Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பிளாக்கர் கமென்ட்டில் Reply வசதி கிடைக்காதவர்களுக்கு தீர்வு

வாசகர்கள் நெடுநாளாய் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த வசதியான Reply Comment வசதியை பிளாக்கர் தளம் அறிமுகபடுத்தியது. இதனை பற்றி விரிவாக நேற்றைய பதிவில் பார்த்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த Reply  வசதி பெரும்பாலான வலைபூக்களில் தெரியவில்லை. நேற்றைய பதிவில் உள்ள வழிமுறையை செய்தும் உங்கள் பிளாக்கரில் இந்த வசதி தெரிய வில்லையா ஆம் என்றால் உங்களுக்கான பதிவு இது தான். உங்கள் டெம்ப்ளேட்டில் சில கொடிங்க்ஸ் சேர்ப்பதன் மூலம் இந்த வசதியை கொண்டு வரலாம் அது எப்படி என கீழே பார்ப்போம்.


முதலில் இந்த லிங்கில் பிளாக்கரில் வந்தாச்சு Comment Reply வசதி ஆக்டிவேட் செய்யசென்று கொடுக்க பட்ட வழிமுறையின் படி உங்கள் வலைப்பூவில் செட்டிங்க்ஸ் மாற்றுங்கள்.

செட்டிங்க்ஸ் மாற்றியும் உங்கள் வலைப்பூவில் Reply வசதி வரவில்லை எனில் கீழே உள்ள வழிமுறையை தொடருங்கள்.
  • முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். Design - Edit Html சென்று உங்கள் டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 
  • அடுத்து Expand Widget Template தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்து கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடிக்கவும். (Ctrl+F கொடுத்து தேடினால் சுலபமாக கண்டறியலாம்)
<b:include data='post' name='post'/>
<b:if cond='data:blog.pageType == &quot;static_page&quot;'>
<b:include data='post' name='comments'/>
</b:if>
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<b:include data='post' name='comments'/>
</b:if>
மேலே சிவப்பு நிறத்தில் காட்டி இருக்கும் கோடிங்கை மட்டும் அழித்து கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து அந்த இடத்தில் பேஸ்ட் செய்யவும். கவனம் முதல் வரியை ஒன்றும் செய்ய கூடாது சிவப்பு நிறத்தில் உள்ள கோடிங்கை மட்டும் நீக்கவும்.
<b:if cond='data:blog.pageType == &quot;static_page&quot;'>
<b:if cond='data:post.showThreadedComments'>
<b:include data='post' name='threaded_comments'/>
<b:else/>
<b:include data='post' name='comments'/>
</b:if>
</b:if>
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<b:if cond='data:post.showThreadedComments'>
<b:include data='post' name='threaded_comments'/>
<b:else/>
<b:include data='post' name='comments'/>
</b:if>
</b:if>
  • மேலே உள்ள கோடிங்கை பேஸ்ட் செய்த பிறகு SAVE TEMPLATE கொடுத்து மாற்றத்தை சேமித்து கொள்ளுங்கள். 
இப்பொழுது உங்கள் வலைப்பூவை திறந்து கருத்து பகுதியை ஓபன் செய்து பாருங்கள் இந்த வசதி சேர்ந்திருப்பதை காணலாம்.

Source Code - www.way2blogging.org

// வலைப்பூக்களுக்கு இலவச டொமைன் //

வந்தேமாதரத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்கத்தை வாசகர்களுடன் கொண்டாடும் வகையில் 5 வலைப்பூக்களுக்கு இலவச டொமைன் வழங்கும் போட்டியில் பங்குபெற இன்றே கடைசி நாளாகும். இலவச டொமைன் வேண்டுவோர் கீழே உள்ள லிங்கில் சென்று கருத்துரை பகுதியில் உங்கள் ஈமெயில் ஐடியை பதிவு செய்யுங்கள்.


இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள சமூக தளங்களில் பகிந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

21 comments :

  1. நேற்று குறிப்பிட்ட பதிவு படி சேர்த்திருக்கிறேன்...

    அதன் பிறகு பதிவு போடவில்லை ... முந்தைய பதிவுக்கு இது பொருந்தாதா...

    நானும் இந்தை கோடிங்ககை சேர்க்க வேண்டுமா....

    ReplyDelete
    Replies
    1. நேற்றைய பதிவில் உள்ள வழிமுறையை செய்திருந்தும் வரவில்லை எனில் இந்த கோடிங்கை சேர்க்க வேண்டும். இது அனைத்து பதிவுகளுக்கும் பொருந்தும்.

      Delete
  2. மிகமிகப் பயனுள்ள பகிர்வு. செய்து பார்த்து விட்டேன். செயல்படுகிறது. நன்றி சசி ஸார்...

    ReplyDelete
  3. நன்றி மாப்ள.. நிறைய புதிய விஷயங்களாப் பிடிச்சுப் போடறீங்க.. இன்னொன்னு.. நீண்ட நாட்களுக்குப்புறம் சோர்ஸ் சைட்டையும் போட்டு கலக்கிட்டீங்க..!!! இனி யாரும் சசியை குறை சொல்ல முடியாது..!!!

    ReplyDelete
  4. வணக்கம் சசி..நேற்று செய்யும் போது மாற்றமில்லை..இன்று நீங்கள் சொன்னபடி செய்தேன்..கருத்துக்கு கீழே பதிலளி பொத்தான் வந்துவிட்டது..இந்த பதிவுக்கு நன்றி..

    ReplyDelete
  5. சூப்பர் அண்ணா...உங்களுக்கு பொங்கல் உண்டு ...

    ReplyDelete
  6. Arumaiyana Vasathi. But ithellam panna enakku time illa Sir!

    ReplyDelete
  7. நல்ல வசதி தான் ஆனால் தளம் முழவதும் load ஆகி அதிக நேரம் எடுக்கிறதே

    ReplyDelete
  8. அறிந்துகொண்டேன்.
    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. எனது தளத்தில் சரியாகிவிட்டது. நன்றி

    ReplyDelete
  11. எனது தளத்திலும் சரியாகிவிட்டது.
    ரொம்ப நன்றி.

    ReplyDelete
  12. இந்தப் பதிவை நீண்ட காலமாக எதிர் பார்த்தேன் . பிறர் பயன்பட நீங்கள் ஆற்றும் சேவைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  13. நல்ல பகிர்வு பயனடைந்து கொண்டேன் .... வாழ்த்துகிறேன் உங்கள் சேவை தொடர...

    ReplyDelete
  14. பகிர்வுக்கு நன்றி... நேற்றுதான் தாங்கள் கூறியபடி மாற்றினேன்.. நேற்று பார்க்கும்போது பின்னூட்டங்களின் பின்னனியில் நிறம் கொடுத்து தனித்து காணப்பட்டது. ஆனால் இன்று பின்னணி நிறம் ஏதும் காணப்படவில்லை. மேலும் பின்னூட்டங்களும் சாம்பல் நிறத்திற்கு மாறிவிட்டன. படிக்க முடியவில்லை. பழைய நிலையில் வைத்தால் நன்றாக படிக்கும் வகையில் உள்ளது.

    இது ஏன் என்று கூற முடியுமா?

    ReplyDelete
  15. நான் தங்களிடம் கேட்டதற்கு தீர்வு கண்டுவிட்டேன். நன்றி.

    ReplyDelete
  16. மிகவும் பயன்பட்ட தகவல்..
    (டெம்பிளேட் மாற்றத்தினால் காணாமல் போனது.. தற்போது மீண்டும் கொண்டு வந்தேன்)..
    நன்றி!

    ReplyDelete
  17. சசி சார்! இன்றுதான் (11.08.2012) இவ்வசதியை ஆக்ட்டிவேட் செய்தேன். மிக்க நன்றி.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press