட்டது. ஆனால் வலைப்பூக்களுக்கு கஸ்டம் டொமைன் பயன்படுத்தி வந்த வலைப்பூக்களுக்கு எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கும் செய்தி.

பழைய முகவரியில் இருந்து புதிய முகவரிக்கும் தானாகவே redirect ஆவதால் நம் தளத்திற்கு வரும் வாசகர்கள் குறைய வாய்ப்பில்லை என்பதால் இரண்டு மாதங்களில் அலெக்சா ரேங்க் பழைய நிலைமைக்கு வந்துவிடும். மற்றும் பாலோயர்ஸ், Email subscriber வசதிகளிலும் எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை. பழைய படியே இருக்கும்.

Note: வெளிநாட்டு நண்பர்கள் வலைப்பூக்கள் எந்த URL முடிகிறது என கூறவும்.

டிஸ்கி: காலையில் மொபைலில் அழைத்து இந்த தகவலை தெரிவித்த தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு நன்றி.

UPDATE
இந்த மாற்றத்தினால் தமிழ்மண திரட்டியில் பதிவை இணைக்கும் வலைப்பூக்கள் மீண்டும் அப்ரூவல் வாங்க வேண்டும் இல்லையெண்றால் உங்கள் பதிவு இணையாது. இந்த லிங்கில் http://www.tamilmanam.net/user_blog_submission.php கிளிக் செய்து தமிழ்மண அப்ரூவலுக்கு பதிவு செய்யவும். 

இதில் ஒரே நாளில் பல விண்ணப்பங்கள் குவியும் என்பதால் தமிழ்மண நிர்வாகத்திற்கு பணிச்சுமையை அதிகரிக்கும். தமிழ்மண நிர்வாகம் நேரத்தை ஒதுக்கி இந்த பணியை துரிதமாக முடிக்கும் என நம்புவோம்.

-தகவலுக்கு நன்றி பலேபிரபு 

Sasi Kumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

50 comments :

 1. Yes. சொல்லாம கொள்ளாம மாத்திட்டாங்களே!

  ReplyDelete
 2. இதே மாதிரி பிரண்ட் கனெக்ட் பாலோயர்ஸ் (Followers) விட்ஜெட்டைத் தூக்கிட்டு கூகிள் பிளஸ் பேட்ஜ் வசதியை அதிகப்படுத்தப் போகிறார்கள் என்ற பேச்சும் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் பொன்மலர் friend connect சேவையை நிறுத்துவதாக நவம்பர் மாதமே அறிவித்து விட்டார்கள். பிப்ரவரி மாதத்தோடு முடிகிறது இந்த சேவை. http://googleblog.blogspot.in/2011/11/more-spring-cleaning-out-of-season.html

   Delete
 3. என்னுடையதும் மாறியிருக்கிறது சசி..

  பாளோயர்ஸ் விட்ஜெட் வரவில்லை அதற்கு ஏதாவது செய்ய வேண்டுமா..?

  ReplyDelete
 4. மாப்ள என்னோட ஓசி தளத்துல எந்த மாற்றமும் இல்லயே!

  ReplyDelete
  Replies
  1. அப்படியா இந்தியாவில் மட்டும் இந்த மாற்றமா.. இல்ல விரைவில் அனைவருக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்..

   Delete
 5. இன்று காலையில்தான் .in ஆக மாறிவிட்டிருப்பதைக் கவனித்தேன். எப்படியும் நீங்கள் இதுபற்றி பதிவிடுவீர்கள் எனக் காத்திருந்தேன்:)! தகவல்களுக்கு நன்றி.

  ReplyDelete
 6. என்னோட ஃபாலோவர்ஸ் விட்ஜெட்டையும் காணோம் ...!!!

  ReplyDelete
  Replies
  1. பாலோயர்ஸ் விட்ஜெட் எந்த பிரச்சினையும் இல்லையே சார்.

   Delete
  2. பாலோவர்ஸ் விட்ஜெட் இருந்த இடத்தில் இவ்வாறு வருகிறது We're sorry...This gadget is configured incorrectly. Webmaster hint: Please ensure that "Connect Settings - Home URL" matches the URL of this site. கொஞ்சம் சோதித்துப் பாருங்களேன் ...ப்ளீஸ் http://koodalbala.blogspot.in/2012/01/blog-post_30.html

   Delete
  3. சார் பாலோயர்ஸ் விட்ஜெட் friend connect மூலமாக வைத்து இருந்தீர்களா இல்லை... பிளாக்கர் தளத்தில் உள்ள follower விட்ஜெட் வைத்து இருந்தீர்களா?

   friend connect மூலமாக வைத்து இருந்தால் அதனை நீக்கி விட்டு மறுபடியும் விட்ஜெட்டை இணைக்கவும்.

   Delete
  4. சரி செய்துவிட்டேன் நன்றி அண்ணே...

   Delete
 7. இதுபத்தி எனக்கு எதுவும் தெரியல்லியே.

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. இப்பொழுது புரிந்து விட்டது ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ற மாதிரி பிளாக் URL Redirect ஆகுது. ஆனால் இதனால் அலேக்சாவில் பிரச்சினை வரும் என தோணுது... தகவலுக்கு நன்றி நிரூ

   Delete
 9. இதனால் தமிழ்மணம் திரட்டியை பயன்படுத்தும் நண்பர்களுக்கு பிரச்சினை. மீண்டும் புதிதாக ஆரம்பிக்க வேண்டும். ஆனால் அவர்கள் இப்போதெல்லாம் உடனடியாக புதிய உறுப்பினர்களை சேர்ப்பதில்லை.

  கற்போம்க்கு அனுப்பி இரண்டு மாதம் ஆகிவிட்டது. அநேகமாக இனி வேகமாக இருக்கலாம்.

  ReplyDelete
 10. சசி, நாம் எந்த நாட்டிலிருந்து பார்க்கிறோமே...அந்த நாட்டிற்கு ஏற்றாற் போல முகவரி redirect ஆகிறது என நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இல்லையே. எனது முகவரி இன்னும் .com ஆக தான் இருக்கு.

   Delete
 11. இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

  http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

  ReplyDelete
 12. Coming Soon...
  http://faceofchennai.blogspot.in/

  ReplyDelete
 13. உடனே பதிவிட்டமைக்கு நன்றி மாப்ளே.....

  ReplyDelete
 14. என்னுடைய வலைத்தளத்திலும் எந்த மாற்றமும் இது வரை தெரியவில்லை.

  ReplyDelete
 15. Replies
  1. துன்பம் வரும் வேளையிலும் சிரிங்க.....

   Delete
 16. Google Friend Connect மூலம் பாலோயர் விட்ஜெட் வைத்திருப்பவர்கள் http://www.google.com/friendconnect இங்கே சென்று Settings இல் புதிய முகவரியை மாற்றிக் கொண்டால் வேலை செய்யும்

  ReplyDelete
 17. இது நிச்சயம் பதிவர்களுக்கு கவலைதரும் செய்திதான்.பகிர்ந்தமைக்கு நன்றி பாஸ்

  ReplyDelete
 18. http://veeedu.blogspot.in/ என்னுடையது இப்படி மாறி விட்டது Followers Gadget வேலை செய்யவில்லை ஆனால் friend connect Follower Widget செட் செய்தேன் வேலை செய்கிறது நீங்க வேற நிறுத்துவதா சொல்றீங்க ஒன்றும் புரியலை Google 2012 ல் ஒவ்வென்றா தூக்கிறாங்க....பிளாக்கை தூக்கிட்டு வேற மாதிரி வைப்பதாகவும் பேச்சு இருக்கிறது Domain Name வாங்குவது நல்லது

  ReplyDelete
 19. இண்ட்லி பரிந்துரை பட்டியலிலும் நம்ம பிளாக் போய்விட்டது. மெயில் அனுப்ப வேண்டும்.

  ReplyDelete
 20. புதிய ட்ரிக் ஒன்று. இண்ட்லியில் பரிந்துரை பட்டியலில் இருப்பவர்கள் புதிய பதிவை சேர்க்க வலைப்பதிவிலிருந்தே இணைக்காமல் இண்ட்லி சென்று , .in இருக்கும் இடத்தில் .com போட்டு இணைக்கவும். புதிய பதிவும் சரியாக Redirect ஆகிறது. பரிந்துரை பட்டியலிலும் வந்து விடும்.

  ReplyDelete
 21. அடடா...சிபிதான் ரொம்ப வருத்தப்பட்டார்...ம்...சசி எப்பவும் உசார்தான்..நல்லவேளை சசி வாங்கும்போதே நானும் .காம் வாங்கிட்டேன்..!!!

  ReplyDelete
 22. சரியான நேரத்தில் மிக்கச்சரியான பதிவு சகோ, என் தளம் வந்ததும் பாலோயர் விட்ஜெட் இல்லாததை கண்டு அதிர்ந்தேன், எந்தனயோ தடவை முயற்சி செய்தும் கிடைக்கவில்லை, உங்கள் தளம் வந்து தான் ப்ளாகரி மாற்றத்தை அறிய முடிந்தது, மிக்க நன்றி உங்களுக்கும் சகோதரி பொன்மலருக்கும்....

  ReplyDelete
 23. அடடா..எல்லாம் போச்சே...!!! இந்த பிளாக்கையே ஒரு நாள் தூக்கமாட்டாங்கன்னு என்ன நிச்சயம்..? எதுவும் இனாம கிடைச்சா இப்படித்தான் மாப்ளே..! உஷார் படுத்தினதுக்கு நன்றி..!!

  ReplyDelete
 24. மனச திடப்படுத்திக்கிறத தவிர வேற வழி எதுவும் இல்ல.. திடீர்னு இப்படி சொல்லாம கொள்ளாம எப்படி இவங்க மாற்றம் செய்தாங்க? ஆறு மாசத்துக்கு முன்னாடி வரப்போகிற மாற்றத்தை சொல்றவங்க தானே கூகுள்! இந்த யூ.ஆர்.எல் மாற்றத்தை மட்டும் ஏன் இப்படி சொல்லாம கொள்ளாம செய்தாங்க.. இதுல ஏதோ சூட்சுமம் இருக்குன்னு நினைக்கிறேன்.. அது என்னன்னு பார்த்து கண்டுபிடிச்சு சொல்லுங்க மாப்ள.. எல்லோருக்கும் ஒரு ஆறுதலா இருக்கும். என்ன நான் சொல்றது??

  ReplyDelete
 25. ஒட்டுப்பட்டை வேலை செய்யவில்லை ! நண்பர்கள் தளத்தில் vote போட முடியவில்லை !

  ReplyDelete
 26. இந்திய தளங்களுக்கு மட்டுமே இவ்வசதி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.. இலங்கை தளங்களுக்கு இன்னும் அவ்வாறு மாறவில்லை...

  ReplyDelete
  Replies
  1. ஹெஹெஹெ சரியா பாருங்க http://ssharshan.blogspot.in

   Delete
 27. பேஸ் புக் மேல பொறாமை .....

  அதனால தான் கூகுள் இந்த ஆட்டம் போடுது ....

  என்ன ஆனாலும் பேஸ் புக் நெருங்க முடியாது

  ReplyDelete
 28. பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு நன்றி.என்னுடைய வலைத்தளத்திலும் எந்த மாற்றமும் இது வரை தெரியவில்லை.

  ReplyDelete
 29. உங்களுக்கு ஒரே ஜாலி தான்..எங்களுக்கு வடபோச்சே ...இன்னும் என்னால வரபோதோ தெரியல ...ஆனா ஒன்னு உங்களுக்கு வேலை அதிகமாச்சு .....அண்ணா

  ReplyDelete
 30. காலையில நான் 6 மணிக்கு பாத்தபோதே இருந்துச்சு ஆனா அத பத்தி நான் கேர் எடுத்துகல ஆனா இப்பதான தெரிது அதனுடைய விளைவு என்னனு ....

  ReplyDelete
 31. ஆமாம் சசி நானும் இப்பதான் பார்கிறேன் .காம் மை காணோம் .இன் வந்துள்ளது இனி இதனால் பிரச்சனையில்லையே!இருந்தால் என்னெவென்று சொல்லுங்க சசி. நாங்களும் சரிபண்ணிக்கொள்வோமல்லவா?

  ReplyDelete
 32. சசி,
  என்னுடைய வலைப்பதிவில்கைதுவரை எந்த டொமைன் மாற்றமும் வரவில்லை. பிந்தொடர்பவர் பட்டியல் எல்லாம் வேலை செய்யுது.இந்தியாவில் தான் இருக்கேன் ,ஒரு வேளை என்னை இந்தியனாக கூகிள் நினைக்கவில்லைய்யா :-)) மேலும் வளைகுடாவில் இருக்கும், ராஜநடராஜன், சிங்கையில் இருக்கும் கோவி கண்ணன் ஆகியோருக்கும் மாற்றமில்லை.

  .com க்கு பதில் .in வருவடு நல்லது தானே கூகிள் இந்திய செர்வர் மூலம் வலைப்பதிவை வழங்க ஆரம்பித்திருக்கிறது தானே. எனவே பதிவுகள் வேகமாக இனி திறக்கும் என நினைக்கிறேன்.

  // குறிப்பாக அலேக்சாவில் முன்னணியில் இருந்த கேபிள் சங்கர், சிபி போன்றோரின் அலெக்சா ரேங்க் போய் விட்டது. //

  கேபிள் தனி டொமைன் வைத்திருப்பவர் அவருக்கு எப்படி அலெக்சா ரேங் போக்கும். சிபி கூட தனி டொமைன் தான் என நினைக்கிறேன்.

  இந்தியா:
  //http://vovalpaarvai.blogspot.com/2012/01/blog-post_27.html//

  வளைகுடா:
  //http://parvaiyil.blogspot.com/2012/01/blog-post_25.html//

  சிங்கப்பூர்:
  //http://govikannan.blogspot.com/2012/02/blog-post.html//

  //

  ReplyDelete
  Replies
  1. சசி,

   மன்னிக்கவும், கேபிள், சிபி இருவரும் கூகிள் பிலாக் தான் வைத்திருக்கிறார்கள். எப்போவோ அவர்கள் தனி டொமைன் மாறியதாக பார்த்த நினைவில் சொல்லிவிட்டேன்.

   ஆனால் அவர்கள் பதிவு இன்னும் .காம் ஆக தானே இருக்கு.

   //http://cablesankar.blogspot.com/p/blog-page_02.html

   //http://adrasaka.blogspot.com/2012/02/25-25-25.html

   Delete
 33. தகவலுக்கு நன்றி..
  ஒரு வேளை பிளாகையும் தூக்க வாய்ப்பு இருப்பது தெரிகிறது!!
  விரைவில் தனி டொமைன் வாங்க முயற்சிக்கிறேன்!

  ReplyDelete
 34. தனி டொமைன் சீக்கிரம் வாங்க வேண்டியதுதான். வேற வழி இல்லை. அருமையான தகவல்கள். நன்றி சசி சார்.

  ReplyDelete
 35. Replies
  1. இந்த மாற்றத்தை பற்றி கூகுள் எந்த அறிக்கையையும் இது வரை வெளியிட வில்லை. ஆதலால் இந்த மாற்றங்கள் இந்திய வலைபூக்களில் மட்டும் தான் ஏற்ப்பட்டு இருக்கிறதா இல்லை மற்ற நாட்டினருக்கும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என எந்த தகவலும் இல்லை.

   இந்த மாற்றத்தினால் இதுவரை வலைப்பூக்கள் பெற்று இருந்த அலெக்சா மறைந்து விட்டது. பழைய படி ஒரு கோடியில் இருந்து ஆரம்பிக்கிறது. இது அனைவருக்கும் பெறும் ஏமாற்றத்தை அளித்து உள்ளது. குறிப்பாக அலேக்சாவில் முன்னணியில் இருந்த கேபிள் சங்கர், சிபி போன்றோரின் அலெக்சா ரேங்க் போய் விட்டது. ஆனால் வலைப்பூக்களுக்கு கஸ்டம் டொமைன் பயன்படுத்தி வந்த வலைப்பூக்களுக்கு எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கும் செய்தி.

   பழைய முகவரியில் இருந்து புதிய முகவரிக்கும் தானாகவே redirect ஆவதால் நம் தளத்திற்கு வரும் வாசகர்கள் குறைய வாய்ப்பில்லை என்பதால் இரண்டு மாதங்களில் அலெக்சா ரேங்க் பழைய நிலைமைக்கு வந்துவிடும். மற்றும் பாலோயர்ஸ், Email subscriber வசதிகளிலும் எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை. பழைய படியே இருக்கும்

   Delete
 36. நாம் .காம் என்று முகவரி கொடுத்து தேடினாலும் நம் வலைப்பூ தென்படுகிறதே!
  ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு இறுதி சுருக்கக் குறியீடு இருக்கும். அது தான் .இன் என்று நினைக்கிறேன். ca என்பது, தளமானது கனடாவில் இருக்கிறது என்பதைக் குறிக்கிறதல்லவா. இதைப் போலவே in என்பது இந்தியாவில் இருப்பதைக் குறிக்கிறது என்று நினைக்கிறேன்.

  ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press