கூகுள் தேடலில் புதிய வசதி அறிமுகம் - Search Plus

ஒட்டுமொத்த இணைய பயனர்களின் நாடித்துடிப்பு கூகுள் தேடியந்திரம். இணையத்தில் இருக்கும் தகவல்களை சல்லடை போட்டு சலித்து சரியான முடிவுகளை மட்டுமே வாசகர்களுக்கு கொடுப்பதால் தான் உலகளவில் இன்றும் கூகுள் தேடியந்திரம் முதல் இடத்தில் உள்ளது. கூகுள் நிறுவனம் அடிக்கடி ஏதாவது ஒரு புதிய வசதியை வாசகர்களுக்கு வழங்கி கொண்டே இருக்கும்.  வாசகர்களுக்கு தேடல் முடிவுகளை சிறப்பாக கொடுக்க இப்பொழுது Search+ என்ற புதிய வசதியை அறிமுகப் படுத்தியுள்ளது. இனி நீங்கள் கூகுளில் தேடும் பொழுது கூகுள் பிளசில் உங்கள் நண்பர்கள் Private ஆகவோ அல்லது Public-காகவோ பரிந்த தளங்களும் வரிசைப்படுத்தி காட்டும்.


  • இந்த வசதியை அறிய கூகுள் www.google.com தளத்திற்கு செல்லுங்கள். Redirect www.google.co.in என்ற தளத்திற்கு சென்றால் அந்த பக்கத்தில் கீழே பகுதியில் உள்ள Goto Google.com என்ற லிங்கை அழுத்தி www.google.com ஓபன் செய்து கொள்ளுங்கள்.
  • இப்பொழுது உங்களுக்கு தேவையான வார்த்தையை கொடுத்தவுடன் தேடல் முடிவுகள் கிடைக்கும். தேடல் முடிவு பகுதியில் ஒரு புதிய வசதி வந்திருப்பதை காண்பீர்கள். கீழே உள்ள படத்தை பாருங்கள். 

உங்களுக்கு வரும் தேடல் முடிவுகளில் இந்த ஐக்கான்  இருந்தால் அந்த பக்கங்களை உங்கள் கூகுள் பிளஸ் நண்பர்கள் பகிந்து உள்ளனர்.

மேலே படத்தில் காட்டி உள்ளதை போல தேடல் முடிவுகளில் உங்கள் கூகுள் பிளஸ் நண்பர்கள் பகிர்ந்த எண்ணிக்கையுடன் Personal results என்ற வாக்கியமும் சேர்ந்து இருப்பதை காணலாம். அந்த லிங்கில் கிளிக் செய்தால் முழுவதும் உங்கள் கூகுள் பிளஸ் நண்பர்கள் பகிர்ந்த முடிவுகளை மட்டும் தனியே பார்க்கலாம். 

மற்றும் இந்த ஐகான்களை அழுத்தி தேடல் முடிவுகளை விருப்பம் போல மாற்றி கொள்ளலாம்.  மேலும் அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.



இந்த வசதி கிடைக்காதவர்கள் கவலை பட வேண்டாம் இன்னும் ஓரிரு நாட்களில் அனைவருக்கும் வழங்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

மேலும் பல வசதிகளை கூகுள் பிளஸ் தள வளர்ச்சியின் நோக்கில் கூகுள் தளம் வெளியிட்டுள்ளது. அந்த வசதிகளை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

Comments